Advertisements

2017-2018ஆண்டிற்கான பட்ஜெட்டும் அதன் சிறப்பம்சங்களும்!

2017-2018ஆண்டிற்கான பட்ஜெட்டும் அதன் சிறப்பம்சங்களும்!

2017-2018ஆண்டிற்கான பட்ஜெட்டும் அதன் சிறப்பம்சங்களும்!

2017 – 18ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில்

நேற்று தாக்கல் செய்தார். தனி நபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்ற மில்லை, ரூ.2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கான வரி 10%தில் இருந்து 5 சதவீதமாகக் குறைப்பு, அரசியல் கட்சிகள் மற்றும் பணப் பரிவர் த்தனைகளுக்கு புதிய கெடுபிடிகள் உள்ளிட்டவை மத்திய பட்ஜெட்டின் சிறப்பம்சங்களாக விள ங்குகின்றன.

அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்:

தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை.

* மேலும், வருமான வரி சமர்ப்பிக்கும் படிவம் எளிமையாக்கப்படும்.

* ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையுள்ள வருமானத்துக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை 10 சதவீதமாக இருந்த வரி விகிதம் இனி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

* அதே சமயம், 50 லட்சத்தில் இருந்து 1 கோடி ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 10% கூடுதல் வரி விதிக்கப்பட் டுள்ளது.

* 80C பிரிவின்கீழ் வரிச்சலுகை பெறுவதற்கான உச்ச வரம்பு 4.5 லட்சமாக அதிகரிப்பு.

* வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கும் நடைமுறையில் வெளிப்படைத் தன்மையை புகுத்த நடவடிக்கை.

50கோடி ரூபாய் ஆண்டு வருமான உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங் களுக்கு 5% வரி குறைப்பு

நவம்பர் 8 முதல் டிசம்பர் 31 வரை…

2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி வரை சுமார் 1.09 கோடி கணக்குகளில் ரூ.2 லட்சம் முதல் ரூ.80  லட்சம் வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மேலும், 1.48 லட்சம் வங்கி கணக்குகளில் ரூ.80 லட்சத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. பணமதிப் பிழக்கு நடவடிக்கையால் வருமான வரி தாக்கல் செய்வோரின் எண் ணிக்கை 35 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் 2016- 2017: அனைத்து உயர்கல்வித் தேர்வுகளையும் சிபிஎஸ்இ…

ஆதார் அடிப்படையிலான பணபரிவர்த்தனை முறை

* ஆதார் அடிப்படையிலான பணபரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப் படும் என்று  அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

* முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.2.44 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* நிதி மோசடி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோரை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும்.

* வெளிப்படையான வங்கி டெபாசிட் விவரங்கள் எதிர்காலத்தில் வரி வசூல் அதிகரிக்க உதவும்.

*10 ஆயிரம் ஸ்வைப் மிஷன் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்.

* இந்தியாவை மின்னணு பரிவர்த்தனை மையமாக மாற்ற நடவடிக்கை.

* பெட்ரோல் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை கட்டாயமாக்கப்படும்.

மொத்த பட்ஜெட் செலவு ரூ.21,47,000 கோடி

2017 – 18ம் நிதியாண்டுக்கான மொத்த பட்ஜெட் செலவு ரூ.21,47,000 கோடி என்று அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

* வறட்சியை சமாளிக்க நாடு முழுவதும் 5 லட்சம் குளங்கள் ஏற்படுத்தப் படும்.

*  நிதிப் பற்றாக்குறை மொத்த உற்பத்தியில் 3.2 சதவீதமாக இருக்கும்.

*  அறிவியல் தொழில்நுட்பத் துறைக்கு 37,435 கோடி ஒதுக்கீடு.

*  பொருளாதார குற்றங்களில் ஈடுபடுவோரை தடுக்க புதிய சட்டம்.

*  நெடுஞ்சாலைத் துறைக்கான நிதி ரூ.64 ஆயிரம் கோடியாக அதிகரிப்பு.

* ஒருகோடியே 47 லட்சம் சம்பளதாரர்கள் மட்டுமே வருமானவரி தாக்கல் செய்கிறார்கள் என்று அவர் அறிவித்தார்.

அரசியல் கட்சிகளுக்கு புதிய நெருக்கடி

அரசியல் கட்சிகள் இனி நன்கொடையாக ரூ.2 ஆயிரம் மட்டுமே ரொக்க மாக பெறலாம் என்று நிதியமைச்சர் ஜேட்லி அறிவித்தார்.

மேலும்,

* அரசியல் கட்சிகள் இனி நன்கொடையாக ரூ.2 ஆயிரம் மட்டுமே ரொக்கமாக பெறலாம்.

* இந்த கட்டுப்பாடு முதலில் ரூ.20 ஆயிரமாக இருந்தது.

* ஆனால் அரசியல் கட்சிகள் காசோலை மற்றும் டிஜிட்டல் முறைகளில் நிதி பெறுவதற்கு தடை இல்லை.

* ஆனால் ரூ.2 ஆயிரத்திற்கு மேல் நிதி பெறுபவர்கள்  தொடர்பான விபரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்.

* அரசியல் கட்சிகள் தகுந்த காலத்தில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.

அஞ்சலங்களில் பாஸ்போர்ட்

* அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என் று அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

* மத்திய பட்ஜெட்டில் அருண் ஜேட்லி அறிவித்திருப்பதாவது,

* ஆதார் அடிப்படையிலான பண பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்த ப்படும்.

* கல்விக் கடன் வாங்கிவிட்டு தப்பிச் செல்வோரின் சொத்துக்கள் முடக்க ப்படும்.

* முறையற்ற முதலீடுகளை கண்காணிக்க புதிய சட்டம் செயல் படுத் தப்படும்.

* பாதுகாப்புத் துறைக்கு ரூ.2,74,140 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2019க்குள் வீடு இல்லாதவர்களுக்கு ஒரு கோடி வீடுகள்

* 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வரும் மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது,

* ஒரு கோடி குடும்பம் வறுமை நிலையில் இருந்து மீட்கப்படுவார்கள்.

* 2019ம் ஆண்டுக்குள் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் வகையில் ஒரு கோடி வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

* வீடு கட்ட ரூ.23 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு 13 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

* கிராமப்புற வீடு கட்டும் திட்டத்துக்கு கடன் வட்டி குறைக்கப்படும்.

ரயில்வே துறை:

*ரயில்வேயில் பாதுகாப்பு, சீர்திருத்தம் மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரி மை

* ரயில்வே துறை திட்டங்களுக்கு இந்த ஆண்டு ரூ. 55 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.

* இந்த ஆண்டில் 3500 கிலோமீட்டர் நீளத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைப்பு

* வரும் ஆண்டில் 9 மாநிலங்களுடன் சேர்ந்து 70 புதிய ரயில் திட்டங்கள் நிறைவேற்றம்

* 2019-க்குள் ரயில்பெட்டிகளில் பசுமைக் கழிவறை உருவாக்கப்படும்

* 2020 ஆண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள அகல ரயில் பாதைகளில் ஆளில்லாத ரயில்வே க்ராஸிங் இல்லாத நிலை உருவாக்கப்படும்.

* நகரமயமாக்கலுக்கு வெகுவாக உதவும் மெட்ரோ ரயில் சேவைக்கு என புதிய கொள்கை உருவாக்கப்படும்.   அதன்மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு

* நாடு முழுவதும் 500 ரயில்வே நிலையங்கள் ஊனமுற்றவர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கப்படும்.

* இனிமேல் ஐ.ஆர்.சி.டி.சி மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில்வே டிக் கெட்டுகளுக்கு சேவை வரி ரத்து

உயிர் காக்கும் மருந்துகள், கருவிகளுக்கான விலையை குறைக்க நடவடிக்கை.

2019க்குள் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் திட்டம் செயல்படுத்த ப்படும்.

வீடு கட்ட ரூ.23 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவு செய்வோர் கவனத்துக்கு

ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான சேவை வரி ரத்து செய்யப்படுகிறது.

1 லட்சத்து 55 ஆயிரம் கிராமங்களுக்கு இணையதள வசதி செய்து தரப்படும்.

மூத்த குடிமக்ளுக்கு ஸ்மார்ட் கார்டுடன் கூடிய ஆதார் அட்டை.

போக்குவரத்து கட்டமைப்புக்கு மொத்த ஒதுக்கீடு ரூ.2 லட்சத்து 41 ஆயிர ம் கோடி.

இது கடந்த ஆண்டு ரூ.2 லட்சத்து 31 ஆயிரம் கோடியாக இருந்தது.

உயர் கல்வி தேர்வுகளை நடத்த புதிய அமைப்பு உருவாக்கப்படும்.

உயர் கல்வி தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமை ஏற்படுத்தப்படும்.

ஏற்றுமதி கட்டமைப்புக்கு ரூ.39,61,245 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

புதிதாக 2 கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.

கிராமப்புற வளர்ச்சியே முக்கியம்

நாட்டின் வளர்ச்சிக்கு கிராமப்புற வளர்ச்சியே முக்கியம் என்று மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

கிராமங்களில் நாள்தோறும் 133 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்க ப்படும்.

கிராமப்புற பெண்களின் திறன் மேம்பாட்டுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக் கீடு செய்யப்படும்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு 13 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய ப்படடுள்ளது.

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு ரு.48,000 கோடி ஒதுக்கீடு.

கிராமப்புற வீடு கட்டும் திட்டத்துக்கு கடன் வட்டி குறைக்கப்படும்.

கிராமப்புறங்களில் வசிக்கும் கர்ப்பிணிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.

100நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பெண்களின் பங்கு 55 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

* இந்தியாவை தொழில்நுட்ப பலமிக்க நாடாக மாற்றுவதே இலக்கு.

* 2018 மே 1ம் தேதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் 100 சதவித மின் வசதி பெற இலக்கு.

* தீன் தயாள் யோஜன திட்டத்துக்கு ரூ.4500 கோடி ஒதுக்கீடு.

* பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை மத்திய அரசின் வெற்றிக்கு அடையாளங்கள்

* பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வருங்காலங்களில் பாதிப்பு வராது.

* கருப்புப் பணம் மற்றும் ஊழலற்ற பொருளாதாரத்தை உருவாக்க பட்ஜெட்டில் 10 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

*வளர்ச்சியை அடிப்படையாக வைத்து மத்திய பட்ஜெட் தயாரிக்க ப்பட்டுள்ளது.

*ஏழைகளுக்கு வீட்டு வசதி, கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

‘ஜாம்’ (ஜன்தன் – ஆதார் – மொபைல்) பரிவர்த்தனைகளே அரசின் இலக்கு: ஜெட்லி

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்

* வரும் நிதியாண்டில் விவசாயம் 4.1% ஆக வளர்ச்சி அடையும். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்.

*  விவசாயக் கடனாக ரூ.10 லட்சம் கோடி வழங்க இலக்கு. (கடந்த ஆண்டு சுமார் 9 லட்சம் கோடி வழங்கப்பட்டது)

* பயிர் காப்பீடு திட்டத்திற்காக ரு.13 ஆயிரம் கோடி ஒதுக்கீடு (கடந்த ஆண்டு ரூ.5,500 கோடி)

* வறுமைக் கோட்டிற்குக் கீழ் வசிக்கும் ஒரு கோடி குடும்பங்களை ஏழ்மையில் இருந்து விடுவிக்க புதிய திட்டம்.

*தூய்மை இந்தியா திட்டம் மூலம் கிராமங்களுக்கு குழாய் மூலம் குடிநீர்

* நாட்டில் 2019ம் ஆண்டுக்குள் 50 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளில் ஏழ்மை முழுமையாக நீக்கப்படும்.

* உலகின் 6வது  மிகப் பெரிய உற்பத்தி நாடாக இந்தியா திகழ்கிறது.

* சர்வதேச வளர்ச்சியின் மையமாக இந்தியா பார்க்கப்படுகிறது.

* பணமதிப்பிழப்பு நடவடிக்கை மத்திய அரசின் துணிச்சலான நடவடிக் கைக்கு உதாரணம்.

* நாட்டின் தொழில் துறை வளர்ச்சி விகிதம்  5.2 %மாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

* வளரும் நாடுகளின் வளர்ச்சி விகிதம் 4.1% முதல் 4.5% வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது

கட்டுப்பாட்டிற்குள் பண வீக்க விகிதம்

* மத்திய அரசின் நடவடிக்கையால் பண வீக்க விகிதம் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது.

*பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வரி ஏய்ப்பாளர்கள் தடுக்கப்பட்டு ள்ளனர்.

* பொருளாதார வளர்ச்சி 6.5 %மாக இருக்கும்!

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்க•

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: