Advertisements

மொபைல்போன் புதிய அறிமுகம்: Moto G5S, G5S Plus மொபைல்களில் என்ன ஸ்பெஷல்?

மொபைல்போன் புதிய அறிமுகம்: Moto G5S, G5S Plus மொபைல்களில் என்ன ஸ்பெஷல்?

புதிய அறிமுகம்: Moto G5S, G5S Plus மொபைல்களில் என்ன ஸ்பெஷல்?

லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமான மோட்டோரோலா Moto G5S, G5S Plus ஆகிய

இரண்டு மாடல் ஸ்மார்ட் மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்த இரண்டு ஸ்மார்ட் மொபைல்களுமே அமேசான் வலைத்தளத்தில் மட்டுமே பிரத்யேகமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவை கடைகளில் கிடை க்காது. நேற்று நள்ளிரவு முதல் இந்த புதிய மொபைல்கள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் இவற்றில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் குறித்து இத்தொகுப்பில் காண லாம்.

ஆல் மெட்டல் யுனிபாடி டிசைன் அடிப்படையில் அமைந்துள்ள Moto G5S மொபைலி ல் ஆண்ட்ராய்ட் 7.1.1 Nougat (Out of box) இயங்குதளம் உள்ளது. 157 கிராம் எடையுடன், 8.2 மிமீ அகலம் கொண்டதாக வந்துள்ளது.

Moto G5S சிறப்புகள்: 

டிஸ்பிளே – 5.2 இஞ்ச் (1080*1920 pixels)
சிம் – ஒன்று (நானோ) / இரண்டு (நானோ, dual standby)
இயங்குதளம் (OS) – Android 7.1 (Nougat)
மெமரி – 32 GB, 3 GB RAM
பின் கேமரா – 16 MP (led flash)
முன் கேமரா –  5 MP (led flash)
பேட்டரி – 3000 mAh லித்தியம் அயன்Moto G5S மொபைலில் 3 ஜிபி RAM மெமரியுடன் கூடிய ஆக்டா-கோர் 1.42GHZ Qualcomm Snapdragon 430 chipset உள்ளது, இதன் உட்புற சேமிப்புத் திறன் 32GB ஆகும். இதனை 128GB வரை உயர்த்திக்கொள்ளலாம்.

இதில் 3000mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி டர்போ பவர் எனும் அம்சம் கொண்டதாக உள்ளது. 6 மணி நேர பயன்பாட்டிற்கு தேவையான ஆற்றல், 15 நிமிட சார்ஜில் கிடைத்துவிடும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Moto G5S Plus மொபைல் 5.5 இஞ்ச் ஸ்கிரீனுடனும், Moto G5S மொபைல் 5.2 இஞ்ச் ஸ்கிரீனுடனும் வெளிவந்துள்ளது. இது 168 கிராம் எடை கொண்டதாகவும், 8 மிமீ அகலம் கொண்டதாகவும் உள்ளது.

இதில் Moto G5S Plus மொபைலில் முக்கிய சிறப்பம்சமாக பார்க்கப்படுவது இதன் பின்புற கேமராவே.

இதில் இரண்டு 13MP சென்சார்கள் உள்ளன, ஒன்று மோனோகுரோம் லென்ஸ் மற்றொன்று RGB சென்சார் ஆகும்.  

Moto G5S Plus சிறப்புகள்: 

டிஸ்பிளே – 5.5 இஞ்ச் (1080*1920 pixels)
சிம் – ஒன்று (நானோ) / இரண்டு (நானோ, dual standby)
இயங்குதளம் (OS) – Android 7.1 (Nougat)
மெமரி – 64 GB, 4 GB RAM
பின் கேமரா – 16 MP (led flash)
முன் கேமரா –  8 MP (led flash)
பேட்டரி – 3000 mAh லித்தியம் அயன்Moto G5S Plus மொபைலில் 4 ஜிபி RAM மெமரியுடன் கூடிய ஆக்டா-கோர் 1.42GHZ Qualcomm Snapdragon 625 chipset உள்ளது, இதன் உட்புற சேமிப்புத் திறன் 64GB ஆகும். இதனை 128GB வரை உயர்த்திக்கொள்ளலாம்.

விலைவிபரம்:

Moto G5S – ரூ.13,999
Moto G5S Plus – ரூ.15,999

ns7

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: