Advertisements

காதலிக்க… என்னென்ன வேண்டும் – சுவாரஸ்ய குறிப்புக‌ள்

காதலிக்க… என்னென்ன வேண்டும் – சுவாரஸ்ய குறிப்புக‌ள்

காதலிக்க என்னென்ன வேண்டும் – சுவாரஸ்ய குறிப்புக‌ள் (What qualities do you love?)

உயிருள்ள‍ உயிரினங்கள் எதுவாக இருந்தாலும் அதாவது மனிதர்களாகவோ, அல்ல‍து

மிருகங்களாகவோ அல்ல‍து தாவரங்களாகவோ இருந்தாலும் அங்கே கண்டிப்பாக காதல் இருந்தே தீரும். அந்த காதல் என்ற உறவிற்குள் நுழைவதற்கு முன்பு அதில் உள்ள சில நிதர்சன ங்களை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். உங்களுக்கு தெரிந்த சில நண்பர்களின் காதல், திரைப்படங்களில் வரும் காதல் என சிலவற்றை கண்டு அதிர்ச்சியிலும், பயத்திலும் இருப்பீர்கள். அனைத்து விஷயத்திலும் சரியாக இருக்கும் மனிதர்களை காண முடி யாது.

ஒரு ஆண், ஒரு பெண்ணை காதலிக்கும் முன்பு அல்ல‍து ஒரு பெண், ஒரு ஆணை காதலிக்கும்போதே அந்த உறவுகளில் சில ஏற்ற இறக்க ங்கள் இருப்பது இயல்பு தான். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டி யது அவசியம்.

1. எதுவுமே நிலையில்லை! (Nothing has happened)

இந்த உலகில் எதுவுமே நிலையானது இல்லை. ஒரு சில சமயங்களி ல் ஒருவரை இழக்க வேண்டும் என்றால் இழந்துதான் ஆகவேண்டும். அதேபோல ஒருவரால் எல்லா சூழ்நிலைகளிலும் உங்களுக்கு பிடித்த மாதிரியாகவே இருக்க முடியாது.

2. யாரையும் மாற்ற முடியாது! (No one can change)

நீங்கள் எந்த அளவுக்கு சிரமப்பட்டாலும் சரி, உங்களால் யா ரையும் மாற்ற முடியாது. ஒவ்வொருவருக்கும் அவர்களது தனித்திறன் என்றுள்ளது, அதை மாற்றிக்கொள்ள சொன்னால் அது அவர்களுக்கு  மிக கடினமான ஒன்றாக இருக்கும்.

3. உங்களையும் மாற்ற முடியாது! (You cannot change yourself)

உங்களால் யாருடைய குணத்தையும் மாற்ற முடியாது என்பது போல யாரலும்உங்களையும் மாற்றமுடியாது. என்னை நீ மா ற்றி விட்டாய், உன்னால் தான் நான் இப்படி செய்கிறேன் என்று கூறுவது தவறு. உங்களது மாற்றத்திற்கு உங்களை தவிர வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது. உங்களை ஒருவர் வந்து மாற்ற வேண்டும் என்று நினைப்பதும் தவறானது, அது இயலாததும் கூட..!

4. இதை செய்யாதீர்கள் (Don’t Do this)

உங்களது துணையின் நன்மைக்காக நீங்கள் ஒரு விஷயத்தை செ ய்கிறீர்கள் என்றால் முழு சந்தோஷத்துடன் செய்யுங்கள். அவராவ து மகிழ்ச்சியாக இருக்கட்டும் என நினைத்து, எதையும் செய்ய வே ண்டாம். இது பின்னாளில் உங்களது உறவில் விரிசல் உண்டாக காரணமாக அமையும்.

5. பொய் சொல்லாதவர்கள் இல்லை! (There are no people who do not lie)

இன்று அனைத்து விஷயத்திலும் சரியானவர்கள் யாருமே இல்லை! உங்களது துணை ஒரு பொய் சொன்னால் அதன் பின்னால்உள்ள காரணத்தை பாருங்கள். அந்த பொய் உங்கள து உறவை முறிப்பதற்காக சொல்லப்பட்டது என நினைக்காதீ ர்கள். உறவில் விரிசல்வரகூடாது என்பதற்காக சொல்லப்ப ட்டது என எடுத்துக்கொ ள்ளாமே!

6. ஏற்றுக்கொள்ளுங்கள்! (Accept All)

உண்மையான காதல் நிறை, குறை என இரண்டையுமே ஏற்றுக்கொள்ளும். இத னை இருவருமே செய்ய வேண்டும். ஒரு வரின் நிறைகளை மட்டுமே காதலிப்பது தவறு. நிறை இருக்கும்இடத்தில் குறையும் சேர்ந்தே இருக்க தான் செய்யும். இதனை ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

7. ஓடி விடாதீர்கள்! (Do not run away)

உண்மையான காதலில் சில சவால்கள் இருக்கத்தான் செய்யும்! அதை சமாளிக்க முடியாமல் ஒளிந்துஓடுவது தவறான ஒன்று. எத்தனை தடைகள் வந்தாலும் நின்று போராடுவேன் என்று இருக்க வேண்டும். ஒளிந்து ஓடினால் உங்களை யாரும் நம்பமாட்டார்கள்.

8. உங்கள் மகிழ்ச்சிக்கு நீங்களே காரணம்! (You are responsible for your happiness)

உங்களது மகிழ்ச்சிக்கு நீங்கள் மட்டும்தான் காரணமாக இருக்க வேண்டும். உங்கள து சந்தோஷம் உங்களது துணைதான் என்று நினைக்காதீர்கள். ஒரு வேளை உங்கள் துணை ஒருநாள் உங்களைவிட்டு சென்று வி டலாம், அப்போது உங்களுக்கு உலகமே இருண்டதாக தோன்றும்.

9. இது தான் காதல்! (This is Love)

மற்றவர்கள் இப்படி காதலிக்கிறார்கள், அப்படி காதலிக்கிறார்கள், நமது காதல் ஏன் இப்படி இருக்கிறது என நினைப்பது தவறு…! உறவில் சில ஏற்ற இறக்கங்கள், மேடு, பள்ளங்கள் இருப்பது இயல்பு தான். அதை எல்லாம் கடந்து வர வேண்டும். எல்லாம் ஒருநாள் மாறும் என்ற நம்பிக்கை வேண்டும். அதை விட்டுவிட்டு என் காதல் மட்டுமே ஏன் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இல்லை என்று நினைக்க கூடாது!

=> கிசுகிசு கீதா

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: