Advertisements

த‌னக்கு குவியும் பட வாய்ப்புகளால் திணறும் பிக்பாஸ் கஞ்சா கருப்பு

த‌னக்கு குவியும் பட வாய்ப்புகளால் திணறும் BIGG BOSS கஞ்சா கருப்பு

சாதி மதம் பாராமல் ப‌லருக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருபவர்  நகைச்சு வை நடிகர் கஞ்சா கருப்பு. அப்படித்தான்

சமீபத்தில் தனது நண்பரும் கவிஞரும், ‘கவிஞர் கிச்சன்’ என்கிற ஹோட்டல் நடத்தி வருபவருமான ஜெயங்கொண்டானின் உணவக த்துக்கு, ஒரு ‘ஆட்டோ’வை அன்பளிப்பாக அளித்துள்ளார். அதன் பின்னணியில் நெகிழ்வான ஒரு காரணமும் உண்டு.

திருட்டு விசிடியில் படம் பார்க்காமல், காசுகொடுத்து டிக்கெட் எடுத்து தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வருபவர்களுக்கு பில் தொகையில் 10 ரூ. சலுகை, உதவி இயக்கு னர்களுக்கு பாதி விலையில் சாப்பாடு, வெளி யூரில் இருந்து சினிமாவே கதியென தஞ்சம் பிழைக்க வந்து கையில் காசில்லாமல் வருவோருக்கு கூட பல சமயங்களில் இலவச சாப்பாடு என சேவை மனப்பான்மை கலந்து இந்த கவிஞர் கிச்சன் செயல்பட்டு வருகிறது.

இந்த ஹோட்டலுக்கு தேவையான காய்கறிகளை தினசரி கோயம்பேடு மார்க்கெட்  (Koyambeu Market) சென்று காய்கறி (Vegetable) வாங்கி வருவத ற்காக வாடகை வாகனத்தை பய ன்படுத்தி வந்தனர். இந்நிலையில் நடிகர் கஞ்சா கருப்பு (Kanja Karuppu), இந்த ஹோட்டலுக்காக சொந்தமாகவே ஒரு ‘ஆட்டோ’ வாங்கி அன்பளிப்பாக தந்துள்ளார்.

இதே சமயத்தில் கஞ்சா கருப்பு (Kanja Karuppu) வின் சினிமா கேரி யரும் மீண்டும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. தற்போது ‘சிலந்தி’ ஆதிராஜன் இயக்கி வரும் ‘அருவா சண்டை’ படத்தில் முக்கிய வேட த்தில் நடித்துள்ளார் கஞ்சா கருப்பு. 7 மணி படப்பிடிப்புக்கு 6 மணி க்கே தயாராக வந்து நின்ற கஞ்சா கருப்புவின் பங்சுவாலிட்டியை பார்த்து யூனிட்டே மிரண்டதாம். இப்படத்தில் இவரது நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது என படக்குழுவினர் பாராட்டி வருகின்றனர்.

இதுதவிர தற்போது லிங்குசாமி-விஷால் (Lingusamy-Vishal) கூட்ட ணியில் உருவாகி வரும் ‘சண்டக்கோழி-2 (Sandaikozhi-2)’ படத்தின் படப்பிடிப்பில் கிட்டத்தட்ட 20நா ட்களாக கலந்துகொண்டு நடித்து வருகிறார் கஞ்சா கருப்பு. மேலும் தனது நடிப்பில், வரும் டிச-15ஆம் தேதி வெளியாக இரு க்கும் ‘பள்ளிப்பருவத்திலே (Palli paruvathile)’ படம் தனக்கு ஒரு திருப்பு முனையாக இருக்கும் என உறுதியாக நம்புகிறார் கஞ்சா கருப்பு. 

இவை தவிர இன்னும் 5 திரைப்படங்களில் நடிப்பதற்காக பேச்சு வார்த்தைகள் நடை பெற்று வருவதாக தெரிகிறது. இதனால் தனக்கு குவியும் படவாய்ப்புக்களால் திணறிக்கொண்டிருக்கிறார் பிக்பாஸ் கஞ்சா கருப்பு 

பள்ளிப்பருவத்திலே எனக்கு திருப்புமுனையாக அமையும்: கஞ்சா கருப்பு, டிசம்பர் 15ம் தேதி வெளியாக இருக்கும் ‘பள்ளிப்பருவத்திலே’ படம் எனக்கு திருப்பு முனையாக அமையும் என்று கஞ்சா கருப்பு கூறியுள்ளார்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: