Advertisements

வளையல் அணியும் இளம்பெண்கள் கவனிக்க வேண்டிய முக்கிய‌ விஷயங்கள்

வளையல் அணியும் இளம்பெண்கள் கவனிக்க வேண்டிய முக்கிய‌ விஷயங்கள்

பச்சிளம் குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை அனைத்து வயது பெண்களின்

கரங்களையும் அழகாக்கும் ஆபரணம் (Ornaments), வளையல்கள் (Bangles). கடைவீதிகள், திருவிழாக்களுக்கு செல்லும் பெண்கள் அங்கு வண்ண நிறங்கள், டிசைன்களில் குவிந்து கிடக்கும் வளையல்களை வாங்காமல் வீடு திரும்ப மாட்டார்கள். வளையல்கள் நமது கலாசாரத்து டன் பின்னிப் பிணைந்தவை. பல நூற்றாண்டுகளுக்குமுன்பு வாழ்ந்த பெண்கள் வளையல் அணிந்திருக்கிறார்கள் என்பது அகழ்வாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அேத நேரத்தில் இன்றைய காலகட்டத்தில் பேஷன் உலக புதுமைக்கு ஈடுகொடுக்க வளையல்கள் புதியரக டிசைன்களில் மின்ன தொடங்கி இருக்கின்றன.

வளையல் அணிவதிலும் கவனிக்கவேண்டிய விஷயங்கள் இருக்கின்றன . ஸ்டைலுக்காக ஒரேஒரு வளையல் மட்டும் அணிவது, ஒரேஒரு கை யில் மட்டும் வளையல் அணிவது போன்றவை கூடாதாம். வளையல்க ளை தளர்வாக அணிவதும் கூடாது. ஆனால் சிறிய அளவுகளில் இருந்து பெரிய அள வுகள் வரை அடுக்கடுக்காக அணியலாம். வளையல்கள் கைகளில் ஒட்டி இதமாக வருடிக்கொண்டிருக்கவேண்டும். வளைகாப்பில் கண்ணாடி வளையல்களை அணிவார்கள். அதன் ஓசை தாய்க்கும், வயிற்றில் இரு க்கும் சிசுவுக்கும் சந்தோஷத்தை கொடுக்கும். மன அழுத்தத்தை குறை க்கும். கைகள் அசைவின்போது வளையல்கள் எழுப்பும் ஓசை குழந்தைக்கு கேட்டு க்கொண்டே இருக்கும். அது அதன் மூளையை சுறுசுறுப்படைய செய்யு ம். கேட்கும் திறனை அதிகப்படுத்தும். தாய்-சேய் இடையே நெருக்கமா ன பந்தத்தையும் ஏற்படுத்தும்.

உடுத்தும் ஆடை ரகங்களுக்கு ஏற்ப பொருத்தமான வளையல்களை பெண்கள் தேர்ந்தெடுத்து அணிகிறார்கள். புடவை உடுத்தும்போது கை நிறைய வளையல்களை அடுக்கலாம். ஆடைகளில் இடம்பெறும் டிசை ன்களுக்கு இணையான, அலங்கார வேலைப்பாடுகளையும் தேர்ந்தெ டுத்து பயன்படுத்தலாம். அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பட்டுச்சேலைக்கு கற்கள்பதித்த வளையல்கள் கூடுதல் அழகு சேர்க்கும். விசேஷ நிக ழ்ச்சிகளுக்கு செல்லும்போது ஜொலிக்கும் வளையல்களை அணி ந்தால் எடுப்பாக இருக்கும். உயரமான பெண்கள் மெல்லிய வளைய ல்களை அணிய வேண்டும். குட்டையான பெண்களுக்கு பட்டையான வளையல்கள் பொருத்தமாக இருக்கும்.

கண்ணாடி வளையல்களில் ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு விதத்தில் மகத்துவம் கொண்டவை. மஞ்சள் நிறம் மகிழ்ச்சியை தரும், நல்ல எண்ணங்களை விதைக்கும், மங்கலம் சேர்க்கும். பச்சை நிறம் மனதை சாந்தப்படுத்தும், அதிர்ஷ்டம் தேடி தரும். ஊதா நிறம் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றலை அதிகப்படுத்தும். சிவப்பு நிறம் எதையும் எதிர்கொள்ளும் சக்தி யை கொடுக்கும். ஆரஞ்சு நிறம் வெற்றியை தேடித்தரும். வெள்ளை நிறம் இனிய தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுக்கும். கருப்பு நிறம் மன தைரியத்தை அதிக ரிக்கும். பச்சை மற்றும் சிவப்பு நிற வளைய ல்கள் சுப நிகழ்ச்சிகளில் அதிகம் இடம் பிடித்து உற்சாகத்தை வரவழைக்கும்.

கண்ணாடி வளையல்களில் இருந்து வெளிப்படும் ஓசை எதிர்மறையான எண்ண ங்களை விரட்டியடிக்க உதவும். மனதை தெளிவடைய செய்யும். மூளையின் செயல்பாடுகளை சுறுசுறுப்பாக்கும். ரத்த ஓட்டத்தையும் இதய துடிப்பையும் சீராக வை த்திருக்க உதவும். வளையல்கள் பெண்க ளின் மனவலிமையையும் அதிகரிக்கும். வயதான பெண்கள் நோய் நொடியின்றி ஆ ரோக்கியமாக நீண்டநாட்கள் வாழ்ந்ததற்கும், வளையலுக்கும் தொடர்பு இருக்கிறது. வளையல் அணிவது உடல் வலிமையை மேம்படுத்துவ தோடு அவர்களை நோய் தாக்கங்களில் இருந்தும் பாதுகாத்திருக்கிறது.

ஆன்மிக ரீதியாகவும் கண்ணாடி வளையல் மகத்துவம் பெற்றிருக்கிற து. கண்ணாடி வளையல்களில் இருந்து வெளிப்படும் ஓசை, தீய சக்திகளை விரட்டி அடித்து தேவியின் அருள் கிடைக்க செய்யும் என்ற நம்பிக்கை இருக்கி றது. கெட்ட சக்திகளில் இருந்து பெண்களை காக்கும், திருஷ்டியை போ க்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. வளையல் அணியும் பெண்களின் கணவரின் ஆயுள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. உத்தர ப்பிரதேசத்தில் திருமணத்தின்போது மணப்பெண் சிவப்பு வண்ண புடவை யும் கண்ணாடி வளையலும் அணிவது மங்களகரமான சடங்காக பின்பற்ற ப்படுகிறது. கண்ணாடி வளையல்கள் உடைந்திருந்தாலோ, கீறல் விழுந்தி ருந்தாலோ அதை அணியக்கூடாது என்பது மரபு.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

 பெண்கள் விரும்பும் கல.. கல.. கண்ணாடி வளையல்..
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: