Advertisements

ஒரு பெண் முதன்முறையாக கர்ப்பம் தரிக்கும்போது, அந்த பெண்ணின் உடலில் ஏற்படும் திடீர் மாற்ற‍ங்கள்

ஒரு பெண் முதன்முறையாக கர்ப்பம் தரிக்கும்போது, அந்த பெண்ணின் உடலில் ஏற்படும் திடீர் மாற்ற‍ங்கள்

திருமணமான ஒரு பெண்… தாய்மை அடைகிறார்கள். அது அவளுக்கு சமுதாயத்தி ல் கிடைத்திருக்கும் மிகப்

பெரிய கௌரமாகவே கருதப்படுகிறது. அந்த‌ ஒரு பெண்ணுக்கு, முதல் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டு, ஒரு மாதம் ஆகிறது. ‘அக்கறை காட்டுகிறோம். ஆலோசனை சொல்கிறோம்’ என்ற பெயரில் உறவிலும், நட்பிலும் ஆளாளுக்குக் குழப்புகி றார்கள். உண்மையில் கர்ப்பம் தரித்தலுக்கும் பிரசவத்து க்கும் இடையே கர்ப்பவதிகள் புதிதாக சந்திக்கும் உடற் ச‌லனங்கள் என்னெ ன்ன? அவற்றை எதிர் கொள்வ து எப்படி என்று விளக்கு ங்கள் டாக்டர்…”

டாக்டர் வீணா, மகப்பேறு மற்றும் மகளிர்நல மருத்துவ ர், திருச்சி:

”கடைசி மாதவிடாய் துவங்கி, பிரசவமாகி குழந்தைக்கு பால் புகட் டும் காலம் வரை தாய் மற்றும் சேய் நலத்துக்காககர்ப்பிணியின் உடலில் பல மாற்றங்கள்

வாந்தியற்ற குமட்டல்: 

கர்ப்பத்தை தக்க வைத்துக் கொள்ளும் நடவடிக்கைக்கா க நஞ்சுக்கொடியில் இருந்து சுரக்கும் ‘கொரியானிக் கொனடோட்ராபன் (Chorionic gonadotrophin)என்ற ஹார்மோனால் ஏற்படும் இந்தக் குமட்டல் (மார்னி ங் சிக்னஸ்), பொதுவாக 6-வது வாரம் துவங்கி 12-வது வாரம் வரை இருக்கும். காலை வேளையில் அதிகமாக இருக்கும். உடல் எடை இழப்போடு… சாப்பிடவே முடி யாத அளவுக்கு குமட்டல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். தோன்றுவது இயற்கையே. கர்ப்பம் வயிற்றில் நிலையாக தங்குவது, சிசுவுக்கான உணவூ ட்டம், பிரசவத் துக்கு தாயின் தேகத்தை தயார்படுத்து வது போன்ற காரணங்களுக்காக இவை அவசியமாகின்றன. அவற்றில் முக்கிய மானவற்றை மட்டும் இங்கே பட்டியலிடு கிறேன். கவனமாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! அவை…

அடிக்கடி சிறுநீர்: 

கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை அளவில் பெரிதாகும் கர்ப்பப்பை , மூத்திரப்பை யை அழுத்துவதால், சிறுநீர் கழிப்பு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இரவு உறக்கத்தை அதி கம் பாதிப்பதாக இருந்தால், எட்டு மணிக்கு மேல் அதிக நீர் அருந்துவதை குறைத்துக் கொள்ளலாம்.

மார்பகத்தில் வலி: 

முதல் முறையாக கர்ப்பம் தரிப்பவர்கள், மூன்றாவது மாதம் வரை மார்பகத்தில் வீக்கத்தையும், தொட்டாலே வலியையும் உணர்வார்கள். தாய்ப்பாலுக்கான இய ற்கையான தகவமைப்புக்காக இந்த மாற்றங்கள். மேலும், கர்ப்ப காலத்தில் உடலி ல் நீர் அதிகம் சேகரமாவது காரணமாகவும் மார்பிலும் வீக்கம் இருக்கும். ஏதேனும் கட்டிகள் உணரப்பட் டாலோ, மார்புக் காம்பில் ரத்தம் வந்தாலோ டாக்டரை அணுக வேண்டும்.

அடிவயிற்று வலி: 

கர்ப்பப்பை வளர்ச்சி, கர்ப்பப்பை இணை ப்புகளின் இழுவை … இவையெல் லாம் அடிவயிற்றில் வலியாக உணரப்படுகிறது. முதல் மாதத்தில் இருந்து பிர சவம் வரை பொறுத்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு இந்த வலி இரு க்கும். சிலருக்கு வலி கூடுதலாக உணரப்படலாம். ரத்தப்போக்கு தென்பட்டாலோ… வலி தாங்க முடியாததாக இருந்தாலோ மருத் துவப் பார்வை அவசியம்.

வெள்ளைப்படுதல்

கர்ப்பத்தையட் டி கர்ப்ப உள்ளுறுப்புக ளில் ரத்த ஓட்டம் அதிகமாவது, கர்ப்பவாய் சுரப்பிகளை அதிகம் சுரக்கச் செ ய்வது… இவையெல்லாம் கர்ப்பவதிக ளின் வெள்ளைப்ப டுதலுக்கு காரணமாகிறது. துர்வாடை மற்றும் அரிப்பு இல்லாதவரை இதைப் பொருட்படுத்த தேவை யில்லை. தானாகவே சரியாகிவிடும்.

வரி விழுதல்: 

உடல் எடை கூடுவதால் மார்பகம், வயிறு, தொடை போன்ற இடங்க ளில் தோல் விரி ந்து, வரி வரியாக விழுவதைத் தவிர்க்க முடியாது. இது பிரசவத்து க்குப் பிறகு 75% மறைய வாய்ப்புண்டு. க்ரீம்களும் ஓரளவு க்கு உதவும்.

எடை எகிறுவது: 

பத்து மாதத்துக்குள் அதிகபட்சமாக 12.5 கிலோ வரை எடை அதிகரிப்பது இயல்பானது. அதிகரிக்கும் ரத்த நாளங்களாலும், குழந்தை, நஞ்சுக்கொடி, பனிக்குடம் இவற்றின் எடையாலும் கர்ப்ப வதிகளின் எடை மேலும் அதிகமாகும். தாய்ப்பால் புக ட்டல் காலத்துக்குப் பின் எடை குறைப்புக்கான ஆலோசனைக ளைப் பின்பற்றலாம்.

மேல்மூச்சு வாங்குவது: 

ஹார்மோன்களின் செயல்பாட்டாலும், உள்ளுக்குள் பெருக்கும் கர்ப்பப்பை காரண மாக நுரையீரலுக்கான இடம் குறைவதாலும் இப்படி மூச்சு வாங்கு கிறது. ஆஸ்துமா இருந்தால் தவிர, இதைப் பொ ருட்படுத்தத் தேவையில்லை.

மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ்: 

கர்ப்பவதிகளின் மலச்சிக்கலுக்கு முதல் காரணம், கருச் சிதைவை தடுப்பற்காக செயல்படும் ‘ப்ரோ ஜெஸ்டிரோன்’ ஹார்மோனால் செரிமானத்திறன் குறையலாம். மற்றொரு முக்கிய காரணம், இரும்புச்சத்து மாத்தி ரைகளின் பக்க விளைவு. அதி கரிக்கும் மலச்சிக்கலால் ‘பைல்ஸ்’ ஏற்படலாம். இது பிசவத்துக்குப் பின் சரியாகக் கூடியது என்றாலும் கர்ப்பக்கால மலச்சிக்கலை ‘பைல்ஸ்’ அளவுக்கு முற்றவிடாது … நீர் அருந்துவது, நார்ச் சத்து உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது. இரும்புச்சத்து மா த்திரைகள் காரணமெனில்… அவற்றைக் குறைத்து க்கொண்டு, அதை ஈடுகட்ட இயற்கை உணவு களை அதி கம் எடுத் துக் கொள்ளலாம்.

நெஞ்செரிச்சல்: 

கர்ப்பப்பை அழுத்த த்தால் வயிற்றில் இருக்கும் அமிலம் உணவுக் குழாய்க்குள் செல்வதால் உணரப்படுவது இது. சாப்பிட்டதும் படுப்பதை தவிர்ப்பது, வாக்கிங் செல்வது, படுக்கையில் தலைக்கு இரண்டு தலையணைகள் வைத்துக் கொள்வது போன்ற வற்றால் இதை தவிர்க் கலாம்.

மூச்சடைப்பு

உடல் முழுக்க ரத்த ஓட்டம் அதிகமாவது இயல்பு. மூக்குக்குள்ளும் ரத்த ஓட்டம் அதி கமாகி மூக்சடைப்பு தென்படும். பெரும்பா லானவர்கள் இதை ‘சளி’ என்றே தப்பாக அர்த்தம் கொ ள்வார்கள். எளிய சொட்டு மருந்துகள் இதற்கு போதும்.

முதுகுவலி மற்றும் கால் வீக்கம்

இடுப்பு எலும்பு விரிவடையத் துவங்குவதாலும், உட்காரு ம்போது அது பிசகு செய்வதாலும் முதுகு வலி ஏற்படும். கர்ப்பப்பை பெரிதாவ தால், இடுப்புப் பகுதியின் ரத்தக் குழா ய்களில் அழுத்தம் பாய்வதால் கால்களில் வீக்கம் தெரியும்.

போதுமான ஓய்வு, கால்களை சற்று உயரமாக இருத்திக் கொள்வது போன்றவை மூலம் வீக்கத்தை மட்டுப்படுத்தலாம். தொடர்ந்தால், உடனடியாக உயர் ரத்தம் அழுத்தம் இருக்கிறதா என்று மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளலாம்.’’

டாக்டர் வீணா,
மகப்பேறு மற்றும் மகளிர் நலமருத்துவர், திருச்சி

****

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: