Advertisements

ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுக்க‍ப்பட்ட‍ வீடியோ

ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுக்க‍ப்பட்ட‍ வீடியோ – (Jayalalitha treatment Video in Apollo)

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயல லிதா, சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட

வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் எம்.எல்.ஏ., வெளியிட்டார். 20 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி அணிந்தபடி பழச்சாறு அருந்துவது போல் காட்சிகள் உள்ளன.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெய லலிதா கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக் குறைவு காரண மாக சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக முதலில் கூறி வந்த மருத்துவமனை நிர்வாகம், பின்னர் உடல்நிலை மோசமானதாக கூறிய து. தொடர்ந்து தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

ஆனால், பல்வேறு தரப்பினரும் அவரது மரணம் தொடர்பாக சந்தேகங்களை எழு ப்பினர். குறிப்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த ஆதாரம் எதுவும் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. ஆனால், தங்களிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாக டிடிவி தினகரன் தரப்பு கூறி வந்தது.

தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை டிடிவி தினகரன் ஆதர வாளரான வெற்றிவேல் வெளியிட்டார். அந்த வீடியோவில் ஜெயலலிதா பழச்சாறு அருந்துவதுபோல் உள்ளது. ஆனால் அவர் உடல் உறுப்புக்கள் அசைவற்று இருக்கி றது.

வீடியோவை வெளியிட்ட வெற்றிவேலிடம் செய்தியாளர்கள் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.

அப்போது அவர், “ஜெயலலிதா மரணத்தைக் குறித்து பல்வேறு சந்தேகங்களை தொ டர்ந்து எழுப்பி வருகின்றனர். அவர் உயிருடன் இருந்தபோது அவர் முன்னால் நிற்கவே பயந்தவர்கள் இப்போது பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர். ஜெயல லிதாவுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகக் கூறி அவதூறு பரப்பி வருகின்றனர்.

அம்மா இப்படி ஒரு சூழலில் இருந்தபோது எடுத்த வீடியோவை வெளியிட எங்களு க்கு விருப்பமில்லைதான். ஆனால், தொடர்ந்து பரப்பப்படும் அவதூறுகளை எங்க ளால் பொறுக்க முடியாமல்தான் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளோம். அம்மா வின் தோழி வி.கே.சசிகலாதான் இந்த வீடியோவை எடுத்தார்.

இந்த வீடியோவை இப்போது வெளியிட தேர்தல் அரசியல் காரணம் அல்ல. விசார ணை ஆணையம் எங்களை விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைப்பு தருவோம் என ஏற்கெனவே கூறியிருந்தோம். எங்களை அழைக்கவில்லை .அதனால் நாங்கள் அங்கே எதையும் ஒப்படைக்க வாய்ப்பில்லை.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது நான் ஒருநாள்கூட உள்ளே சென்றதில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி, உதயகுமார், ஜெயகுமார், ஓபிஎஸ், விஜயபாஸ்கர் ஆகியோர் உள்ளே சென்றனர். மேல்சிகிச்சைக்கு ஜெ.வை எங்கு அழைத்துச்செல்லலாம் என அமைச்சர்கள் ஆலோசித்த வீடியோவும்உள்ளது. ஜெயலலிதாவை கொச்சைப்படுத்த யார் முயற்சித்தாலும் நாங்கள் விடமா ட்டோம். இந்த வீடியோ போன்று பல ஆதரங்கள் தங்களிடம் உள்ளது; தேவைப்பட்டால் வெளியிடுவோம்” என்றார்.

இந்நிலையில் இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள‍ நிலையில் ஜெயலலிதா சிகிச்சை குறித்த வீடியோவை வெளியிட்ட‍ தினகரன் ஆதரவு எம்.எம்.ஏ வெற்றி வேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட இருப்ப‍தாக தகவல் வெளியாகியுள்ள‍து.

ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுக்க‍ப்பட்ட‍ வீடியோ –

(Jayalalithaa treatment Video in Apollo)

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: