Advertisements

கல்யாணத்துக்குக் காத்திருக்கும் கன்னிப் பெண்களுக்கான சில‌ சாதகக் குறிப்புக்கள்

கல்யாணத்துக்குக் காத்திருக்கும் கன்னிப் பெண்களுக்கான சில‌ சாதகக் குறிப்புக்கள்

பெற்றோர்கள் மற்றும் பெரியோர்கள் அவர்களது வீட்டு பிள்ளைகளுக்கு அல்ல‍து இளம்பெண்களுக்கு திருமணம் முடித்து வைக்க‍

தொடங்கும்போது உடனே அவர்களது ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஜோதிடரிடம் செல்வது நாம் அறிந்த ஒன்றே!

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்பார்கள் ஆன்றோர்கள். நம் வாழ்வில் எண்களுக்கான பங்களிப்பு மிக முக்கியமானது. இந்த அடிப்படையிலேயே எண்ணி யல் ஆய்வாளர்கள் பலரும் எண்கணிதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து ள்ளார்கள். எண்கணித ஜோதிடத்தின் முக்கிய அங்கங்களாக பிறவி எண்ணையும் விதி எண்ணையும் குறிப்பி டுவார்கள். இவற்றைப் போன்று லக்ன எண்ணையும் கவனத்தில் கொண் டால், விரிவான பலாபலன்களை அறிய முடியும் என்கிறார்கள், சில எண்கணித ஆய்வாளர்கள்.

இங்கே, லக்ன எண் அடிப்படையில்… கல்யாணத்துக்குக் காத்திருக்கும் கன்னிப் பெண்களுக்கு  அவர்களுடைய வருங்கால கணவருடைய இயல்புகளை அறியும் விதமாக ஓர் அட்டவணையையும், உரிய பலாபலன்களையும் கொடுத்திருக்கிறோ ம். பலனை அறிய விரும்புவோர் முதலில் பெண்ணுக்கான லக்னத்தை தெரிந்து கொள்ள வேண்டும் (பிறந்த வேளையில் சூரியன் எந்த ராசியில் இருக்கிறாரோ அதுவே லக்னம் ஆகும்). ஜாத கத்தில்- ராசிக்கட்டத்தில் ‘ல’ என்ற குறிப்பை வைத்து லக்னத்தை அறிய லாம். உதாரணமாக ‘ல’ எனும் குறியீடு மேஷ ராசிக்கான கட்ட த்தில் இருந்தால், அந்த ஜாதகரின் லக்னம் மேஷம் ஆகும் (உதாரணப் படமும் இங்கே இடம்பெற்றுள்ளது).

லக்னத்தை அறிந்துகொண்டீர்களா? இனி, அட்டவணையில் உங்கள் லக்னத்துக்கு உரிய லக்ன எண், கணவர் எண், அதிபதியை கவனியுங்கள். உதாரணமாக உங்கள் லக்னம் மேஷம் எனில்… லக்ன எண் – 9; கணவர் எண்–6; கணவருக்கான அதிபதி சுக்ரன். ஆக ‘சுக்ரன்’ தலைப்பிலான பலா பலன்கள், உங்களின் கணவரது இயல்பை ச் சொல்லும்.

இனி பலாபலன்களை தெரிந்துகொள்ளலாமா…

சூரியன்:

கள்ளம் கபடமறியா கும்ப லக்னக்காரர்களுக்கு கணவருக்குரிய எண் சூரியனை குறிக்கும் ஒன்றாம் எண்ணாகும். இவர்களுக்கு அமையும் கணவர் முன்கோப க்காரர். இவரை புரிந்துகொள்வது கடினம். குடும்பப் பற்று உள்ளவர். பெரும்பாலு ம்பொருத்தமில்லாத கணவரே அமைவர். சித்தி ரை மாதம் பிறந்த பெண்கள் எனில், கணவருடன் அடிக்கடி வாக்கு வாதங் கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஐப்பசி மாதம் பிறந்தவர்கள் எனில், உங்கள் பேச்சுக்கு அடங்கிநடக்கும் கணவர் வாய்ப்பார்.

பரிகாரம்:

தினம் சூரிய நமஸ்காரம் செய்வது சிறப்பு. இதனால், அன்பான கணவர் வருவார். சூரிய பகவானுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்வதும், சூரிய னார் கோயில் சென்று தரிசித்து வருவதும், நல்ல வாழ்க்கைத் துணையை ப் பெற்றுத் தரும்.

சந்திரன்:

எதிலும் முன்யோசனை, தன்னம்பிக்கைக் கொண்ட மகர லக்னக்காரர் களுக்கு கணவரின் எண் சந்திரனின் இரண்டாம் எண்ணாகும். பொருத்த மான கணவர் கிடைப்பார். வாழ்க்கையில் மற்றவர்களைவிட ஒருபடி மேலே இருக்கவேண்டும் எனும் துடிப்பும், முயற்சியும் கொண்டவராக திகழ்வார். நீங்கள் உங்களின் பிடி வாதக் குணத்தை மாற்றிக்கொண்டால் குடும்பம் மேன்மை பெறும். ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் எனில், எதி ர்பார்ப்புகளை நிறை வேற்றும் நல்ல கணவர் வாய்ப்பார். கடக ராசியில் பிறந்த பெண்கள் எனில், உங்கள் கணவர் கற்பனா சக்தி மிகுந்தவராகத் திகழ்வார்.

பரிகாரம்:

மூன்றாம் பிறை வழிபாடு, அழகான – அன்பான கணவர் கிடைக்கச் செய் யும். சந்திரனார் கோயிலுக்குச் சென்று அபிஷேகம், அர்ச்சனை செய்வ தால் தீர்க்க சிந்தனையுள்ள கணவர் வாய்ப்பார்.

குரு:

எதையும் எளிதில் கிரகித்துக்கொள்ளும் மிதுன லக்ன பெண்கள் மற்றும் கன்னி லக்னக்காரர்களுக்கு கணவரின் எண் குருவின் மூன்றாம் எண்ணா கும். மிதுன லக்னக் காரர்களுக்கு தாமத திருமணம்தான் சிறப்பான கண வரைத் தரும். குடும்ப வாழ்க்கை நல்ல முறையில் அமையும். கன்னி லக் னக்காரர்களுக்கு இன்பகரமான குடும்ப வாழ்க்கை கிடைக்கும். பிரியமா ன, அடக்கமான கணவர் அமைவார். சந்தர்ப்பத்துக்கு ஏற்ப நடந்து கொள்வர்.

பரிகாரம்:

மிதுன, கன்னி லக்னக்காரர்களுக்கு குரு பாதகாதிபதி என்பதால் வியாழ ன்தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள். திருச்செந்தூர் முரு கனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.

புதன்:

தனுசு மற்றும் மீன லக்னக் காரர்களுக்கான கணவரின் எண் புதனின் ஐந் தாம் எண்ணாகும். புதன் இவர்களுக்கு பாதகாதிபதியாக வருவதால், தாமதத் திருமணம் நல்ல கணவரைத் தரும். இல்லையெனில் அதிருப்தியுடன் வாழ நேரிடும். கணவர் அறிவாளி. அவர் விருப்பப்படியும் சொல்படியும் நடந்தால் நன்மை. அவரது கருத்துக்கு இணைந்து செயல்பட்டால், வாழ்க்கை இனிக்கும்.

பரிகாரம்:

மதுரை ஸ்ரீமீனாட்சியம்மையையும் ஸ்ரீசொக்கநாதரையும் வழிபட்டு வாருங்கள். நவக்கிரகத்தில் புதபகவானை வழிபடுவதால் நன்மைகள் வந்து சேரும்.

சுக்கிரன்:

குடும்பபொறுப்புமிக்க மேஷலக்னக்காரர்கள் மற்றும் சுயமரியாதை மிக்கவிருச்சிக லக்னக்காரர்களுக்கான கணவரின் எண், சுக்ரனுக்கு உரிய ஆறாம் எண்ணாகும். மேஷ லக்னம் எனில், குடும்பப் பற்று மிக்க கணவர் வந்துசேர்வார். அவருக்கு பெண்கள் விரோதிகளாக இருப்பர். குடும்பப் பொறுப்புக்களை நீங்களே ஏற்க வேண்டியது இருக்கும். விருச்சிக லக்னக்காரர்களுக்கு கணவரின் ஒத்துழைப்பு கிடைக்காது. உறவினர்களால் கணவரிடம் அந்நியோன்யம் குறையும்.

பரிகாரம்:

ஸ்ரீரங்கநாதர் – ஸ்ரீரங்கநாயகி தரிசனம் நன்மை அளிக்கும். நல்ல பண்புள்ள கணவர் வாய்ப்பார். வெள்ளிக்கிழமைகளில் அருகில் உள்ள கோயிலுக் குச்சென்று நவ க்கிரகங்களில் சுக்ரபகவானுக்கு அர்ச்சனை செய்து வழி பட்டால், வரப்போகும் கணவருக்கு வாழ்வில் வெற்றி கிடைக்கும்.

சனி:

எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய கடக லக்னக்காரர்கள் மற்றும் சுதந்திர விரும்பி களான சிம்ம லக்னக்காரர்களின் கணவருக்கான எண் சனியின் எட்டாம் எண் ஆகும். கடக லக்னக்காரர்களுக்கு மாற்று சிந்தனையும், பாசமும் மிகுந்த கணவர் வாய்த்தாலும் திருப்தி அடையமாட்டார்கள். சிம்ம லக்னக்காரர்களுக்கு மனதுக்கு இனிய கணவர் வாய்ப்பார். உங்கள் பேச்சுக்கு மறுபேச்சு பேச மாட்டார். நீங்களும் அவரிடம், உங்களின் தூய அன்பைப் பரிமாறிக்கொண்டால், வாழ்வில் நடப்ப தெல்லாம் நன்மையா கவே அமையும்.

பரிகாரம்:

காக்கைக்கு சனிக்கிழமைதோறும் தயிர்சாதத்தில் கருப்பு எள் கலந்து படையுங்கள். இதனால் நல்ல கணவன் அமைவார். திருநள்ளாறு சனிபக வான் தரிசனமும் வழிபாடும் நல்ல நிலையில் உள்ள கணவன் அமைய வழிவகுக்கும்.

செவ்வாய்:

திடமான மனதுடைய ரிஷப லக்னக்காரர்கள் மற்றும் உழைத்து வெற்றி பெறும் துலா லக்னக்காரர்களுக்கான கணவரின் எண் செவ்வாய் ஆதிக்கம் பெற்ற ஒன்ப தாம் எண்ணாகும். முன்கோபம், பிடிவாத குணம்கொண்ட கணவர் அமைவார். அவர்கள், நினைத்ததைச் சாதிக்கும் வல்லவர்களாகத் திகழ்வார்கள். ரிஷப லக்ன க்காரர்களின் கணவர் சுறுசுறுப்பானவர். எனினும் எடுத்தெறிந்து பேசக்கூடியவராக இருப்பார். ஆனாலும் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாகவே இருக்கும். துலா லக்ன க்காரர்களுக்கு உங் கள் மனதுக்கு இனிய கணவர் வாய்ப்பார். அவர்களுடைய சாமர்த்திய த்தால் குடும்பம் செழித்துச் சிறக்கும்.

பரிகாரம்:

பழநி முருகனை வழிபட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். சங்கடஹர சதூர்த்தி விரதமிருப்பதும் நலம். செவ்வாய்க் கிழமைகளில் ராகு காலத்தில் ஸ்ரீதுர்கை அம்மனை வழிபட்டு வந்தால், நல்ல குணசாலியும் திறமை சாலியுமான கணவர் வாய்ப்பார்.

=> சக்தி, விகடன்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: