தொப்புள் குளியல் – மருத்துவத்தின் மகத்துவம் இது – பயன்தரும் தகவல் – வீடியோ
குளிப்பது என்றால், பொதுவாக கிராமங்களில் இருக்கும் ஆறு, அருவி, குளம், ஏரி, கிணறு போன்ற
இடங்களில் நம்மில் பலர் குளித்திருப்போம். குளிப்பதற்கு சுடு நீரை விட பச்சைநீரே நல்லது அதுவே ஆரோக்கியமும் கூட• அந்த வகையில் இயற்கை மருத்துவ முறை களைப் பற்றியறிந்து இந்த குளியல்படி குளித்து ஓரளவு நோயின்றி வாழ முற்பட லாம்.
இந்த தொப்புள் குளியல் எடுக்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.
மலச்சிக்கல், காய்ச்சல், அல்சர், தலைவலி ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்… ஒரு வாய் அகன்ற அதேநேரத்தில் உயரம் குறைந்த, வட்டமான பெரிய பாத்திரத்திற்குள் சாய்வு நாற்காலியில் அமருவதுபோல் அமரவும். பாத்திரத்தின் ஒரு விளிம்பு பக்கம் சாய்ந்து உட்காரவும். எதிர்விசை விளிம்பின் வெளியே காலை மடித்து தொங்கபோடவும். கால் பாதம் தரை யில் படாதவாறு ஒரு மரத்துண்டை வைத்து அந்த மரத் துண்டி ன் மீது கால் பாதங்களை வைக்கவும். பின்னர் அப்பாத்திரத்தில் பச்சைத் தண்ணீர் ஊற்றச் சொல்லவும். தொப்புளுக்கும் பாதி தொடைக்கும் இடையிலுள்ள அடி வயிற்றுப் பகுதி மட்டும் தண்ணீரில்
நனை யும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். தொப்புளுக்கு மேலேயும் பாதித்தொடைக்கும் மேலேயும் தண்ணீர் ஏறாதவாறு தண்ணீர் ஊற்றினால் போதும்.
பின்னர் அரைமணி நேரம் அப்பாத்திரத்தில் அடிவயிறு மட்டும் தண்ணீரில் நனைந்த வாறு அமர வேண்டும்.ஒரு துணியை அத்த ண்ணீரில் நனைத்து அடிக்கடி கையினால் அந்த ஈரத் துணியை அடிவயிற்றில் நன்கு அழுத்தித் தேய்த்து வரவும்.
இவ்வாறு எடுக்கப்படும் தொப்புள் குளியல் அதாவது இடுப்புக் குளியல் எடுத்தால் அடி வயிற்றுப்பகுதி குளிர்ந்து மலம் நன்கு வெளியேறும். காய்ச்சல்,தலைவலி தணியும்.
இந்த தொப்புள் குளியல் என்கிற இடுப்புக் குளியல் எடுப்பத ற்கென்றே பிரத்தியேக மாக துத்தநாகத் தகட்டில் இடுப்புக் குளியல் தொட்டி தயாரிக்கப்பட்டு, புதுக்கோ ட்டை இயற்கை மருத்துவமனையிலும், பெங்களூர் இயற்கை மருத்து சங்க த்திலும், கோவை மருதமலை காந்திஜீ இயற்கை மருத்துவ மனையிலும் விற்கப்பட்டு வருகிறது. Benefits Of Hip Bath – Hip Bath Benefits
இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்
Filed under: தெரிந்து கொள்ளுங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மருத்துவம், விழிப்புணர்வு | Tagged: தொப்புள் குளியல் - மருத்துவத்தின் மகத்துவம் இது - பயன்தரும் தகவல் - வீடியோ, bath, Benefits, Benefits Of Hip Bath - Hip Bath Benefits, hip, Hip Bath, of |
Leave a Reply