Advertisements

Two Wheeler ஓட்டுபவர்கள், முன்பும்.. ஓட்டும்போதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் (Two Wheeler Riders), முன்பும்.. ஓட்டும்போதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை

க‌டந்த 25 வருடங்களாத்தான்… இருசக்க‍ர வாகனப் பயன்பாடு அதிகரித்துள்ள‍து. 80 களுக்கு

முன்பெல்லாம் இருசக்க‍ர வாகனம் என்பது நடுத்தர வர்க்க‍த்தினர் பலருக்கு வெறும் கனவாக இருந்தது. அதன்பிறகு 1980களுக்கு பிற கு TVS நிறுவனம்… நடுத்த‍ர‌ TVS 50 என்ற மொபட்-ஐ மிகவும் மலி வான விலையில் அறிமுகம் செய்தது. அந்த வாகனமான டி.வி.எஸ் .50 மெல்ல‍ மெல்ல‍ நடுத்தர வர்க்க‍த்தினரிடையே பெருத்த‍ வரவே ற்பை பெற்ற‍து. இதன் பலனாக அடுத்த‍டுத்த‍ விலை மலிவான இரு சக்க‍ர வாகன ங்களை மற்ற‍ இருசக்கர‌ நிறுவனங்களும் போட்டிபோட்டு அறிமுக ப்படுத்தியதால் இன்று இருசக்கர வாகனம் இல்லாத வீடே இல்லை என்ற நிலை உருவாகி உள்ள‍து. அந்தளவுக்கு இருசக்க‍ர வாகனங்கள் பல்கிப் பெருகி உள்ள‍து. இந்த இருசக்க‍ர வாகனத்தை ஓட்டும்போது சில முன்னெச்சரிக்கையாக‌ சிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. இருசக்க‍ர வாகனத்தை வாங்குவதற்கு முன்பே இருசக்கரத்தை நன்றாக ஓட்டிப் பழகி, எந்த சிறு விபத்தும் நேராமல் வண்டி ஓட்டும் நம்பிக்கை ஏற்படு ம்போது இரு சக்க‍ர வாகன உரிம(ம்)தை உரிய அலுவலகதில் விண்ண‍ ப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு விண்ண‍ப்பித்து அளித்த‍ வாகன உரிமத்தை வண்டி ஓட்டும்போது எப்போ தும் கையில் வைத்தி ருக்க வேண்டும். போக்குவரத்து காவலர்கள் தடுத்தி நிறுத்தி அவர்களுக்கு காண்பி க்க‍ வேண்டும்.

2. இருசக்க‍ர வாகனத்தை வாங்கியவுடன் அதன் ஆர்.சி.புத்த‍கம் அதாவது வண்டி எங்கு தயாரிக்க‍ப்பட்ட‍து, எப்போது பதிவானது, வண்டியின் எண், இன்ஜின் எண், சேசிஸ் எண். வண்டியின் உரிமையாளர் விவரம் போன்ற பல விவர ங்கள் அதில் இருக்கும். ஆகவே அதனை நகல் ஒன்று எடுத்து அதனை வண்டியில் கிட் பாக்ஸில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

3. புதிதாக‌ வண்டி வாங்கியவுடன் அதன் பதிவு எண். உடனடியாக வழங்க ப்பட மாட்டாது. அந்த பதிவு கிடைக்க ஏழு நாட்களில் இருந்து 15 நாட்களு க்குள் கிடைத்து விடும். அந்த எண்ணை வண்டியின் முன்பக்க‍மும் பின்பக்க மும் ஒரு பிளேட்டில் வரைந்து அதனை பொறுத்த வேண்டும்.

4. வண்டி வாங்கியவுடன், அதற்குண்டான காப்பீட்டு (இன்ஷுரன்ஸ்) சான்றினை விற்பவரே கொடுத்து விடுவார். அப்ப‍டி கொடுக்க‍வில்லை யெ ன்றால் அதற்குண்டா காப்பீட்டு சான்றினை உரிய காப்பீட்டு நிறு வனத்தில் விண்ண‍ப்பித்து பெற்று அதன் நகலையும் எப்போதும் வண்டியிலேயே வைத்திருக்க வேண்டும்.

5. இருசக்க‍ர வாகனத்தை எடுக்கும்போதே… வண்டியின் பிரேக் சரியாக பிடிக்கிறதா? ஆக்ஸலேட்ட‍ர் சரியாக வேலை செய்கிறதா? என்பதை முதலில் பார்த்து அதன் நம்பகத் தன்மையை உறுதி செய்த பிறகே இரு சக்கர வாகனத்தை எடுத்து ஓட்ட வேண்டும்.

6. இருசக்கர வாகனத்தில் அமரும்போது.. ஸ்டேண்டை எடுத்துவிட்டு, வாகனத்தின் சீட்டில் அமர்ந்துகொண்டு அதன் ஸ்டேரிங்கை பிடிக்கும்போது கைகளை எல்ஷேப் வடிவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வாகனம் ஸ்டார்ட் செய்தவுடன் மெதுவாக ஆக்ஸிலேட்ட‍ர் கொடுத்து (கியர் மற்றும் கிளட்ச் முறையாக பயன்படுத்தி) வண்டியின் வேகத்தை மெதுவாக கூட்ட வேண்டும்.

7. முதலில் இருசக்க‍ர வாகனத்தின் வேகத்தை மிகவும் மெதுவாக தொடங்கி படிப்ப டியாக கூட்ட‍வேண்டும். சாலையில் ஓட்டும்போது ஒருபோதும் அதீதவேகம்கூடாது

8. சாலை முனை அல்ல‍து தெருமுனை வருவதற்கு சில அடிகள் முன்னமே ப்ரேக் பிடித்து நின்று அச்சாலையின் அல்ல‍து அத்தெருவின் இருபுறங்களி லும் ஏதேனும் வண்டி வருகிறதா என்பதை கவனமுடன் கண்காணி த்து வண்டியேதும் வரவி ல்லை என்றால் உங்கள் வண்டியின் இண்டி கேட்ட‍ர் பல்பை ஒளிரவிட்டும் கைகளை திரும்பும் திசையில் காட்டி யும் திரும்பவேண்டும். சாலையை அல்ல‍து தெருவை திரும்பிய பிறகு இண்டிகே ட்ட‍ர் பல்பை ஆஃப் செய்து விடவேண்டும்.

9. சாலையில் செல்லும்போது அவசரப்பட்டு எந்த வாகனத்தையும் முந்திச் செல்ல வேண்டாம். குறிப்பாக முன்புசெல்லும் வாகனத்தின் இடப்பக்கமாக முந்துவது கூடவே கூடாது. எதிர் வாகனங்களைப் பார்த்தே வலது பக்க மாக, அதுவும் அத்தியாவசி யமெனில் உரிய ஒலியொழுப்பி முன்னே செ ல்லும் வாகனம் வழிவிட்ட‍ பிறகு முந்திச் செல்ல்லாம்.

10. பதற்றமான சில தருணங்களில் இருசக்கர வாகனத்தை ஓட்ட‌க் கூடாது. கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, அதன்பிறகே வண்டி யை எடுத்து வேகம் குறை வாக செல்வது நல்ல‍து.

11. வண்டி ஓட்டுபவர் கண்டிப்பாக‌ ஹெல்மெட் அணிந்து கொண்டு தான் ஓட்டிச் செல்ல வேண்டும்.

12. குறிப்பாக பெண்கள் ஓட்டும்போது அவர்களின் முகம் முழுக்க துப்பட்டாவை சுற்றி, ஒரு பெரிய கண்ணாடி அணிந்து கொண்டு நீளக் கையுறைகளு டன் செல்வது தற்போது அதிகமாக தென்படும் சாலைக் காட்சிகளில் ஒன்று. கூடியமட்டும் இப்படி செல்வதை அவர்கள் தவிர்க்க வேண்டும். . அப்படி மூடிக்கொண்டு செல்லும்போது அவர்களின் சுவாசம் முட்டாம லும், தலையில் ஹெல்மெட் அணிந்தும் கொஞ்சம் மங்கல்குறைந்த கண்ணாடி அணிந்து செல்வது மிக நல்லது. சரும பாதுகாப்பு முக்கியம்தான். அதை விட உயிர் பாதுகாப்பு முக்கியம். மேலும் தாங்கள் அணிந்துள்ள‍ புடவை, துப்பட்டா போன்ற துணிகளை காற்றில் பறக்கவிடாமல் நன்றாக இறுக்கி இடுப்பில்சொருகிக் கொண்டோ அல்ல‍து முடிச்சு போட்டுக் கொண்டே ஓட்ட‍ வேண்டும்.

13. வாகனம் ஓட்டும்போது.. ஓட்டுபவர் பாட்டு கேட்டுக்கொண்டோ, ஹெட்ஃபோன் மூலம் பேசிக்கொண்டோ ஓட்டிச்செல்வது அபாயத்தின் அறிகுறியாகும். இதனை முற்றிலும் தவிர்க்க‍ வேண்டும்.

14. பக்கவாட்டு கண்ணாடிகளைப் பார்க்காமல் வண்டியைத் திருப்பவோ நிறுத்த வோ சாலை கடக்கவோ கூடாது.

15. இரண்டுபேருக்கு மேல் செல்வதை கூடியமட்டும் தவிர்க்கவும்.

16. வாகனம் ஓட்டுபவர் பின்னால் அமர்ந்திருப்ப‍வர்களுடன் பிரச்சனை களை விவாதித்தபடி வாகனம் ஓட்டுவது அறவே தவிர்க்கவும்.

17. முன்னேசெல்லும் வானத்திற்கும் உங்கள் வாகனத்திற்கும் குறைந்த பட்சம் 5 அடி இடைவெளி விட்டு ஓட்டவும். முன்னே செல்லும் வாகனம் திடீரென்று பிரேக் பிடிக்கும் போது… அந்த வாகனத்தின் மீது இடிக்கா மல் சட்டென ஓட்டுபவர் சுதாக‌ரி த்துக் கொண்டு நிறுத்த முடியும்.

18. சாலையில் வேகத்தடைகளோ அல்ல‍து மேடுபள்ளங்களோ இருந்தால் அவற்றை கடக்க‍ வாகனத்தின் வேகத்தை முற்றிலும் குறைத்து மிகவும் பொறுமை யாக கடக்க வேண்டும்.

19. சாலையில் வாகனத்தை ஓட்டும்போது… பின்னால்… ஆம்புல ன்ஸோ, தீ அணைப்பு வாகனமோ,. காவல்துறையின் வாகனமோ சைரன் (அபாய ஒலி) எழுப்பி வந்தால் விரைவாகவும் மிகுந்த கவ னமுடனும் சாலையில் ஒரு புறம் ஒதுங்கி அந்த வாகன ங்களுக்கு வழிவிட வேண்டும்.

20. முக்கியமாக போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடித்து சமிக்ஞை (சிக்னல்) பிரகாரம் முறையாக வாகனத்தை ஓட்டிச் செல்ல வேண்டும். இதன்மூலம் தேவையற்ற‍ விபத்துக்கள் தவிர்க்க‍ முடியும்.

21. மழை பொழியும்போது வாகனத்தை மிகுந்த கவனத்துடன் மிகவும் குறைவாக வேகத்தைக் குறைத்து ஓட்ட வேண்டும். வேகமெடுத்தால் மழைநீரில் வாகனம் வழுக்கி விழுந்து விபத்து நேரிட வாய்ப்புக்கள் அதிகம்.

22.  வாகனம் உரிய முறையில் பராமரித்து வர வேண்டும் பிரேக் ஆயில், இன்ஜின் ஆயில், போன்றவற்றை உரிய காலக்கெடு அறிந்து அந்த ஆயி லை மாற்ற‍வேண்டும். இவ்வாறு மாற்றுவதால் வண்டியின் ஆயுள் கூடும்.

23. 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது பேட்டரியை.. பேட்டரி கடைக்குச் சென்று டிஸ்ட்டல் வாட்ட‍ர் நிரப்பி சார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.

24. வாகனத்தின் டயர் டியூப்பில் உள்ள‍ காற்று எப்போதும்போது மானளவு நிரப்பப்பட்டிருக்க‍ வேண்டும். காற்று குறைவாக இருந்தால் அரு கில் உள்ள‍ பெட்ரோல் பங்க் சென்று காற்றை நிரப்பிக்கொள்ள வேண்டு ம். ட‌யர்தேய்ந்து நொந்திருந்தால் தாமதிக்காமல் டயரை மாற்றவேண்டும்.

25. இருசக்க‍ர வாகனத்தை ஆண்டுக்கு ஒருமுறையாவது சர்வீஸ் செய்து … பிரேக்கட்டை மாற்றுதல், பிளக்கை மெக்கானிக்கிடம் கொண்டு சென்று சுத்த‍ம் செய்வது உட்பட சிலவற்றை மேற்கொள்ள‍ வேண்டும்.

= விதை2விருட்சம் சத்தியமூர்த்தி

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: