Advertisements

நிரந்தரமாக மன நிம்மதி பெறுவதற்கான எளிய வழிகள் – வாழ்வியல் வி(த்)தைகள்

நிரந்தரமாக மன நிம்மதி பெறுவதற்கான எளிய வழிகள் – வாழ்வியல் வி(த்)தைகள்

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி, புதிய பறவை சிவாஜி கணேசன் அவர்களைப் போல

புலம்பும் பலரை நாம், நம் அன்றாட வாழ்க்கையில் பார்த்திரு க்கிறோம். மனநிம்மதி என்பது நாமாக உருவாக்கிக்கொள்ள வேண்டிய ஒன்று. அந்த மன நிம்மதியை பெறுவதற்கான எளிய வழிகள்

மன நிம்மதி பெறுவது எப்படி?

உங்கள முன்னேற்றத்தை எவரும் ஆக்கவோ, அழிக்கவோ முடி யாது. உங்களது தொழிலும், உங்களது வாழ்கையும் உங்கள் முன்வினையாலேயே உருவாக்கபடுகிறது. தீதும் நன்றும் பிறர் தர வாரா! ஒருபோதும் பிறர் மீது பொறாமை கொள்ளாதீர்கள் அல்லது உங்கள் துன்பத்திற்கு அடுத்தவரை பழிக்காதீர்கள்.

சூழ்நிலைக்கு ஏற்ப நாம் மாற வேண்டும்

உங்கள் அமைதியை குலைக்கும் உங்களது ஒரு சூழ்நிலை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். சூழ்நிலையை மாற்று வதற்கு பதிலாக நீங்கள் உங்களையே இப்பொழுதைவிட நல்ல நிலைமைக்கு மாற்றி அமையுங்கள். நீங்கள் மென்மே லும் தூய்மை அடையும்போது சூழ்நிலையும் மென்மேலும் ஒத்தவிதத்தில் வளர்ச்சி அடையும் .முயற்சி செய்து பாருங்கள்!

பொறுமை தரும் பலம்

எது நடந்தாலும் அதை பொருத்து கொள்ளுங்கள்.எதைக் குணப்படுத்த முடியாதோ அதை பொறுத்தே ஆக வேண்டும். மகிழ்ச்சியுடன் சக்தி உங்களிடம் அதிகரிக்கும்.

பொறுப்புகளை என்ன செய்வது?

பொறுப்புகளை தட்டி கழிக்காதீர்கள்,தப்பி ஓடப் பார்க்காதீர்கள்.அப்படி செய்தால் உங்களுக்கு மன அமைதி கிடைக்காது. அதிகமான கவலைக ள்தான் வந்துசேரும். ” நான் செய்கிறேன்” என்ற ஆணவத்துடன் மென்மேலும் பொறுப்புகளை கூட்டி கொண்டு போகாதீர்கள். (இ துதான் வம்பை விலைக்கு வாங்குவது).அதிக நேரத்தை பிரார்த்த னை, வழிபாடு மற்றும் த்யானத்தில் செலவிடுங்கள். மனமே இல்லாத போது தான் பூரண திருப்தி கிட்டுகிறது. மனம் என்பது எண்ணங்களின் குவியலே. எண்ணமின்மைதான் பூரண அமைதி நிலவும் மிக உயர்ந்த நிலையாகும்.

தியானம் என்னும் அற்புத மருந்து

ஒழுங்கான தியான நேரத்தை கடைபிடியுங்கள்.தியானம் மனதை அமைதிப்படுத்துகிறது. மனதில் சஞ்சலமற்ற தன்மையை உண்டா க்குகிறது. முன்போல மனம் அலைந்து திரியாது. தியானம் உங்க ளது பல்வேறு திறமைகளை வளர்த்து குறைந்த நேரத்திலேயே வேலைகளை செய்வதற்கான ஆற்றலை வளர்க்கிறது.

=> சித்தையன் சிவகுமார்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: