Advertisements

BIGG BOSS – பிக் பாஸ் – பெருந்தலைவன்

பிக் பாஸ் (பெருந்தலைவன்)

பிக் பாஸ் (பெருந்தலைவன்)

(ஆகஸ்டு 2017 மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்)

குடும்பமாகட்டும். . . அலுவலகமாகட்டும். . . அமைப்புக்ளாகட்டும். . . கட்சிகளா கட்டும் . . . விளையாட்டாகட்டும். . . எல்லா  

இடங்களிலுமே தலையாயப் பிரச்சினை இந்த தல பிரச்சனை தான்

கல்வியா? செல்வமா? வீரமா? என்று மூன்று தேவியருக்கு ள்ளும் காத்தலா? படை த்தலா? அழித்தலா? என்று மூன்று தெய்வங்களுக்குள்ளும் எழுந்த இந்த பிக் பாஸ் கேள்விக்கு இன்று வரை விடை கிடைத்த‍தாகத் தெரியவில்லை. 

தமிழகத்தில் ஒரு பிக் பாஸ் மறைந்த அந்த கழகத்தில் யார் பிக் பாஸ் என்கிற கலகம் தோன்றி கலக்கத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கி றது. மற்றொரு கட்சி யிலோ பெருந்தலை இருந்தும் அடுத்த ‘தல’ யை முழுமையாக ஏற்க இயலாத சூழல் தேசியக்கட்சியிலோ எல்லா தொண்டனுமே அடுத்த‍ தல நான்தான் என்கிற நிலை மற்றொரு தேசியக் கட்சியி லோ நாட்டுக்கே நான்தான் தல என்ற அதீத மிதப்பு 

சுதந்திரம் அமைந்த 70 ஆண்டுகளுக்குள் ஏன் இப்ப‍டியொரு தலைமை பஞ்சம்? இப்போதுள்ள‍ தலைவர்களுக்கு என்ன குறை என்ற கேள்வி எழலாம். 

இரண்டு வேட்டியும் இருநூறு ரூபாய் பணமும் மட்டுமே வைத்துக் கொண்டு இறந்த போன காமராசர்… கடைசி வரை வாடகை வீட்டில் வாழ்ந்த கக்கன் .. வாரிசுகளுக்கு எதையுமே சேர்க்க‍த்தெரியாத பேரறிஞர் அண்ணா … குடியரசு மாளிகையிலிருந்து புத்த‍கங்களை மட்டுமே கொண்டு ச்சென்ற அப்துல்கலாம்… கரைமுடியாத வாஜ்பாய், மக்க‍ளோடு மக்க‍ளாக வாழ்ந்த ஜோதிபாசு, எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்கள் இனி கிடைக்க மாட்டார்களா ? என்ற ஏக்கம் தேசமெங்கும் எழுந்தி ருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

மக்க‍ளின் நேரத்தை முடக்கி… மூளையை மழுங்க செய்து… தங்கள் கல்லாப்பெட்டியை நிரப்பிக் கொள்கிற பொறுப்புணர்வற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி நிர்வாகத்திற்கும்… மக்க‍ளுக்கு இலவசத்தை வழங்கி, சலுகைகளைக் காட்டி மய க்கி, வாக்குறுதிகளால் வளைத்துப்போட்டு வாக்குகளை பொறு க்கிக் கொள்கிற தற்போதைய கட்சி அமைப்புகளுக்கும்… பெரிய வித்தியாசம் இருப்ப‍தாக தெரியவில்லை. இப்படிப்பட்ட‍க் கட்ட‍ மைப்புக்களில் இருந்து மாபெரும் தலைவர்கள் எப்ப‍டி கிடைப்பா ர்கள்? அப்ப‍டியென்றால் யார்தான் இனி பிக் பாஸ்?

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்தி ஊழலை ஒழித்து ஊருக்கு நல்ல‍து செய்வேன் என்று உரத்த‍ சிந்தனையுடன் புறப்படுகற ஒவ்வொரு இளை ஞனும் இனி நமக்கு பிக் பாஸ் என்கிற முழக்க‍த்தை அடுத்த‍ தலைமுறைக்கும் செவிப்பறை கிழிய முழங்கு வோம்

வ‌ளர்த்து விடுவதல்ல‍ தலைமை தானாக அமர்வதே தலை மை. தனது ஆதாயத்திற்காக வளர்த்து விடப்படுகின்ற தலை வர்களை ஓரம் கட்டுவோம். நம் தேசத்திற்காக வளர விரும்பும் இளந்தளிர்களை வரவேற்போம்.

/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|
இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்

திரு.உதயம் ராம் : 94440 11105

/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|

நம் உரத்த‍ சிந்தனை மாத இதழ் உங்கள் இல்ல‍ம் தேடி வர  இன்றே சந்தாதாரர் ஆகுங்கள்
ஆண்டு சந்தா – ரூ.150/-
2 ஆண்டு சந்தா – ரூ.300/-
5 ஆண்டு சந்தா – ரூ.750/-
வாழ்நாள் உறுப்பினர் – ரூ.3,000/-
புரவலர் உறுப்பினர் – ரூ.7,000/-
வங்கி மூலம் சந்தா தொகை செலுத்த‍…
இந்தியாவிலுள்ள‍ எந்த இந்தியன் வங்கிக் கிளையின் மூலமும் நீங்கள் சந்தா செலுத்த‍லாம். வங்கிக் கிளைக்குச் சென்று கீழ்க்க‍ண்ட கணக்கில் சந்தா தொகையை செலுத்த‍லாம்.
வெளியூரில் உள்ள‍வர்கள் ரூ.10/- கூடுதலாக சேர்த்து செலுத்த‍ வேண்டும்
பெயர் – நம் உரத்த‍ சிந்தனை
வங்கி – இந்தியன் வங்கி
வங்கிக் கிளை – திருவல்லிக்கேணி, சென்னை – 5
க‌ணக்கு எண்.401056844 (SB)
IFSC Code: IDIB000T055
சந்தாவைச் செலுத்தியபின் மறக்காமல் மேற்காணும் திரு. உதயம் ராம் அவர்களின் கைப்பேசி எண்ணைத் தொடர்புகொண்டு சந்தா செலுத்திய விவரத்தை தெரிவிக்க‍ வேண்டுகிறோம்.
/\\/\/\/\\/\/\/\\/\/\/\\/\/\\/\\/\\/\/\////\///\///\///\/\//\///\///\///\///\///\///\///\///\///\///\///\//\/\//\/\//\/\/\//\//\/\///\//\/\/\//\///\///\\/\//\///\///

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: