Advertisements

யார் இந்த அம்ருதா என்கிற மஞ்சுளா? – வெளிவராத‌ பின்ன‍ணித் தகவல் – வீடியோ

யார் இந்த அம்ருதா என்கிற மஞ்சுளா? – வெளிவராத‌ பின்ன‍ணித் தகவல் – வீடியோ

ஒட்டுமொத்த‍ தமிழகம் மட்டுமல்ல‍ இந்தியாவையே திரும்பி பார்க்க‍

வைத்திருப்பவர் அம்ருதா என்கிற மஞ்சுளா (Amrudha alias Manjula) இவர். “நான்தான் ஜெ-வின் உண்மையான மகள். அதை நிரூபிக்க டி.என்.ஏ. (DNA) பரிசோதனைக்கும் தயார்” என்று பிரத மர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு மனு செய்தும், உச்சநீதி மன்றத்தில் (In Supreme Court) வழக்குத் தாக்கல் செய்தும் பரபரப்பைக் கிளப்பியிருந்தார் அம்ருதா (எ) மஞ்சு (Amrudha alias Manjula). இப்போது அவர் பெங்களூரு- மைசூரு (Bengaluru – Mysore) செல்லும் வழியில் கெங்கேரி (Kengeri) அடுத்துள்ள சூலிகேரி கிராமம் (Soolikery Village) ராமச்சந்திர சர்க்கலில் (In Ramachandra Circle) குடியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவில், ”1980 ஆகஸ்ட் 14-ம்தேதி ஜெயலலிதா-சோப ன்பாபு (Jayalalitha – Sobhan Babu) இணையருக்கு பிறந்த தாகவும், ஜெயலலிதாவின் அத்தையான ஜெயலட்சுமி  (Jayalakshmi) என்பவர் பிரசவம் (Delivery) பார்த்தார் எனவும், ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படும் என்ப தால், இந்த உண்மையை வெளிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதன்பின் J., தனது சகோதரி சைலஜாவிடம் தன்னை ஒப்படைத்து வளர்க்கச் சொன்னதாகவும் அதில் குறிப்பிட்டி ருக்கும் மஞ்சு, தன்னை சைலஜா – சாரதி (Shylaja – Sarathy) தம்பதியினர் சொந்த மகளாகவே வளர்த்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

என்னை வளர்த்த தாய் சைலஜாவும் கடந்த ஆண்டு காலமாகி வி ட்டார். அடுத்த சில மாதங்களில் ஜெயலலிதாவும் காலமானார். நான் ஜெயலலிதாவின் வாரிசு. தனக்கு டி.என்.ஏ. பரிசோதனை (DNA Test) செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து ள்ளேன். அதில், வைஷ்ணவ ஐயங்கார் பிராமண முறைப்படி எனது அம்மா ஜெய லலிதாவுக்கு இறுதிச்சடங்கு செய்யவேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவித்து ள்ளார்.

2014-ம் ஆண்டு ஜெ. பெங்களூரு சிறையில் இருந்தபோது, “நான்தான் ஜெ-வின் தங்கை (Jayalalitha’s Sister)” என்று பெங்களூருவாசிகளிடமும், பத்திரிகையாளர்களிடமும் சொல்லிப் பரபரப்பைக் கிளப்பியவர் சைலஜா. இவரு டைய மகள்தான் இந்த அம்ருதா என்ற மஞ்சு என்பது குறிப்பிடத்தக்க‍து.

அம்ருதாவாகிய நான் ! The Untold Story Of Amrutha | Jayalalitha’s Daughter.?

EXCLUSIVE | Amrutha Claiming As She Is The Daughter Of Jayalalitha

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: