Advertisements

1947க்கு பிறகு தமிழகத்தை ஆண்ட முதல்வர்களின் முழு பிண்ண‍னி! – அரசியலில் ஓரலசல்

1947க்கு பிறகு தமிழகத்தை ஆண்ட முதல்வர்களின் முழு பிண்ண‍னி! – அரசியலில் ஓரலசல்

1947க்கு பிறகு தமிழகத்தை ஆண்ட முதல்வர்களின் முழு பிண்ண‍னி! – அரசியலில் ஓரலசல்

அமைதி புயலாக ஓமந்தூர் ராமசாமி,  எளிமையே உருவான காமராஜர் … கேட்போரை வசீகரித்துக்

கட்டிப்போடும் பேச்சாற்றல் திறன் கொண்ட அண்ணா… திரைக்கதை வசனத்தில் அசத்தும் கருணாநிதி… பன்மொழி வித்தகர் ஜெயலலிதா என பல்வேறு விதமான, எண்ணற்ற திறமைகளை தன்னகத்தே கொண் ட முதல்வர்களை தமிழகம் இதுவரை கண்டுள் ளது. ஒவ்வொரு முதல்வருக்கும் ஒவ்வொரு பின்னணி, தனித்தனி இயல்பு உண்டு. பெரும் பாலும் இவர்கள் அனைவருமே பல்வேறு சந்த ர்ப்பங்களில் அடிமட்டத்தில் இருந்து போரா டி, படிப்படியாக முன்னேறி முதல்வர் பதவி வரை உயர்ந்தவர்கள். ஒரே நாளில் உச்சாணிக்கு வந்தவர்கள் அல்லர்… இந்தியா சுதந்திரமடை ந்தது முதல் தற்போது முதல்வர் பதவியில் இருந்து விலகியிருக்கும் ஒ.பன்னீர் செல்வம் வரையிலான தமிழக முதல் வர்களின் பின்னணியும், இயல்புக ளும் இங்கே…

1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்

சுதந்திர இந்தியாவில் தமிழகத்தை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தி ன் முதலாவது முதல்வராக இருந்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். இவர், 1947-ம் ஆண்டு மார்ச் 23முதல் 1949-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி வரை சென்னை மாகாண முதல் வராக பதவி வகித்தார். முதல்வராக இருந்தபோ திலும், திண்டிவனம் அருகில் இருந்த தனது பூர்வீக நிலத்தில் விவசாயம் செய்தே வாழ்ந்து வந்தார்.

2) பி.எஸ். குமாரசாமி ராஜா

1949 முதல் 1952-ம் ஆண்டு வரை தமிழ்நாடு (சென்னை மாகாணம்) முதல மைச்சராக இருந்தவர் குமாரசாமி ராஜா. இவர், தனது பள்ளிப்படிப்பை முடித்த உடன் காங் கிரஸ் கட்சியில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். ‘தென்னகத்து காந்தி’ என மக்களால் பாரா ட்டப்பட்ட அளவுக் கு எளிமையாக வாழ்ந்தவர்.

3) ராஜாஜி

வழக்கறிஞர், விடுதலைப்போராட்ட வீரர், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல், தமிழக முதல்வர் என பல முகங்களைக் கொண் டவர் ராஜாஜி. ஆரம்பகாலத்தில் வழக்கறிஞரா கப் பணியாற்றிய இவர், 1917-ல் சேலம் நகராட்சி உறுப்பினராகவும், பின்னர் நகர மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952முதல் 1954ம் ஆண்டு வரை தமிழக முதல்வராக இருந்தார்.

4) காமராஜர்

வறுமைகாரணமாக பள்ளிப்படிப்பைத்தொடர முடியா நிலையில், படிப்பை நிறுத்தி விட்டு துணிக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார் காமராஜர். வேலையில் இரு க்கும்போது காங்கிரஸ் தலைவர்களின் பேச்சுக்களா ல் ஈர்க்கப்பட்டு, தனது 16-வது வயதில் காங்கிரஸ் கட் சியில் இணைந்தார். படிப்படியாக உயர்ந்து 1954 முதல் 1963-ம் ஆண்டுவரை தமிழகத்தின்முதல்வராக சிறப்பா ன பணியாற்றினார். இவர் ஆட்சியில் தான் குழந்தைக ளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்த ப்பட்டது. கல்விக் கட்டணமும் ரத்து செய்யப்பட்டது.

5) பக்தவச்சலம்

சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்ற பக்தவசலம், தொழிலாளர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்டோர் ஆகியோ ருக்காக நீதிமன்றங்களில் வழக்காடியவர். 1963 முதல் 1967-ம் ஆண்டுவரை தமிழக முதல்வராக இருந்தவர். இவரது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர்தான், தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சி கள்தான் தமிழகத்தில் மாறி, மாறி ஆட்சியில் இருந்து வருகின்றன.

6) அண்ணாதுரை

திராவிட இயக்கத்தைச்சேர்ந்த முதல் முதல்வ ரான அண்ணாதுரை 1967முதல் 1969ம் ஆண்டு வரை தமிழக முதல்வராக இருந்தார். நாடகம், எழுத்து,பேச்சு என அண்ணா பன்முகத் திறமை கொண்டவர். பெரியாரின் கருத்துகளால் ஈர்க் கப்பட்டு, திராவிடர் கழகத்தில் இணைத்து, பகுத்தறிவுக் கருத்துகளை தமிழகம் முழுக்க கொண்டு சென்றார்.

7) கருணாநிதி

தமிழ்த் திரையுலகில் கதை, வசனம், பாடல் ஆகிய பணிகளில் ஈடுபாடு கொண்ட கருணாநிதி, ஆரம்ப காலங்களில் திரைத்துறையில் கொடிகட்டிப் பறந்தவ ர். தனது எழுத்து மற்றும் பேச்சுத் திறமையால் திரா விட இயக்கத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய வர். 1969-ம் ஆண்டு, அண்ணாவின் மறைவைத் தொ டர்ந்து, தமிழகமுதல்வராக கருணாநிதி பதவி ஏற்றா ர்.  அதன்பிறகு 1989ஆம் ஆண்டும், 1996ஆம் ஆண்டும், 2011 ஆம் ஆண்டும் தேர்தலில் பெருவாரியான வாக்கு களை பெற்று வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். தற் போதும் முதுமை மற்றும் உடல்நல குறைவு காரணமா க அரசியலில் தற்காலிகமாக‌ ஒதுங்கி ஓய்வெடுத்து வருகிறார்.

8) எம்.ஜி.ஆர்

தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர், பிறகு திரைத்துறையிலும் தடம் பதித் தார். ‘சதிலீலாவதி’ என்ற திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி, கதாநாயக னாகி கொடிகட்டிப் பறந்தார். அண்ணாவின் அரசி யல் கருத்துகளில் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னே ற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப் பின், கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அண்ணா தி.மு. க-வை தோற்றுவித்து, 1977-ம் ஆண்டு ஆட்சியை ப் பிடித்தார். 1977 முதல், தான் மறையும் வரை அதாவது 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை தமிழக முதல்வராக பதவிவகித்தவர் எம்ஜிஆர்.

9) ஜெயலலிதா

நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன் னட மொழித் திரைப்படங்களில் முன்னணிப் பாத்திரங்களிலும், கதாநாயகியாகவும் நடித் தவர் ஜெயலலிதா. தனதுஅரசியல் ஆசானாக எம்.ஜி.ஆர்-ஐ ஏற்றுக் கொண்டு அவர் உதவி யுடன் அரசியலில் நுழைந்தார், 1991-ம் ஆண் டு தமிழக சட்டப்பேரவைத்தேர்தலில் வெற்றிபெற்று, ஜெயலலிதா முதல் முறையாக தமிழக முதல்வரானார். இடைப்பட்ட காலத்தில் வழக்குகளால் இருமுறை பதவியை இழக்க நேரிட்டபோது, ஒ. பன்னீர்செல்வம் முதல் வராக பொறுப்பேற்றார். அதன்பிறகு 2001ஆம் ஆண்டும் 2011 ஆம் ஆண்டும் 2016 ஆண்டும் தேர் தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த‍வர். கடந் தாண்டு டிசம்பர் 5 ஆம் தேதியன்று உடல் நலக் குறைவு காரணமாக சந்தேகத்திற்குரிய வகையி ல் இறந்து விட்டார்.

10) ஓ.பன்னீர் செல்வம்

டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த போ து, 2002-ம் ஆண்டு முதல்வரானார் ஓ.பன்னீர் செல்வம். பெரியகுளம் பகுதியில் தேநீர் கடை நடத்தி வந்த OPS பெரியகுளம் நகராட்சித் தலை வராக இருந்தவர். டான்சிவழக்கில் இருந்து, ஜெயலலிதா விடுதலையானதும், ஓ.பி.எஸ் பதவி விலகினார். 2014-ம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்ட னை வழங்கப்பட்டதும், அவர் பதவி பறி போனது. அப்போது இரண்டாவது முறை யாக முதல்வரானார் ஓ.பன்னீர்செல்வம் . 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெய லலிதா மரணம் அடைந்ததும், டிசம்பர் 6-ம் தேதி முதல்வராக 3-வது முறையாக ப் பொறுப்பேற்றார் ஓ.பன்னீர் செல்வம். தற்போது சசிகலா முதல்வராகப் பதவி யேற்க வசதியாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஓ. பன்னீர் செல்வம்.

இப்படி திறன்மிக்க, போராட்ட குணம் கொண்ட, வலிமையான முதல்வர்களைக் கண்ட தமிழக ம்… இன்னும் சிறிது காலத்தில் புதிய முதல்வ ரைக் காண உள்ளது. இத்தகுதிகளும், தன்மைக ளும் புதிய முதல்வருக்கு இருக்கிறதா என்பதை விரைவில் காலம் காட்டும்.

– ஆ. நந்தகுமார் , விகடன்

English Summery:

1) Omanthur Ramasamy Reddiar, 2) P.S. Kumara Awamy Raja, 3) Rajaji, 4) Kamarajar, 5) Bakthavachalam, 6) Annadurai, 7) Karunanidhi, 8) M.G.R, 9) J. Jayalalitha 10)  O. Panneer Selvam they are all Former Chief Ministers of Tamilnadu after Independent India

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்ய‍வும்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: