Advertisements

குழந்தைகளின் ஞாபக சக்தி குறித்து சில உபயோகமான தகவல்கள்

குழந்தைகளின் ஞாபக சக்தி குறித்து சில உபயோகமான தகவல்கள்

குழந்தைகளின் ஞாபக சக்தி குறித்து சில உபயோகமான தகவல்கள்

ம‌றதியைபோல் ஒரு மாமருந்து இல்லை என்ற பாடல் வரி உண்டு. ஆனா ல் இந்த

மறதி குழந்தைகளுக்கு இருந்தால், அவர்கள் படித்தை, பார்த்ததை, ரசித் ததை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாமல் மறந்துவிட்டு பெற்றோரிடமிருந்து தண்டனை களும், ஆசிரியர்களிடமிருந்து கண்டிப்புக்களு ம், நண்பர்களிடத்தில் இருந்து கேலிகிண்டல்க ளும் அன்றாடம் சில குழந்தைகள் சந்தித்து வருகின்றன. அந்தவகை குழந்தைகளில் உங்க ள் குழந்தையும் ஒன்றாக இருக்கலாம்.

ஞாபகம் குறித்து சில தகவல்கள் இதோ

நாம் பார்க்கும், கேட்கும், உணரும், சுவைக்கும், முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும். இது முதலில் குறைந்த நேரமே மனதில் இரு க்கும் (சென்சரி மெமரி). உடனே மறந்து விடும்.

இந்த சென்சரி மெமரியில் நாம் முழு கவனத்தை செலுத்தி ஆழ்ந்து கவனித்தால் அது ஷார்ட்டெர்ம் மெமரிஆக பதிவா கும். இதுவும் சில மணித்துளிகளுக்குமட்டும் இருக்கும்.

ஷார்ட் டெர்ம் மெமரி ஐ திரும்பத் திரும்ப செய்யும் போது அது நாள்பட்ட ஞாபக சக்தியாக மாறும். என வே ஞாபகசக்திக்கு மிகவும் முக்கிமானது  இரண்டு : ஆர்வம் மற்றும் கவனம், திரும்ப திரும்ப செய்தல்.

மேலும் நாள்பட்ட ஞாபகம்கூட மறக்க வாய்ப்பு உள்ளது, இதுவும் நல்லதுதான். சிலசமயம் வாழ் நாள் முழுதும் நினைவி ல் இருக்கும்.

நாள்பட்ட ஞாபகத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம்: Implicit & Explicit

Implicit என்பது யோசிக்க தேவை இல்லா மல் உடனே நினைவுக்கு கொண்டு வருதல்.

Explicit என்பது கொஞ்சம் யோசித்தால் நினைவுக்கு கொண்டுவர முடியும்.

நினைவு திறனை சிறு உதாரணம் கொண்டு விளக்கலாம்:

மிதி வண்டி ஓட்ட பழகுதலை எடுத்துக் கொள்வோம்.

யாரோ ஓட்டுவதை நாம் பார்ப்பது – சென்சரி மெமரி

முதன் முதல் ஓட்ட கற்றுக்கொள்வது– ஷார்ட் டெர்ம் மெமரி

தத்தி தத்தி ஓட்டுவது – லாங் டெர்ம் explicit மெமரி

தயவே இல்லாமல் ஓட்டுவது – லாங் டெர்ம் implicit மெமரி (சாகும் வரை மறக்காது)

இனி நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்:

* எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், நீங்கள் படிப்பது ஆங்கிலமோ, ஹிந்தியோ, பிரஞ்சோ – உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்.

* புரியாமல் எதையும் படிக்க கூடாது. ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை.

* முழு கவனம் மிக அவசியம்.

* Mnemonics வைத்து படிப்பது ஒரு கலை. அதை உங்கள்குழந்தைக்கு கற்று கொடுங்கள்

உதாரணம்: news-north, east, west, south

*படித்தவுடன் எழுதிபார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தவேண்டும். ஹோம் வொர்க் என்ற பெயரில் கடமைக்கு எழுதும் சடங்கு பயனில்லை.

* படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும். பட விளக்கங்களை திரும்ப திரும்ப வரைந்து பார்க்கச் சொல்ல வேண்டும்

* நல்ல உறக்கம் அவசியம். குறைந்தது 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக தேவை.

* இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்ல வேண்டும்.

*தூங்கப்போகும்முன் அன்றுபடித்த அனைத்தையும் ஒருமுறை மேலோட்டமாக நினைவுபடுத்தி பார்க்க வேண்டும். அப்படி செய்யும்போது நாம் தூங்கினா லும் நம் மூளையின் சில மூலைகள் விழிப்புடன் இ ருந்து தகவல்களை ஷார்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவுசெய்து கொண்டு இருக் கும். இது மிக முக்கியமான பயிற்சி ஆகும்.

*மாவுசத்துள்ள உணவுகள் மந்தநிலையை ஏற்படுத்து ம், எனவே புரதம் நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்து கொள் வது நல்லது.

ப• சக்திவேல்

How to increase the memory power – children – kid, child, student,

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: