Advertisements

ஸ்ரீ கிருஷ்ணரின் முன் (பூர்வ) ஜென்மங்கள் – ஒரு சிறு பார்வை

ஸ்ரீ கிருஷ்ணரின் முன் (பூர்வ) ஜென்மங்கள் – ஒரு சிறு பார்வை

மகாபாரதத்தில் தர்மத்தின் பக்க‍ம் அதாவது பாண்டவர்கள் பக்க‍ம் நின்று, அர்ஜுன னுக்கு சாரதியாக

இருந்து, அதர்மத்தில் இருந்து தர்மத்தை காப்பாற்றியவர். மேலும் மகாபாரத போரி ன்போது, அர்ஜுனனுக்கு திடீரென்று ஏற்பட்ட‍ ஒரு வித மாயையால் போர் புரிய மறுத்து, கௌரவர்கள் பக்க‍ம் நின்ற பீஷ்மர், துரோணாச்சாரியார், கிருபா ச்சாரியார் போன்றோர்களிடம் மண்டியிட துணிந்தார். அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனை, அரவனைத்து அவனுக்கு கீதா உபதேசம் செய்து, கௌரவ படையை போரிட்டு வென்றிட உதவினார். அத்தகைய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் முன் (பூர்வ) ஜென்ம ங்கள் குறித்த சிறு பார்வைதான் இது.

1. த‌சரத சக்ரவர்த்திக்கு மகனாக பிறந்து சீதையை மணந்து, கைகேயியின் வரத்தா ல், சீதை மற்றும் லஷ்மணனோடு வனவாசம் சென்றவர். வனவாசத்தில் இராவண னால் சீதை கடத்தப்பட்டார். பின்பு வானர படையுடன் சென்று இராவணனை வீழ்த்தி சீதையை மீட்டதோடு அல்லாமல் வனவாசம் முடிவுற்று பட்டாபிஷேகம் ஏற்று மன்ன‍ரானார்.

2. ஜமத்கினி என்கிற‌ முனிவருக்கும், ரேணுகை என்கிற இஷிபத்தினிக்கும் மகனாக ப்பிறந்து பரசுராமர் என்ற பெயருடன், பிராமணர்களைக் காக்க மறுத்த க்ஷத்திரிய குலத்தைப் பூண்டோடு அழிக்க முற்பட்ட ஜென்மம். இது

3. காசிபன், அதிதி ஆகியோருக்கு மகனாக‌ வாமன உருவில் பிறந்து, மாபலி எனும் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் யாசித்து தானம் அவரை வதை செய்த பூர்வ ஜென்மம் வாமன ஜென்மம்.

4. அதர்மத்தின் தலைவனாக இரண்ய‌ கசிபு என்கிற‌ ஆணவம் மிக்க‍ கொடுங்கோல் மன்ன‍னை கொல்ல சிங்க முகத்துடனும் நகங்களோடும் மனித உடம்போடு கூடிய‌ தோற்றத்தில் தோன்றியதோடு. அந்த கொடுங்கோல் மன்னனின் மகனும் தர்மத்தி ன் வழி நடப்பவனுமான பிரகாலாதனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்ப‍டைத்தோடு தரம்த்தை நிலைநாட்டும் பொறுப்பையும் தந்த ஜென்மம் தான் இந்த நரசிம்மர் ஜென்மம்

5. பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனுடன் பன்றி உருவத்தில் ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்று தருமத்தை நிலைநாட்டிய ஜென்மமே இந்த வராக‌ம்

6. தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைவதற்கு மத்தாக மந்தார மலையைத் தூக்கிக்கொண்டு செல்லும்போது, பாரம் தாங்காமல் கீழே போட்டு விட, பலர் மாண்டு போயினர். அப்போது மகாவிஷ்ணுவே அங்கு தோன்றி, அந்த மலையைத் தன ஒரு கையால் ஏந்திப் பாற்கடலின் நடுவே வைத்தார். வாசுகி என்ற பாம்பு மலையைச் சுற்றிக்கொண்டது. தேவர்கள் பாம்பின் வாளையும், அசுரர்கள் தலையையும் பிடித்துப் பாற்கடலைக் கடைந்தபோது, மந்தார மலை பாற்கடலில் அமிழ்ந்து மூழ்கியது. அச்சமயத்தில் ஆமை கடலுக்குள் புகுந்து தன முதுகால் மலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டது.அந்த ஆமை ஜென்மமே கூர்ம (ஆமை) ஜென்மம் ஆகும்.

7. வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த சோமு காசுரனைக் கொன்றபோது திருமால் நான்கு கைகளுடன் மேற்பாகம் தேவருபமா கவும் கீழ்ப்பாகம் மீனின் உருவாகவும் கொண்டவராகத் தோன்றி அந்த‌ வேதங்க ளை மீட்டெடுத்து தேவர்களையும் காப்பாற்றிய ஜென்மம்தான் இந்த மச்ச ஜென்மம் ஆகும்.

=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி (vidhai2virutcham@gmail.com) 

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: