Advertisements

க‌ணவன் மனைவி பந்தத்தை சிதைக்கும் உறவுகளின் தேவையற்ற‍ தலையீடு – ஓரவசிய அலசல்

 

க‌ணவன் மனைவி பந்தத்தை சிதைக்கும் உறவுகளின் தேவையற்ற‍ தலையீடு – ஓரவசிய அலசல்

புதிதாக திருமணமான தம்பதிகள் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்ள

வேண்டும். அதற்கு போதுமான கால அவகாசம் அவசியம். அவர்களு க்குள் உறவுகளை பற்றிய புரிதலும் இருக்க வேண்டும். குறிப்பாக புகுந்த வீட்டி ற்குள் அடியெடுத்து வைக்கும் பெண், கணவர் வீட்டாரின் உறவுகளை பற்றி நன்கு தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு உரிய மரியா தையை கொடுக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் ‘புது ப்பெண் நம்மை மதிக்க வேண்டும். நம்முடைய ஆலோசனைக்கு செவி சாய்த்து நடக்க வேண்டும்’ என்று எதிர்பார்ப்பார்கள்.

அதேவேளையில் உறவுகளின் தலையீடு எந்த அளவுக்கு இருக்க லாம் என்ற வரை யறை இருக்கிறது. பெரும்பாலான குடும்பங்க ளில் உறவுக ளின் தலையீடு புதுமணத் தம்பதிகளின் வாழ்க்கையை பலகீனமாக்கி விடுகிறது. தலையீடுகளையும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் காண்போம்.

புதுப்பெண் வீட்டாரின் தலையீடு :

திருமணமாகி புகுந்த வீடு சென்றிருக்கும் மகள், அங்கு எப்படி தாக்குப்பிடி ப்பாளோ என்ற கவலை அவளது பெற்றோருக்கு இருக்கத்தான் செய்யும். திருமணத்திற்கு முன்பு மகளின் வாழ்க்கையில் அவர்கள் பல்வேறு வித மாக தலையிட்டிருக்கலாம். அவளின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்காணித்து வழிநடத்தியிருக்கலாம். ஆனால் திருமணத்திற்கு பிறகு மக ளின் வாழ்க்கையில் அதிக உரிமை எடுத்துக்கொள்ளக்கூடாது. புதுமணத் தம்பதி க்குள் எத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சற்று விலகி இருந்தே கவனிக்க வேண்டும்.

அந்த மாதிரியான நேரங்களில் ‘சொந்த மகளின் வாழ்க்கையில் நட க்கும் பிரச்சினைகளை கண்டும், காணாமல் இருக்க முடியுமா?’ என்ற கேள்வியை எழுப்பாமல், ‘எதையும் சமாளித்துக்கொள்ள அவளுக்கு தெரியும்’ என்று மகள்மீது நம்பிக்கை கொள்ளவேண்டும். அதை விடு த்து சின்னச்சின்ன விஷயங்களில் எல்லாம் மூக்கை நுழைத்தால் உங்களால் அவ ர்களிடையே ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் விஸ்வரூ பம் எடுத்துவிடும்.

சில பிரச்சினைகள் தீர்க்க முடியாததாகவும் ஆகிவிடும். அதனால் முடிந்த அளவு மணப்பெண் வீட்டார், தங்கள் மகளின் வாழ்க்கையில் தலையிடா மல் இருப்பது நல்லது. தலையிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஒரு தரப்பிற்காக வாதிடாமல், இருவரிடமும் இணக்கமான சூழ்நிலையை உரு வாக்கி, அவர்களை அதற்காக கற்றிருக்கும் ஆலோசகர்களிடம் அனுப்பி, தேவை யான ஆலோசனைகளை பெற ச்செய்யவேண்டும்.

கணவன்- மனைவி இடையே மனக்கசப்பும், பிரிவும் ஏற்படுவதற்கு முன்னால் அதை செய்ய வேண்டும். ஒருவர் மீது இன்னொருவர் அவ நம்பிக்கை கொள்ளும் சூழ்நிலையை ஒருபோதும் உருவாக்கிவிடக்கூடாது.

மாப்பிள்ளை வீட்டாரின் தலையீடு:

மாப்பிள்ளை வீட்டாரும், மகனின் வாழ்க்கையில் தலையிடவி ல்லை என்று மே ம்போக்காக கூறிக்கொண்டு மறைமுகமாக பிர ச்சினைகள் உருவாக காரணமாக இருக்கக்கூடாது. உறவினர்க ள், வெளிமனிதர்கள் மத்தியில் மகன், மருமகளை பற்றி விமர்சிப்பதும், அரசல்புரச லாக பேசுவதும் தலையீடு தான். நேரடியாக தலையிடுவதைவிட இதுபோன்ற செய ல்கள் அதிக பாதிப்பை உண்டாக்கும்.

புகுந்த வீட்டிற்கு வந்திருக்கும் பெண்ணால் உடனடியாக அவளு டைய பழக்க வழ க்கங்களை மாப்பிள்ளை வீட்டாரின் சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியாது. குடும்பத்தில் உள்ள அனைவ ரையும் அனுசரித்துசெல்லும் பக்குவம் அவளுக்கு வந்துவிடும் என்றும் எதிர்பார்க்க க்கூடாது. அதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும். அது வரை பொறுத்திருக்க வேண்டும். எதிர்பார்த்த மாற்றங்கள் புது ப்பெண்ணிடம் ஏற்படாதபோது மனம்விட்டுப்பேசி புரியவைக்க வேண்டும். அதற்குரிய பக்குவம் அனுபவப்பட்ட மாமனார், மாமி யாரிடமே இல்லாமல் போனால் அதை மருமகளிடம் எதிர்பார்ப்ப து தவறு.

நாத்தனார் தலையீடு:

பெரும்பாலான குடும்பங்களில் அதிக பிரச்சினைகள் உருவா குவதற்கு கணவரின் சகோதரிகளின் தலையீடும் ஒரு காரண மாக இருக்கிறது. போதிய அனுபவமும், பக்குவமும் இல்லாத வர்களாக இருந்தால் அவர்களின் தலையீடு பலவித சிக்கல்க ளை உருவாக்கும். கூடுமானவரை சகோதர பாசம் என்ற அக்க றையின் பேரில் அதீத தலையீடு இருப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

நாத்தனாரின் தலையீடு தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்குவதற்கு வழிவகுப்பதாக இருந்தால், உடனே பெரிய வர்கள் தலையிட்டு அதற்கு புற்றுப்புள்ளி வைத்துவிடவே ண்டும். தவறான அனுமானங்கள், தவறான புரிதல்கள் கார ணமாக புதிதாக வீட்டுக்கு வந்த பெண்ணை, நாத்தனார்கள் மரியாதை குறைவாக நடத்துவது நல்லதில்லை. தன் சகோதரரின் மனைவியிடம் எல்லைமீறி பேசுவது, அவளுடைய செயல்பாடுகளை விமர்ச்சி ப்பது, மரியாதையின்றி நடத்துவது இதை யெல்லாம் யாரும், எப்போதும் அனுமதிக்கக்கூடாது. புதுப்பெண்ணுக்கு தேவையா ன எல்லா மரியாதைகளையும் புகுந்த வீட்டில் உள்ள அனைவ ரும் கொடுத்தே ஆக வேண்டும்.

ஜாதி, மத தலையீடு:

காதல் திருமணங்கள் இப்போது நிறைய நடக்கின்றன. அதிலும் ஜாதி, மதங்களை கடந்தும் பலர் திருமணம் செய்துகொள்கிறார்கள். அது வர வேற்கத்தகுந்தது. ஆனால் பல குடும்பங்களில் அது பிரச்சினைக்குரிய தாக இருக்கிறது.

ஒவ்வொருவரிடமும் அவரவர் மதத்தை பற்றிய பெருமையும், நம்பிக்கையும் இரு க்கும். ஆனால் அதை அடுத்தவர் மீது திணிக்கக்கூடாது. வீட்டிற்கு வரும் மருமகள் வேற்று மதத்தை சார்ந்தவராக இருந்தால் அவள் விருப்பப்படி விட்டுக் கொடுத்து செல்வதுதான் குடும்ப அமைதிக்கு நல்லது. பாரம்பரியத்தோடு வளர்ந்த நம்பிக்கை சார்ந்த விஷயத்தை திடீரென்று மாற்றிவிட முடியாது.

அது கலாசார அதிர்ச்சியை கொடுக்கும். பின்பு அதை தொடர்ந்து வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு அது மூலகாரணமாகிவிடும். அவரவர் மத த்தின்மீது அவரவருக்கு ஏற்படும் நம்பிக்கையை மாற்ற முடியாது. உயி ரோடும், உணர்வோடும் ஒன்றி ப்போன விஷயத்தை பாதியில் மாற்றுவது என்பது முடியாத ஒன்று.

திருமண வாழ்க்கையில் இணைந்தவர்கள் இருதரப்பு ஜாதியும், மதமும் உயர்ந்தது என்று ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒன்றைக்கூட சிறுமைப்ப டுத்தாமல், இரண்டையும் உயர்வாக கருதவேண்டும். அதைபற்றி பேசு வதை குறைத்து, குடும்பவாழ்க்கையை உயர்த்துவது பற்றி ஆக்க பூர்வமாக சிந்தித்து செயல்படுத்த வேண்டும்.

இணையம் ஒன்றில் படித்த‍ தகவல் இது

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

One Response

  1. Hi, katturai migavum arumai, edu pondra nalla katturaigal books agavum padathittangalagavum velieda arasidam sibarasiu seiyavendum. idanal pala kudumbangal court padi erum nilai varadu orudiaga solgiren. ella kurumbangalalium orvaniargal, kudumbatinar, neighbours sandegapadum vagil nadapadum priviku karanamagirathu.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: