Advertisements

தாய்ப்பால் 6 லிட்ட‍ர் வரை தினமும் இலவசமாக வழங்கும் உன்ன‍த தாய் – அதிசய‌ ஆச்சரிய தகவல் -வீடியோ

தாய்ப்பால் 6 லிட்ட‍ர் வரை தினமும் இலவசமாக வழங்கும் உன்ன‍த தாய் – அதிசய‌ ஆச்சரிய தகவல்-வீடியோ

10 மாதம் வரை சுமந்து தான் பெற்ற குழந்தைக்கே இன்றைய தாய்மார்களில் சிலர் தாய்ப்பால் கொடுக்க‍ தயங்குகின்றனர். ஆனால்

அமெரிக்காவின் ஒரிகான் பகுதியில் வசிக்கிறார் 29 வயது எலிசபெத் ஆண்டர்சன் (Elizabeth Anderson). ஒரு நாளை க்கு இவருக்கு சுரக்கும் தாய்ப்பால் 6.4 லிட்டர் வரை அப்படி யே இலவசமாக வழங்கி வருகிறார்.

இவருக்கு 2 குழந்தைகளின் தாயான இவர், ‘ஹைப்பர் லேக்டேஷன் (Hyperlactation)’ என்ற குறைபாட்டால் பாதி க்கப்பட்டிருக்கிறார். வழக்கமாக ஒரு தாய்க்குச் சுரக்கும் பாலை விட, 10 மடங்கு அதிகமான பால் இவருக்குச் சுரக்கிறது. அதாவது ஒரு நா ளைக்கு 6.4 லிட்டர் பால் சுரக்கிறது..! இது ஒருவகை குறை பாடு என்றாலும், எலிசபெத் அதை பற்றி கவலைப்படவில்லை. தன்னி டம் சுரக்கும் தாய்ப்பாலை பத்திரப்படுத்தி, தேவைப்படுபவர்களு க்குத் தானமாக வழங்கிவருகிறார். இதுவரை 2,271 லிட்டர் பாலை, தானம் கொடுத்திருக்கிறார்.
 
ஒருநாளில் 10 மணிநேரத்தை இதற்காக செலவிடுகிறார். பாலை சுரந்து சேகரிக்க 5 மணிநேரம், அதை குளிர்சாதன ப்பெட்டிகளில் பதப்படுத்த 5 மணிநேரம் என பிசியாக இருக்கிறார். “என் முதல் மகள் பிறந்தபோது தாய்ப்பாலே சுரக்கவில்லை. குழ ந்தைக்கு பால் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டேன். இரண்டாவது குழந்தை பிறந்த போது, எதிர்பாராத விதமாக பால் அதிகம் சுரக்கும் நிலை உருவாகிவிட்டது. என் குழந்தையால் குடிக்கவே முடியாது, அவ்வளவு வேக மாகப் பால் வெளியேறும். அப்போதுதான் தாய்ப்பாலைத் தானம் செய்ய முடிவெடுத்தேன்.
 
2 குழந்தைகளை கவனித்துக்கொண்டு வீட்டுவேலைகளை யும் செய்து கொண்டு, பாலுக்காக 10 மணிநேரம் செல விடு வது எளிதான விஷயம் இல்லை. ஆனால் முதல் குழந்தை க்குப் பால் இல்லாமல் நான்பட்ட கஷ்டத்தை வேறு எந்த தாயும் அனுபவிக்க க்கூடாது என்ற எண்ணத்தில் இந்த வேலையில் மூழ்கியிருக்கி றேன். 
 
தினமும் 5 வேளை பாலை சுரந்து, பதப்படுத்தி, பாக்கெட்களில் அடைத்து, குளிர் சாதனப் பெட்டியில் வைத்துவிடுவேன். இந்தப் பகுதியில் இருக்கும் இளம் தாய்மா ர்கள், மார்பகப் புற்றுநோயால் மார்பகங்களை இழந்தவர்கள், HIVயால் பாதிக்கப்பட்டவர்கள், ஊட்டச்சத்துக் குறை பாடு உடையவர்கள் என்று தாய்ப்பால் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்கிவருகிறேன். இப்பகுதியின் தேவைக்கு போக எஞ்சியிருக்கும் பாலை கலிபோர்னியா தாய்ப்பால் வங்கிக்குக் கொடுத்து விடுகிறேன்.
 
பாலை மணிக்கணக்கில் எடுக்கும்போது மார்பகம் பயங்கரமாக வலிக்கும். ஆனாலும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் என் பாலைக் குடித்து, ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது வலி மறைந்துவிடும். தாய்ப்பால் என்பது தங்கம் போன்றது. இதை எந்தக் காரணத்துக்காகவும் வீணாக்க முடியாது, வீணா க்கவும் கூடாது” என்கிறார் எலிசபெத். 

English Summer:

Mr. Elizabeth Anderson – Sierra with freezer full of breast milk. A Beaverton, Oregon, mom is helping hundreds of mothers feed their babies by donating gallons of breast milk to a milk bank, our affiliate KATU reports.

Elisabeth Anderson-Sierra has hyperlactation syndrome

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: