Advertisements

எந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்தால்

எந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்தால் . . .

சிலருக்கு 20–30வயதை எட்டும் முன்னரேகூட நரைமுடிகள் எட்டி பார்க்க ஆரம்பி த்துவிடும். இது

மிகவும் கொடுமையான ஒன்றாகும். இந்த நரைமுடி வர மரபியல் ரீதியாக பல கார ணங்கள் இருக்கின்றன. சில வகையான உணவு களை உண்பதன் மூலமாக எளிதில் நரைமுடி பிரச்சனை வந்துவி டும். அப்படி எந்த உணவுகளை சாப்பிடுவதால் நரை முடிகள் வரும் என்பது பற்றி இப்பகுதியில் விரிவாக காணலாம்.

சர்க்கரை (Sugar)

சர்க்கரையை மட்டுமே அதிகமாக சாப்பிடுவதாலும், அதிகமாக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதாலும் நரை முடி சீக்கிரமாக தலை நீட்டுகிறது. மேலும் துரித உணவுகள், சோடா, பத ப்படுத்தப்பட்ட குளிர்பானங்களை பருகுவதன் மூலமாகவும் நரை முடிகள் வருகின்றன.

விட்டமின் இ (Vitamin E)

நீங்கள் அதிகமான அளவு சர்க்கரையை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அதுவிட்டமின்E உடைய செயல் திறனை குறைக்கிறது. விட்டமின் E என்பது முடி வள ர்ச்சிக்கு மிக முக்கியமாக தேவையான ஒன்றாகும். இது புரோட்டினை உறிஞ்சவும் உதவுகி றது.

மாற்று என்ன?

உடலில் சர்க்கரை ஒரு குறிப்பிட்ட அளவு இருக்க வேண்டியது அவசியம். எனவே நீங்கள் அந்த சர்க்கரையை செயற்கையான பொருட்களில் இருந்து எடுக்காமல், இய ற்கையாக கிடைக்கும் சர்க்கரையை எடுத்துக் கொள்ளலாம். இயற்கை சர்க்கரையானது சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பீட்ரூட், கேரட் போன்றவற்றில் இருந்து கிடைக்கிறது.

உப்பு (Salt)

உப்பு என்பது உடலுக்கு மிகவும் அத்தியாவதியமான ஒன்று என்றாலும் கூட இத னை அதிகளவு சேர்த்துக் கொள்வதை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது.

அஜினமொட்டோ (Ajinomoto) 

அஜினமொட்டோ என்பது உணவிற்கு சுவையளிப்பதற்காக வும், உணவின் சுவையை கூட்டுவதற்காகவும் பயன்படுத்த ப்படுகிறது. இது கடை உணவுகள், கேன்களில் அடைக்கப்ப ட்ட காய்கறிகள், சூப் போன்ற பல உணவுப்பொருட்களில் சே ர்க்கப்படுகின்றன. இந்த அஜினமொட்டோ பல ஆரோக்கிய கெடுகளை விளைவிக்க கூடியதா கும்.

என்ன செய்யும்?

அஜினமொட்டோவை அதிகளவு உணவில் சேர்த்துக் கொண்டால் அது உடலின் மெட்டபாலிசத்தை பாதிக்கும். உடல் எடை, அஜீரண கோளாறு கள், நரைமுடி பிரச்ச னை போன்ற பாதிப்புகளில் இருந்து தப்பிக்க நீங்கள் அஜினமொட்டோவை உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருக்க வேண்டியது அவசியம்.

விலங்கு கொழுப்புகள் (Animal Fat)

அதிகளவு விலங்கு கொழுப்புகளை உட்கொள்வதும் நரைமுடிக்கு காரணமாக அமையும். மீன் மற்றும் இறைச்சியில் இருந்து கிடைக்கும் இந்த விலங்கு கொழுப்புகளை அளவுடன் எடுத்துக்கொள்வதே நல்லது. மனிதனின் செரிமான மண்டலமானது சில வகையான விலங்கு புரோட்டினை எளிதில் செரிக்கும் தன்மை கொண்டது. எனவே அவை நேரடியாக யுரிக் அமிலமாக மாறுகிறது. அதிகமாக யுரிக் ஆசிட் (Uric Acid) சுரந்தால் நரை முடி (Gray Hair) பிரச்சனை உண்டாகும்.

செயற்கை நிறமூட்டிகள் (Artificial Dye for food)

செயற்கையான நிறமூட்டிகளும், செயற்கை சுவையூட்டிக ளும் பார்பதற்கும் சுவை ப்பதற்கும் நன்றாக இருந்தாலும் கூட இவை ஆபத்தானவை. எந்த உணவில் செயற்கை சுவையூட்டிகள் இருந்தாலும், அவை ஆபத்தானவை தான்.

வெள்ளை மாவு (White Flour) 

கோதுமையில் இருந்து நேரடியாக கிடைக்கும் மாவு ஆரோக்கியமா னது தான். ஆனால் சில வகையான மாவுகள் வெண்மையாக பளி ச்சென்று இருக்க வேண்டும் என்பதற்காக பிளிசிங் செய்யப்படுகின்ற ன. இது கோதுமையில் உள்ள நல்ல குணங்களை அளித்துவிடுகிறது.

என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் இதுபோன்ற ஆபத்தை விளைவிக்கும் உணவுகளை முடி ந்தவரை குறைவாக சாப்பிடுவது நல்லது. தவிர்க்க முடிந்த உண வுகளை தவிர்ப்பது போன்றவை உங்களுக்கு இளம் வயதிலேயே நரைமுடி வருவதை தடுக்கும். உடலும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

திரு. ரங்கநாதன் என்பவர் … எமது மின்னஞ்சலுக்கு அனுப்பிய பதிவு

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: