Advertisements

முத்தலாக் செல்லாது -பாராளுமன்றத்தில் எதிர்ப்பைமீறி மசோதா நிறைவேற்ற‍ம் -பெண்கள் மகிழ்ச்சி

முத்தலாக் செல்லாது -பாராளுமன்றத்தில் எதிர்ப்பைமீறி மசோதா நிறைவேற்ற‍ம் -பெண்கள் மகிழ்ச்சி (Triple Talaq illegal Lok Sabha passes bill today)

ஒரே நேரத்தில் மூன்றுமுறை தலாக் (Three Times Talaq) கூறி விவாகரத்து (Divorce) செய்யும் முறைக்கு

முற்றுப்புள்ளி வைக்கும் ‘முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகா ப்பு மசோதா (Muslim Women’s Wedding Protection Bill)’ மக்கள வையில் இன்று குரல் வாக்கெடுப்பின் (voice vote) மூலம் நிறை வேறியது. முன்ன‍தாக இந்த‌ மசோதாவை பாராளுமன்ற மக்கள வையில் மத்திய சட்டமந்திரி (Central Law Minister) ரவிஷங்கர் பிரசாத் (Ravi Shankar Prasad defends the Triple Talaq Bill) தாக்கல் செய்தார்.
 
இந்த மசோதாவில் உள்ள கிரிமினல் (Criminal) சட்டப்பிரிவுகளை நீக்கம் செய்ய வேண்டும் என இம்மசோதா மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. (Congress MP) தெரிவித்தார். இதனை தொடர்ந்து, அ.தி.மு.க. (A.D.M.K.) சார்பில் பேசிய அன்வர் ராஜா (Anwar Raja), இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து இந்த மசோதாவை மிகக்கடுமையாக எதிர்த்து பேசிய ஐதராபாத் எம்.பி (Hyerabad M.P.) ஓவைசி, இந்த மசோதா (Bill) அடிப்படை உரிமைகளை (Fundamental Rights)  மீறுகிறது மற்றும் முறையான சட்ட இணக்கம் இதில் இல்லை என்பதால் திரும்ப பெற வேண்டும் என்று கூறினார்.
 
உறுப்பினர்களுக்கு பதிலளித்துபேசிய ரவிஷங்கர்பிரசாத் “பெண்க ளின் உரிமைகள் (Women’s Rights) மற்றும் நீதியை பாதுகாக்கவே, இம்மசோதா இதில் மதத்திற்கு தொடர்பில்லை” என கூறினார்.  இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட புதிய மசோதாவுக்கு அனைத்திந்திய இஸ்லாமிய பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் (Islamic Women’s Individual Law Board) வரவேற்பு தெரிவி த்துள்ளது.
 
இந்நிலையில், இம்மசோதாமீதான விவாதங்கள் இன்று இரவு சுமார் 7.30 மணி வரை நீடித்தது. இந்த மசோதாவில் உள்ள சில அம்சங்க ளில் மாற்றம் செய்ய வேண்டும் என சில உறுப்பினர்கள் விவாதத்தி ல் ஈடுபட்டனர். இந்த கோரிக்கை குரல் வாக்கெடுப்பால் நிராகரிக்க ப்பட்டது.
 
இதைதொடர்ந்து பெரும்பாலான உறுப்பினர்களின் ஆத ரவுடன் இந்த மசோதா இன்று மக்களவையில் நிறை வேற்றப்பட்டது. இதன் பின்னர் பாராளுமன்ற மேல்ச பையில் இந்த மசோதா நிறைவேற்ற பின்னர் ஜனாதிப தியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் (President Ramnath Govind)  கையொப்பமிட்ட பின்னர் இந்த மசோதா சட்ட வடிவம் பெறும்.
 
=> செய்தி, மாலை மலர்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: