Advertisements

சகிப்புத் தன்மை வேண்டும் ஏன்? அதனை வளர்த்துக் கொள்வது எப்ப‍டி?

சகிப்புத் தன்மை வேண்டும் ஏன்? அதனை வளர்த்துக் கொள்வது எப்ப‍டி?

சகிப்புத் தன்மை வேண்டும் ஏன்? அதனை வளர்த்துக் கொள்வது எப்ப‍டி?

சகிப்புத் தன்மை… மனிதனுக்கு வாழ்க்கையில் மிகவும் வேண்டிய ஒரு குணம் . அது ஒன்றும்

மட்டும் இல்லாவிட்டால், நீங்கள் போட்டியிருக்கும், கால் சட்டையின் நிறம் எனக்குப் பிடிக்க வில்லை என்று உங்க ளை நான் அடிக்கநேரிடும். இதை ஒரு உதாரணத்திற்குச் சொல்கிறேன். ஆனால் சகிப்புத்தன்மை அற்றவர்களின் செயல் பாடுகள் இதனை ஒத்தே இருக்கும்.

சகிப்புத்தன்மை ஏன் அவசியமாகிறது என்பதை முதலில் நாம் பார்ப்போ ம். நாம் வாழும் உலகம் நமக்காக படைக்கப் பட்ட தல்ல. படைக்கப்பட்ட உலகத்திலே நாம் வாழுகிறோம். அதனா ல, தான் நமக்குப் பிடிக்காத சில விசயங்களும், நிகழ்வுக ள் அவ்வப்போது நடந்தே வருகின்றது. அப்படி கூடிவாழு ம் ஒரு சமுதாயத்தில், உரிமைகளை கட்டிக் காத்துப் பேணுவது என்பது ரொம்பவும் முக்கியமான ஒன்றாகும். அத்தோடு மிகவும் சிரமமான ஒன்றாகும்.

நீங்கள் உலகிலே முக்கியமான காரணத்திற்காக போய்க் கொண்டியிருந் தாலும், தொடர்வண்டி பயணச்சீட்டு வாங்கும் வரிசையில் கடைக்கோடியிலிருந்து நேரடியாக முதல் ஆளாக போக முடியாது. மற்றவர்களின் அவசரத்தை விட, அவர்கள் முன் னால் வந்தவர்கள் என்பதை நீங்கள் சகித்துத்தான் ஆக வேண்டும். முன்னால் வந்தவர் 2 மாதம் கழிச்சு இன்பச் சுற்றுலாவிற்குப் பயணச்சீட்டு பெறுபவராகவும், நீங்கள் உயிர்காக்கும் மருத்துவராக இருந்தாலும், பொறுத்தே ஆக வேண் டும்.

நீங்கள் இறைஞ்சிக் கேட்டால், அனைவரின் ஒப்புதல் பெற்றியிருந்தால் முன்னால் போகலாம். அப்போதும், உங்கள் உரிமையில் செல்லவில்லை. அடுத்தவரின், உரிமை விட்டுக்கொடுத்ததினால் செல்லுகிறீர்கள். அங்கே ஒருவர் எதிர் த்து குரல் எழுப்பினாலும், உங்கள் சலுகைப் பறிக்கப்படலாம் என்று நீங் கள் அறிய வேண்டும்.நம் உரிமை எவ்வளவு முக்கிய மோ, அதேபோல் மற்றவர்கள் உரிமையும் மிகவும் முக்கியம். அப்படி உங்கள் சலுகைப்பறிக்கப்பட்டால் , சகிப்புத் தன்மையுடன் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்.

சிறுவர்கள் இருக்கும்வீட்டில், கேலிச்சித்திர அலைவரிசை தொடர்ந்து ஓடும்போது, சகிப்புத்தன்மை சிறிதுசிறிதாக குறைவ தை நாம் கண் கூடாகப் பார்ப்போம். அதேப்போல் அலு வலகத்தில் பிடிக்காத ஒன்று நிகழ்ந்தால், எவ்வளவு உங்களைத் தூண்டினாலும், நாகரீக எல்லை தாண்ட மாட்டோம். அங்கே சகிப்புத் தன்மை இல்லா விட்டால், பாதுகாவலரை அழைத்து, தூக்கி வீசப்படுவீர். சட்டமன்றத்தில் நடக்கும் போதும் அதே தான் நடக்கும்.

கருத்துச் சுதந்திரம் என்பது நீங்கள் விரும்பவதைச் சொல்லத் தரும் உரிமை அல்ல. அது தான் சர்வாதி காரிகள் கடைப்பிடித்தது. உங்களுக்கு ஒப்பில்லாத கருத்து வெளியாகும் போது, அதை வெளிப்படுத்த நீங்கள் அளிக்கும் சுதந்திரம். கருத்துச் சுதந்திரத்தில் ஒன்றிய விசயம்தான் சகிப்புத்தன்மை. உங்களுக்கு அந்த சகிப்புத்தன்மை இல்லாவிடில், எதிர்த்துக் கருத்துச் சொன்னவரை அழிக்க வா, அடிக்கவோ, தாக்கவோ, இழிவாக பேசவோ முனைவீ ர்கள். இங்கே எல்லா சுதந்திரத்தையும் ஆதரிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, எதிர்கருத்து வரும்போது, அப்பாடி கிடைச்சதுடா வாய்ப்பு என்றுப் போடுகும்முபவர்கள் தான் அதிகம்.

சகிப்புத் தன்மை அற்றவர்களை நாம் எளிதாக அடையாளம் காணலாம். எதிர் கருத்துக்களைக் கண்டால், கருத்தால் எதிர்கொள் ளாமல், நீ ஓட்டை, நீ அப்படி, நீ இப்படி, (அட திட்டுறதை யெல்லாம் போட்டா, என் பதிவுக்கு அப்பறம் சென்சார் தேவை என குரல் கேட்காதா), நாகரீகமற்றவன் என்று சொல்லிக் கொண்டே மெது வாக நாகரீக எல்லைக்கு வெளியே சென்று விடுவார்கள். கபடதாரிகள்/ பாசாங்கு செய்பவர்கள் வழக்கமாக சகிப்புத் தன்மைக் கொண்டவ ர்களாக வெளியே காட்டிக்கொண்டு, சமயம்வரும்போது அதிஆவேசமாகவே வெளியே வருவார்கள்.

சகிப்புத் தன்மை என்பது குடும்பத்திலும், தேவையானது தான், நீங்கள் பார்க்கும் விளையாட்டு நிகழ்ச்சி நேரத்தில் மனைவி தொலைக்காட்சி பார்க்க நினைத்தாலோ/ அல்ல து பார்த்தாலோ, அதற்கு இடம் கொடுப்பதும் கொடுக் காததும் உங்கள் சகிப்புத்தன்மையின் எல்லையே முடிவு செய்யும்.

சரி சகிச்சிக்கோ, சகிச்சிக்கோ என்றுசொல்லிவிட்டு அதற்காக யார் எதைசெஞ்சாலும், சகிச்சிக்கிட்டு இரு க்க வேண்டியது இல்லை. அதற்கு அவ்வப்போது 6வது அறிவு..ஒன்று இருக்கே, பகுத்தறிவு அதை பயன்படுத்த வேண்டும்.

நீங்கள் ஒரு அலுவலகத்தில் பணிபுரிகின்றீர்கள். அங்கே கலந்தூரையாடல் நடந்தாலும், அதில் மாற்றுக் கருத்துக் கள் வரும். எப்படி முடிவுக்குவரும். ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்துக்கொண்டே போனால், எப்படித்தான் முடிவுசெய் வது. முடிவுகளை பதிவுசெய்யும்போது, ஏகமனதாக என்று சொல்லுவது யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற பொருளல்ல. அனை வருமே ஒப்புக்கொண்ட முடிவு. அதா வது Consensus, எனக்கு உன்கருத்தில் நம்பிக்கை இல்லை . ஆனால், பொதுநலன்கருதியோ, அல்லது, குழு நலன் கருதியோ, என் கருத்தில் நான் முழு நம்பிக்கையுட ன், நீங்கள் எடுக்கும் முடிவிற்கு உடன்படுகிறேன். இதைச் சொ ல்ல சகிப்புத் தன்மை வேண்டும். இல்லாட்டி, அடுத்த கலந் துரையாடலில் இவன் ஒரு வழிக்கு வர மாட்டான் என்று முடிவுக் கட்டி விடுவார்கள்.

ஆகவே நண்பர்களே சகிப்புத்தன்மையயை வளர்த்துக் கொள்ளுவோம் ..

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!


இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: