Advertisements

அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன தெரியுமா

அதற்கு நீங்கள்  செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன தெரியுமா?

அதற்கு நீங்கள்  செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன தெரியுமா?

அழகாக தங்கள் வாழ்க்கை துணை இருக்கிறாரா? என்பதுதான் பெரும் பாலானோரின்

முதல் தேடலாக இருக்கும். வெளிதோற்றத்தை மட்டுமே வைத்து எடைபோடாமல் துணையின் குண நலன்களை கருத்தில் கொள்ள வேண்டும். திருமண த்திற்குமுன் துணையின் குணங்களை ஓரளவுக்குத் தான் யூகிக்க முடியும். இல்லற பந்தத்தில் இணைந் தபிறகு துணையின்மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். அவர்களின் குணங்களே உறவை வலுப்படுத்தி, இல்லற வாழ் க்கையை இனிமையாக வழி நடத்திசெல்ல அடித் தளமிடும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

* துணையின் கடந்தகால, நிகழ்கால வாழ்க்கை சம் பவங்களை இருவரும் மனம்விட்டு பேசவேண்டும். அந்த கலந்துரையாடல் ஆரோக்கியமான உறவை பேணுவதற்கு அடித் தளமிடுவதாக அமைய வேண்டும். கடந்தகால வாழ்க்கை சம்பவங்களின் கசப்பான நினைவுகள் துணைக்கு மனவருத்தம் தரும் வகையில் அமைந்து விடக்கூடாது. துணை யின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

* இருதரப்பு குடும்ப உறவுகளிடமுமே சுமுகமான உறவை பேண வேண்டும். தங்கள் குடும்ப உறவு களை பற்றி மட்டுமே பெருமிதமாக பேசி, துணை யின் உறவுகளை மட்டம் தட்டக்கூடாது.

*துணைக்கு மனவருத்தம்தரும்செயல்களை ஒருபோதும்செய்யக்கூடாது. அவர்களின் மனதை பாதிக்கும் தகவல்களை சற்று தாமதமாக சொல்வது நல்லது. அவசியம் ஏற்படின், பக்குவமாக எடுத்துரைக்க வேண்டும்.

*தவறுசெய்தால் ஒப்புக்கொண்டு உடனடியாக மன் னிப்பு கோருவது நல்ல வாழ்க்கை துணைக்கு அழகு. அது துணையின் மீது நேசத்தையும், நம்பிக்கையையும் அதிகப் படுத்தும்.

* சின்ன சின்ன தவறுகளை பெரிதுபடுத்தாமல் இருப்பதும், தவறு நேர்ந்தால் துணை மீது பழி போடாமல் இருப்பதும் உறவுக்கு நலம் சேர்க் கும்.

* உங்களுடைய செயல்களில் காட்டும் ஆர்வத்தை துணை மேற்கொண்டி ருக்கும் செயல்களிலும் வெளிக்காட்ட வேண்டும். உங்களு க்கு தெரிந்த விஷயங்களை எடுத்துக்கூறி சிறப்பாக செய்து முடிக்க வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

* எவ்வளவுதான் வேலைப்பளு இருந்தாலும் துணைக்கு நேரம் ஒதுக்க தவறக்கூடாது. பணியின்போது ஏற்படும் மன அழுத்தத்தை துணையின் மீது காண்பிக்கக்கூடாது.

* துணையின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்க வேண் டும். வாழ்வின் ஏற்ற, இறக்கங்களில் பங்கெடுத்து, மனம் தளரவிடாமல் உற்சாகப்படுத்தி க்கொண்டிருக்க வேண்டும்.

*துணையை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படக்கூடாது. அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும். விட்டுக்கொடுத்து அவர்களின் போக்கிலேயே சென்று அவர்கள் செய்யும் தவறுகளை பக்குவமாக புரிய வைக்க வேண்டும்.

*வேலைக்கு செல்லும் கணவன்-மனைவி இடையே அலுவலக ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் இணக் கமான புரிதல் இருக்க வேண்டும். ஈகோ பிரச்சினை தலைதூக்க தொடங்கினால் அதுஉறவில் விரிசலை அதிகப்படுத்திவிடும். வேலைக்கு நடு வே குடு ம்பத்துக்கு போதுமான நேரத்தை ஒதுக்கி உறவை பேண வேண்டும்.

* உங்களுடைய செயல்பாடுகளில் இருக்கும் குறைகளை துணை சுட்டிக் காட்டினால் கோபப்படாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். கஷ்டகாலங்களில் துணைக்கு தோள் கொடுப்பவராக இருக்க வேண்டும்.

=> தமிழ்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: