Advertisements

நள்ளிரவில் விஷால் மனு மீண்டும் நிராகரிப்பு – திடீர் திருப்ப‍ம் – விஷால் அதிருப்தி

நள்ளிரவில் விஷால் மனு மீண்டும் நிராகரிப்பு – திடீர் திருப்ப‍ம் – விஷால் அதிருப்தி

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரி தேர்தல் ஆணையத்துடனான

ஆலோசனைக்குப் பின்னர் நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனுவை நிராகரி த்துள்ள‍தாக‌ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்பு மனு குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டதாலும் திமுக, அதிமுக வின் எதிர்ப்பினாலும் அதன் மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டு மாலையில் மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது முன்மொழிந்தவர்களின் 2 பேரின் கையெழுத்து தங்களுடை யது அல்ல என்று பின்வாங்கியதால் அவருடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
 
இந்நிலையில் நடிகர் விஷால் தன்னுடைய மனுவை ஏற்க வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டார். மேலும் முன்மொழிந்தவர்கள் அதிமுக வேட்பாளர் மதுசூதனனால் மிரட்டப்பட்டதாக ஒரு ஆடியோவையும் விஷால் வெளியிட்டார். இதனை தேர்தல் அதிகாரியிடமும் அவர் அளித்தார்.

அடுத்த 5வது நிமிடத்தில் வெளியே வந்த நடிகர் விஷால் தன்னுடைய வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது, தேர்தல் ஆணையம் நியாயமான தீர்ப்பு தந்துள்ளது என்றார். நாளை முதல் களத்தில் சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு சென்றார். இதையே தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலும் அவர் பதிவிட்டிருந்தார். இதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ஆனால் விஷாலின்  வேட்புமனுவை ஏற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுகவின ர் மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் 11 மணியளவில் தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், விஷாலின் மனுவை முன்மொழிந்த 10 பேரில் 2 பேரின் கையெழுத்து போலியாக உள்ளதாலும் அவர் தந்த ஆடியோ ஆதாரத்தின் நம்பகத் தன்மையை உறுதிபடுத்த‍வில்லை என்பதாலும் அவரின் வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

வேட்புமனு மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள விஷால் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. மனு ஏற்கப்பட்டதாக அறிவித்து பின்னர் ஏன் நிராகரித்தார்கள் என தெரியவில்லை. எனது மனுவை நிராகரித்தன் பின்ன‍ணியில் மிகப் பெரிய தவறு நடந்துள்ள‍து என்றும் சுயேட்சை ஒருவரை ஆதரித்து வெற்றி பெற வைப்பேன் என கூறியுள்ளார்.

விஷால் மனு இர்ண்டாவது முறையாக நிராகரிக்க‍ப்பட்ட‍தன் பின்னணியில் ஆளுங்கட்சியின் அடாவடிதான் காரணம் என்று பரவலாக பேசப்படுகிறது.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: