Advertisements

தலைகுனிந்து செல்லடா

தலைகுனிந்து செல்லடா!

தலைகுனிந்து செல்லடா

2017 மார்ச் மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்

பல இளங்காளைகளால் சென்ற மாதம் தலை நிமிர்ந்த தமிழினம் சில சில்லறை

மனிதர்களால் தற்போது தலைகுனிந்து நிற்கிறது. கலாச் சாரத்தை பண்பா ட்டைக் காப்பாற்றுவதற்காக போராடிய இன்றைய இளைய சமுதாயத்தை பெருமையுடன் பார்த்து பாராட்டிய உலகம்…. இன்று பதவிக்காகவும் பணத்துக்கா கவும் கட்சியைக் காப்பாற்றுவதற்காகவும், கேவலமாக அடித்துக்கொள்வதைப் பார்த்து வெட்கப்பட்டு கூனிக் குறியுள்ள‍து.

தலைவரில்லாத குடும்பம் தறிகெட்டுப்போவதுபோல… தலைவரை இழந்த கட்சியின் நிலை கேள்விக்குறியதா கியிருக்கிறது. பதவியிருக்கும்வரை. பதவியில்லை யென் றால் துணிவு, பதவியிருக்கும்வரை எல்லோருக்கும் சரி பதவியில்லையென் றால் எல்லாம் தவறு… என்று பொறு த்தது போதும். என்று பொங்கி எழுகிறார். ஒருவர். கழுத்து க்கு மேல் கத்தி தொங்கினாலும் பதவியில் பத்து விநாடிக ளாவ‌து உட்கார்ந்தே தீருவேன் என்று கட்சியை தலைவர்களை … வாக்களித்தவர்களை பகடைக்காய்களாய் மாற்ற நினைத்தார். மற்றொருவர் மக்க‍ள் பிரதிநிதிக ளை மாட் டுமந்தைகளாய் நடத்திய விதமும்… யார் வேண்டுமானா லும் எப்ப‍டிவேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமா னாலும் எந்தபதவிக்கும் வரலாம் என்கிற கொள்கை யும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிய காட்சிகள் குடும்பஆட்சியை எதிர்த்து வாக்குகேட்டு வெற்றி பெற்ற‍ கட்சி இன்று மக்கள்வசமா? (அல்) குடும்பத்தி ன் வசமா? என்பதற்கு விடைதெரியாமல்விழிக்க தமிழ்மக்க‍ள்  எல்லோரும் மக்குகள் அல்ல•

அத்தையின் பேனா மட்டும்போதும் என அடக்கத்தின் அவதார மாய் வெளியே வந்தவர் இன்று கட்சி ஆரம்பிக்க வேண்டிய அவ சியம்என்ன? பொதுநலசேவைக்கா? அத்தையி ன் கடனை நானே அடைப்பேன் என்றவர் இந்த சொத்து க்களை எங்களுக்கே சொந்தம் தீ பக்கென்று பற்ற‍ வேண் டிய சூழல் என்ன ?

ஜெயலலிதா என்பவர் இருந்து இறந்தாரா? இறந்து இரு ந்தாரா? மருத்துவர்கள் பார்க்க‍வந்தனரா? இல்லை வந் து பார்த்தனரா? முன்னாள் முதல்வர் சிரித்தாரா? விர லை தூக்கினாரா? இட்லி சாப்பிட்டாரா?- வேதாளமாய் விரியும் கேள்விகளுக்கு விடைகாண இயலாமல் விக்ரமாதித்தனின் த லை வெடிக்கப்போவது நிச்ச‍யம்.

சிவகாமியின் சபதம்போல. சின்னாம்மாவின் சமாதி சபதம் வரலாற்றுப் புகழ் பெற்றுவிட்டது. மா முனிவர்க ளின் தியானத்தையெல்லாம் மிஞ்சும் வகையில் இன் ஸடண்ட் முதல்வரின் தியானம் பேசப்பட்டது. கூவத்தூர் வளாகம் கூவமாய் நாறியதும் அம்மா இருந்தவரை அடையா ளம் தெரியாதிருந்த குட்டித் தேவதைகள் எல்லாம் இன்று ஆளுக்குத் தகுந்த மாதிரி அவரவர் தகுதிக்கு அறைகூவல் விடுப்ப‍தும். தமிழ்நாட்டின் அரசியல் மானத்தை கப்பலேற் றி கலவரப்படுத்தின•

அவைத்தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு அவையிலேயே அமர்ந்து அடம்பிடித்து அறிக்கைக ளை கிழித்த‌து… படம்பிடிக்க‍ச்சொல்லி வெளியே வந் தது. இக்காட்சிகளெல்லாம் இயல்பானதா? திட்ட‍மிட்டதா? திணிக்கப்பட் ட‍தா? எல்லாம் அந்த சூரியனுக்குத்தான் வெளிச்சம்.

மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்க‍ப்பட்ட‍ ஜனநாய கம் மக்குகளாலும் மாக்களாலும் மக்கிப்போய் வருவது ஒவ்வொரு வாக்காள‌னுக்கும் தேர்தல்முறைக்கும் இழைக்க‍ப்படும் பச்சைதுரோகம்

தமிழனென்று சொல்லடா தலைகுனிந்து செல்லடா என்ற அவலநிலையை மாற்றி தன்மானத்துட்ட‍ன் நெஞ்சுரத்துடன் நாமெல்லா ம் உடனடியாய் உரத்து சிந்திக்க வேண்டும்.

/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|
இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்

திரு.உதயம் ராம் : 94440 11105

/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|

நம் உரத்த‍ சிந்தனை மாத இதழ் உங்கள் இல்ல‍ம் தேடி வர  இன்றே சந்தாதாரர் ஆகுங்கள்
ஆண்டு சந்தா – ரூ.150/-
2 ஆண்டு சந்தா – ரூ.300/-
5 ஆண்டு சந்தா – ரூ.750/-
வாழ்நாள் உறுப்பினர் – ரூ.3,000/-
புரவலர் உறுப்பினர் – ரூ.7,000/-
வங்கி மூலம் சந்தா தொகை செலுத்த‍…
இந்தியாவிலுள்ள‍ எந்த இந்தியன் வங்கிக் கிளையின் மூலமும் நீங்கள் சந்தா செலுத்த‍லாம். வங்கிக் கிளைக்குச் சென்று கீழ்க்க‍ண்ட கணக்கில் சந்தா தொகையை செலுத்த‍லாம்.
வெளியூரில் உள்ள‍வர்கள் ரூ.10/- கூடுதலாக சேர்த்து செலுத்த‍ வேண்டும்
பெயர் – நம் உரத்த‍ சிந்தனை
வங்கி – இந்தியன் வங்கி
வங்கிக் கிளை – திருவல்லிக்கேணி, சென்னை – 5
க‌ணக்கு எண்.401056844 (SB)
IFSC Code: IDIB000T055
சந்தாவைச் செலுத்தியபின் மறக்காமல் மேற்காணும் திரு. உதயம் ராம் அவர்களின் கைப்பேசி எண்ணைத் தொடர்புகொண்டு சந்தா செலுத்திய விவரத்தை தெரிவிக்க‍ வேண்டுகிறோம்.
/\\/\/\/\\/\/\/\\/\/\/\\/\/\\/\\/\\/\/\////\///\///\///\/\//\///\///\///\///\///\///\///\///\///\///\///\//\/\//\/\//\/\/\//\//\/\///\//\/\/\//\///\///\\/\//\///\///\///\//\///\//\|

கீழே உள்ள படத்தை கிளிக் செய்யுங்கள்

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: