Advertisements

தற்கொலைக்கு தூண்டுவதாக நடிகர் ஜெய் மீது பகீர் புகார் – பரபரப்பு

தற்கொலைக்கு தூண்டுவதாக நடிகர் ஜெய் மீது தயாரிப்பாளர் பகீர் புகார் – பரபரப்பு

சினிஷ் (Sinish) இயக்கத்தில் ஜெய் (Jai), அஞ்சலி (Anjali), யோகி பாபு (Yogi Babu), ஜனனி (Janani) உள்ளிட்ட பலர் நடிப்பில்

வெளியாகியுள்ள படம் ‘பலூன்’ (Balloon). யுவன் (Uvan Shankar Raja) இசையமை த்துள்ள இப்படம் டிசம்பர் 29-ம் தேதி வெளியா னது. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக தயாரி ப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவி த்திருந்தார்கள்.

இந்நிலையில் இயக்குநர் சினிஷ் தான் மகிழ்ச்சியில் இல்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். மேலும், படக்குழுவினர் ஒருவர் மீது குற்றச்சாட்டு களை கூறியிருந்தார். யார்மீது இந்த குற்றச்சாட்டு என்று தெரியாமல் இருந்தது. தற்போ து நடிகர் ஜெய் மீது ‘பலூன்’ தயாரிப்பாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், தங்களுக்கு நஷ்டஈடு அளிக்க வேண்டும் என்றும் தயாரி ப்பாளர் சங்கத்திற்கு கடிதமொன்றை அனுப்பியிருக்கிறார்கள்.

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ‘பலூன்’ தயாரிப்பாளர்கள் எழுதி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; எங்களது ‘பலூன்’ திரைப்ப டம் கடந்த 2016 ஜூன் 6-ம் தேதி படப்பிடிப்பு துவங்கி டிசம்பர் 29, 2017 வெளியாகி தற்போது திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிற து. இப்படத்தை நாங்கள் 2017ஜனவரி மாதமே வெளியிட திட்டமி ட்டோம். ஆனால், அது முடியாமல் 9 மாதங்கள் கழித்து டிசம்பரில் வெளியாக முக்கி யமான காரணம் நடிகர் ஜெய்.

2016, ஜுன் மாதம் தொடங்கிய ‘பலூன்’ திரைப்படம், 2017 ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலை யில், ஜெய் படத்திற்காக தேதிகளை சரிவரகொடுக்காமலு ம், படப்பிடிப்பிற்கு வராமலும், சரியாக எங்களுக்கு ஒத்து ழைக்காமலும் இருந்ததால், படத்தின் ரிலீஸ் தேதி செப்ட ம்பருக்கு தள்ளிப்போனது. பின்னர் செப்டம்பர் ரிலீஸ்வேளையில் இருந்தபோது, டப்பிங்க்கு கூட அவர் வராமல் எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதால் எங்களால் ஒரு வருடம் கழித்து கடந்த 2017 டிசம்பர் மாதமே திரைக்கு வர முடிந்தது.

உழைப்பு, தொழில்மேல் அக்கறை, மரியாத, ஒழுக்கம், கொடு த்த வாக்கை கடைபிடிப்பது போன்ற அனைத்திற்கும் நேர் எதிரானவர் நடிகர் ஜெய். அவர் சூட்டிங்ஸ்பாட் முதல் டப்பிங் வரை கொடுத்த டார்ச்சரால் எங்கள் இயக்குநர் சினிஷ் கொடைக்கானலில் தற்கொலை (Suiside) முயற்சி செய்ய தூண்டும் மனநிலைக்கு தள்ளப்பட்டார். அதற்கு தயாரிப்பா ளர்களான நாங்களும் இதர கலைஞர்களும் சாட்சி.

ஜெய் கொடுத்த டார்ச்சரை மனதில் கொண்டு, எங்கள் மேல் இரக்கம் கொண்டு அனைத்து மற்ற நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் எங்களுடன் கடைசி வரை ஒத்துழைத்து, இந்த படம் வெளியாக உதவி செய்தனர். அவர்கள் அனைவ ருக்கும் நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

கொடைக்கானலில் நாங்கள் 20 நாட்கள் படப்பிடிப்பு செய்ய திட்டமிட்டு அதற்காக பல லட்சம் வரை செலவு செய்து, அர ங்குகள் அமைத்து, ஜெய் வருவார் என ஒரு மாதம் வரையிலும் காத்திருந்தோம். ஆனால் அவரை போனிலோ, நேரிலோ எங்களால் தொடர்பு கொள்ளவே முடியவி ல்லை.

ஒருவழியாக பின்னர் செப்டம்பர் 26,2016 அன்று படப்பிடிப்பிற்கு வந்தார். ஆனால், அக்டோபர் 5,2016 அன்றே நடிகை அஞ்சலி அவ ர்களுக்கு வலிப்பு வந்து உயிருக்கே ஆபத்து என்று கூறிவிட்டு விடி யற்காலையிலேயே சென்றுவிட்டார். பிறகு விசாரிக்கையில் தான் தெரிந்தது அஞ்சலி அவர்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்று, அஞ்சலி அவர்களுக்கே தெரியாமல் ஜெய் கூறிய பொய் அது. அந்த சம்பவத்திற்கு அஞ்சலி அவர்களுக்கும் எந்தவித சம்ப ந்தமும் இல்லை என்பது பின்னர் தான் எங்களுக்கு தெரிய வந்தது. அவர் அப்படி படப்பிடிப்பை தொடராமல் விட்டு செ ன்றதால் எங்களால் படப்பிடிப்பை தொடரமுடியாமல் பல லட்சம் வரை நஷ்டம் ஆனது.

படப்பிடிப்பின் போது, தினமும் குடித்துவிட்டு தான் படப்பிடி ப்புக்கே வருவார். வந்த தும் ‘எப்போ பேக்கப் ஆகும்’. எப்போ மீண்டும் ஹோட்டல் ரூம் சென்று குடிக்கலாம் என்ற எண்ணத்திலேயே இருந்து, நடிப்பில் சரியாக கவனம் செலு த்தாமல், ஒரு வகையான மெத்தனப்போக்குடன் நடந்து கொள்வார். ஒவ்வொரு முறையும் கேரவனில் இருந்து வெளியே வர 1 மணி நேரத்திற்கு மேலாகும். 8 மணி நேரம் சூட்டிங் செய்ய திட்டமி ட்டால், இவரை வைத்து 4 மணி நேரம் சூட்டிங் செய்வதே பெரிய போராட்டமாய் சென்று முடியும். அவர் வசதிக்கு எவ்வித குறைகளும் இல்லாமல் பார்த்துகொண்ட எங்களு க்கு அவர் மிகுந்த மன உளைச்சலையும், பொருட் நஷ்ட த்தையும் மட்டுமே ஏற்படுத்தினார்.

அவரின் இந்த தவறான நடவடிக்கையை நாங்களும் படத்தின் இயக்குநர் சினிஷ்-ம் சுட்டிக்காட்டினோம். அதில் கோபம் அடைந்து, அந்த காழ்ப்பு ணர்ச்சியை மனதில் கொண்டு தான், அஞ்சலிக்கு உடம்பு சரியி ல்லை என்று நாடக ஆடி கொடைக்கானலில் இருந்து மிச்ச பட ப்பிடிப்பை முடித்து கொடுக்காமல் வெளியேறினார். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. அதை எங்கு வேண்டுமானா லும் சமர்பிக்க தயாராக உள்ளோம்.

இதனால் எங்களுக்கு 30 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டது, போ ட்டிருந்த செட் அனை த்தும் மழையில் நனைந்து, நாசமாகி அதற்கு ரிப்பேர் செய்ய ஏற்பட்ட செலவு மட்டுமே 10 லட்சம் ஆனது. அதற்கான ஆதார ங்களையும் நாங்கள் சமர்பிக்க தயார். மிகுந்த மன உளைச்ச லை ஏற்படுத்தி அவர் ஏற்படுத்திய பொருட்செலவினால், எங்க ளால் சொன்ன தேதியை தாண்டியே சூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை நடத்த முடிந்தது. இறுதியாக நா ங்கள் வாங்கிய கடன், அதற்கான வட்டி, என மொத்தமாக ரூ.150 கோடி அதிகமாக வே இவரால் செலவானது. அதனால் தெலுங்கிலும் எங்களா சொ ன்ன தேதியில் படத்தை வெளியிடமுடியவில்லை. தெலுங்கு விநி யோகஸ்தர்களிடம் நான் நஷ்டஈடு தரும் சூழ்நிலைக்கு தள்ளப்ப ட்டிருக்கிறேன்

எனக்கு ஏற்பட்ட அனைத்து நஷ்டமும், நடிகர் ஜெய் அவர்களாலே யே ஏற்பட்டது. பட த்தின் பட்ஜெட்டை இழுத்துவிட்டு எங்களை அவ திக்குள்ளாக்கியதும் அவர் தான். அதற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. எங்களுடன் பணிபுரிந்த சக நடிகர்கள் மற்றும் கேமிராமேன், டைரக்டர் உள்பட அனைத்து பணியார்களுக்கும் இது தெரியும்.

அவரால் ஏற்பட்ட இந்த பண நஷ்டம் ரூ.1.50 கோடியை, நடிகர் ஜெய் உடனடியாக எங்களுக்கு செட்டில் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொள்கிறோம். தயாரிப்பாளர் சங்கம் இதி ல் எங்களுக்காக குரல் கொடுத்து உதவுமென முழு நம்பிக்கை யுடன், தங்களது உதவியை நாடுகிறோம். நடிகர் ஜெய் போன்ற சில நடிகர்கள் உண்மையான சினிமா தொழிலை நேசித்து படத்தயாரிப்பில் ஈடுப ட்டு வரும் தயாரி ப்பாளர்களை தொடர்ந்து காவு வாங்கி கொண்டே வருவது, மனதிற்கு வேதனையாக உள்ளது. மற்றுமொறு அசோக்கு மாராக எங்களை இந்த துறை உருவாக்கிவிடும் சூழலு க்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம்.

பின்குறிப்பு:

இந்த பிரச்சினைக்கு தீர்வுகண்ட பின்னரே, நடிகர் ஜெய் மற்ற படப்பிடி ப்பில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கி றோம். இது எங்களைப்போல் தற்போது அவரை வைத்துபடம் தயாரித்துகொண்டிரு க்கும் அனைத்து சக தயாரிப்பாளர்கள் நன்மையும் கருதி வைக்கும் வேண்டுகோள். இவ்வாறு அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இக்கடித த்தின் மூலம் ‘பலூன்’ இயக்குநரும் ஜெய்மீதுதான் குற்றச்சாட்டுகளை கூறியிருப்ப து நிரூபணமாகியுள்ளது.

=> இந்து நிருபர்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: