Advertisements

அழகா, அம்சமா புடவை கட்ட- பெண்களுக்கு நிபுண‌ர் காவியா தரும் ஆலோசனைகள்

அழகா, நேர்த்தியாக புடவை கட்டிக் கொள்ள விரும்பும் பெண்களுக்கு நிபுண‌ர் காவியா தரும் ஆலோசனைகள்

மேல்நாட்டு நாகரீக மோகம் எந்தளவுக்கு நமது தமிழர்களின் மனத்தை ஆக்கிரமி த்துள்ள‍து என்பதற்கு இந்த புடவை ஒன்றே எடுத்துக்காட்டு. தினமும்

புடவை கட்டிய அம்மாக்களைக் கண்ட கடைசித் தலைமுறை  (Last Generation) நாம்தான். அந்தளவுக்கு இப்போது புடவை என்பது பண்டிகைக்கால ஆடையாக மாறிவருகிறது. தமிழர்களின் பாரம்பர்ய உடையான புடவை, இப்படி நம் பெண்களுக்கு அந்நிய மாகும் சூழலில், ‘எப்படி அழகாக புடவை கட்டுவது’ என்பது பற்றி ஒரு வொர்க்‌ஷாப் நடத்தி யிருக்கிறார், TBG(Tamil Bridal Guide)’ ஆன்லைன் வெடிங் ஸ்டோரின் உரிமையாளர் காவியா.

”இக்காலத்துப் பெண்கள், எப்படிப் புடவை கட்டிக்கிறது, கட்டிட்டு எப்படி மேனேஜ் பண்றது என்பதில் எல்லாம் ரொம்பக் கஷ்டப்பட்டா லும், புடவை மீதான அவங்க ளோட இஷ்டம் குறையலைங்கிறதுதான் உண்மை. ‘வாங்க… ஆர்வம் இருக்கிறவ ங்களுக்கு அழகா, அம்சமா புடவை கட்டும் டெக்னிக்கை நாங்க சொல்லித் தர்றோம்’னுதான் இந்த ஒன் டே ஸாரி டிராப்பிங் வொர்க்‌ஷாப்பை நடத்தினோம்” என்கிறா ர் காவியா.

கட்டணவொர்க்‌ஷாப்புக்கு ஆர்வத்தோடு வந்திருந்த பெண்களுக்கு , சிந்தடிக் (Synthetic),  காட்டன் (Cotton), டிசைனர் (Designer), பட்டு (Silk) என ஒவ்வொரு ரகப் புடவையையும் கட்டிக் காட்டி பயிற்சி அளித்தார், ஸாரி டிராப்பிங் ஸ்பெஷலிஸ்ட் நிகிலா ஷ்யாம் சுந்தர்.

நளினமாகப் புடவை கட்ட அங்கே தரப்பட்ட ஆலோசனைகள் இங்கே…

* புடவையின் முந்தி, உள்பக்கம் குழப்பம் வராமல் இருக்க, உள்பக்க நுனியில் முடிச்சிட்டுக்கொள்ளவும். இது அடிப்படை.

* இடுப்புக்கான ப்ளீட்ஸை இடது பக்கத்தில் இருந்து வைக்க ஆர ம்பிக்க வேண்டும்; ஒன்றன் பின் ஒன்றாக வைத்து, சரிசெய்ய வே ண்டும். இல்லையெனில், புடவை ‘ஸ்கர்ட்’ (Skirt)போல் ஆகிவிடும்.

*ப்ளீட்ஸை வயிற்றுப் பகுதியில் செருகியவுடன், அங்கே உப்பலாக இல்லாமல் உள்பக்கமாக சீராக நீவிவிடவும்.

* மார்புப் பகுதிக்கான ப்ளீட்ஸை வெளிப்பக்கத்தில்(இடப் பக்கத்தில்) இருந்து ஆர ம்பிக்க வேண்டும். சரியாக வரவில்லையென்றால், உள்ளே இருக்கும் ப்ளீட்ஸின் அளவை சரிசெய்து கொள்ளலாம்.

*முந்தியை 2விதமாகப்பின் செய்யலாம் ஒன்று, ஃபார்மல் முறை . இதில் ப்ளீட்ஸை ஒன்றன்பின் ஒன்றாக மடித்து, தோள்பட்டை க்குச் சற்று கீழே பின்செய்ய வேண்டும். இரண்டாவது, கேஷுவ ல் முறை. இதில் ப்ளீட்ஸை ஒன்றன் பின் ஒன்றாக மடித்து, அதில் இரண்டாவது ப்ளீட்டை வெளியே எடுத்துவிட்டு, மீதியை அப்படியே பின் செய்யவேண்டும். ரேவதி, சுஹாசினி, ரோஹிணி சேலை கட்டும் ஸ்டைல் இதுவே. மரியாதையான தோற்றம் தரும்.

* ப்ளீட்ஸை பிளவுஸுடன் பின் செய்யும்போது, கழுத்தில் நெருடலா க இருப்பது போல தோன்றினால், ப்ளீட்ஸை அடுக்கிய பின், முதல் ப்ளீட்டை மட்டும் சற்றே தளர்த்தி, சற்று கீழே இறக்கி பின் செய்ய லாம்.

* சிங்கிள் ப்ளீட் (Single Fleet) விட ஆசைப்படுபவர்கள், முதல் ப்ளீட்டை மட்டும் பின் செய்துவிட்டு, மிச்சம் இருக்கும் முந்தியை ஒன்றாகச் சேர்த்து, புடவை கையில் விழும் இடத்தில் உட்பக்கமாக பின் செய்யவும். இதனால் புடவை கையைத் தாண்டி தரையில் விழாமல் ஒரு கன்ட்ரோல் கிடைக்கும்.

* சிங்கிள் ப்ளீட் விட ஆசை, ஆனால் புடவை (Saree) ட்ரான்ஸ்பர ன்ட்டா இருக்கிறது என நினைப்பவர்கள், புடவையின் முந்தி முதல் இடுப்புப் பகுதிவரை, புடவையின் நிறத்திலேயே லைனிங் போல ஒரு மெல்லிய துணி அட்டாச் செய்துகொண்டு, சௌகர்யமாக சிங்கிள் ப்ளீட் விடலாம்.

* ட்ரான்ஸ்பரன்ட் (Transparent)  மற்றும் நெட்டட் (Netted) புடவை கட்டும்போது, ப்ளீட்ஸை இடுப்புப் பகுதியில் பிளவுஸோடு (with blouse) பின் செய்ய வேண்டும்.

* ப்ளீட்ஸ் ஒன்றை ஒன்று ஓவர்லாப் (over lap) செய்யாமல் இருக்க, 2, 3-வது ப்ளீட்ஸை பிளவுஸோடு உள்பக்கமாக பின் செய்ய வேண்டு ம். இதனால், அடிக்கடி ப்ளீட்ஸை அட்ஜஸ்ட் செய்யத் தேவை இரு க்காது.

*புடவைக்கு ஃபால்ஸ் அட்டாச் (Falls Attach) செய்துகொள்ளும்போது, பார்டர்  (Border) மடங்கும் பிரச்னை இருக்காது. மேலும், அது நீட் லுக் (Neat look) கொடுக்கு ம்.

* எப்போதும் புடவையின் நிறம் மற்றும் மெட்டீரியலுக்குப் பொரு த்தமான உள்பாவாடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். முக்கால் காலுடன் நிற்காமல், கணுக்கால் தொடும்படி உள்பாவாடை அணிய வேண்டியது அவசியம். இல்லையென்றால், பரிகசி க்கும் கமென்ட்ஸ் வாங்க நேரிடும்.

* ஃபிஷ் கட் (Fish Cut) சாட்டின் உள்பாவாடை கட்டும்போது, ஸ்லிம் லுக் (Slim Look) கிடைக்கும். இதை, சின்தடிக் முதல் பட்டு வரை அனைத்துப் சேலைகளுக்கும் பயன்படுத்தலாம்.

* காட்டன், சாட்டின் என எந்த மெட்டீரியலில் உள்பாவாடை இருந்தாலும், உள்ளே இருக்கும் நாடா கயிறு காட்டனில் இருப்பது சிறந்தது. அப்போதுதான் இறுக்கமான முடிச்சுகள் விழும். முடிச்சு எளிதில் நழுவும் ரிஸ்க்கும் இருக்காது.

* அதிகபட்சமாக இரண்டு, மூன்று பின்கள் உபயோகி ப்பதே போதுமானது. சகட்டுமேனிக்கு பின் செய்தால் , கேஷுவலாக இருக்க முடியாது.

*புடவையை கணுக்கால் (Nodes) வரை கட்டாமல், இரண்டு பாதங்களின் சுண்டு விரல்களு ம் மறையும்படியாகக் கட்டவும். ஹீல்ஸ் (Heals) அணியும் பெண்கள், புடவை கட்டிவிட்டு ஹீல்ஸ் அணியும்போ து உயரம் போதாமல் போய்விடும் என்பதால், ஹீல்ஸ் அணிந்த படியே புடவை கட்டி உயரத்தைச் சரிசெய்து கொள்ளவும்.

* புடவை கட்டிப் பழக ஆரம்பிக்கும்போது, அதை அரைகு றையாகத் தெரிந்தவர்களிடம் இருந்து பழகாமல், நேர்த்தியா கப் புடவை கட்டும் பெண்களிடம் இருந்து கற்று க்கொள்ளவும்.

* வேண்டா வெறுப்பாக, கடமைக்காக இல்லாமல், ரசனையோடு, தன்னம்பிக்கையுடன் (with Self Confidence) புடவை கட்டுங்கள். உலகின் மிக அழகான அந்த உடை, உங்களை இன்னும் அழகாகக் காட்டும்!

=>தொகுப்பு முஹம்ம‍து அலி

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: