Advertisements

இதற்கெல்லாம் என்ன காரணம் ? ஏன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ந‌டக்கின்றன?

இதற்கெல்லாம் என்ன காரணம்? ஏன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ந‌டக்கின்றன?

இதற்கெல்லாம் என்ன காரணம் ? ஏன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ந‌டக்கின்றன?

கோடிக்கணக்கான மக்கள் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாம் பழக்கம் வைத்துக்

கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கு. ஆனால் எதோ ஒரு குறிப்பிட்ட நபர் நமக்கு துணைவராக அல்லது துணைவியாக அமைவது ஏன் ?

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம். அதாவது அக்கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம். சில சமய ங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம். சிலருக்கு நல்லது செய்கிறோ ம். பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக நன்மைக ளைப் பெற்றுக் கொள்கிறோம். இக்கொடுக்கல் வாங்கலே “ருண பந்தம்” எனப்படுகிறது.

சிலருடைய உறவுகள் ஆனந்தத்தைக் கொடுக்கிறது. சிலருடைய வருகை மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சிலர் கூட வே இருந்து தொல்லை ப் படுத்துகிறார்கள். சிலரின் வருகை துக்கத்தை ஏற்படுத்துகிறது. பல சமயங்க ளில் இது ஏன் நிகழ்கிறது என்று தெரியாமலேயே தன் போக்கில் நம் வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடக் கின்றன. கனவில்கூட காண முடியாத பல ஆச்சர்ய ங்கள் நமக்கு சிலசமயங்களில் ஏற்படுகிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம் ? ஏன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ?

நாமே நம்தாயை, தந்தையை, சகோதர சகோத ரிகளை நண்பர்களை, மனைவியை, கணவனை , பிள்ளைகளை, தேர்ந்தெடுப்பதில்லை. நண்பர் களை தேர்ந்தெடுக்கலாம் என்று யாரே னும் கூறலாம். ஆனாலும் அதுவும்தானே நிகழ வே ண்டும். நம்மால் உருவாக்க முடியாது. முயற்சி மட்டுமே நம்முடையது. முடிவு? ஒருசிலர் நம் வாழ்க்கையிலிருந்து திடீ ரென்று காணாமல் போய் விடுவர். அது இறப்பால் மட் டுமல்ல, பல காரணங்களினால் நிகழும். அதே நபர் மீண்டும் நம் வாழ்வில் வேறு கோணத்தில் வேறு பார் வையில் தோன்றுவர்.

எதோ ஒன்று நம்மை அடுத்தவர் பால் ஈர்க்கிறது, அல்லது அடுத்தவரை காரணம் இல்லாமல் வெறுக்க வைக்கிறது. அது என்ன? சமன் செய்யாமல் மிச்சம் வைத்திருக்கும் கர்மகதிகளின் எச்சங்களே அவ்வாறு ஒரு ஈர்ப்பை அல்லது வெறுப்பை ஏற்படுத்துகிறதா ? இதற்கெல்லாம் தெரிந்த ஒரே காரணம் நம்முடைய “கர்ம வினை” தான் .

இதுநாள்வரை எத்தனையோ பிறவிகளை நாம் கொண்டிருக்கிறோம். அத் தனைப் பிறப்பிலும் பலப்பல பாவ புண்ணியங்களை சேர்த்திருக்கிறோம். அக்கூட்டின் பெயரே “சஞ்சித கர்மா ” எனப்படுகிறது. அதன் ஒரு பகுதியை இப்பிறவியில் அனுபவிக்க கொடுக்கப்படுகிறது. அதுவே ‘பிராரப்தக் கர்மா’ எனப்படுகிறது. இந்த பிராரப்தக் கர்மா நிறைவ டையாமல் நம்முடைய இப்பிறவி முடிவடையாது.நாம் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுதலைப் பெற முடி யாது.

இந்த வாழ்க்கை நடைமுறையில் நாம் ஒவ்வொரு வரிடமும் ஏதேனும் ஒன்றை கற்கிறோம் அல்லது கற்றுக் கொள்கிறோம். இதில் நாம் அனைவரும் அதிகமாக கற்பது அல்லது கற்பிப்பது நம் துணையு டன் மட்டுமே.

இது தவிர ‘ஆகாம்ய கர்மா’ என்று ஒன்றுள்ளது. அது கொடுக்கப்பட்டுள்ள இப்பிறவியில் நாம் செய்யும் நல்ல-கெட்ட செயல்களா ல் ஏற்படுவது. யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ உருவாக்கவோ முடியாது. அவரவர்கள் செய்வினையின் பயனாலேயே அவரவர்கள் அனுபவம் மற்றும் வாழ்க்கை அமையும் . துக்கமும், சந்தோஷமு ம், சண்டையும், சமாதானமும், ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும், அவரவர்கள் கர்மகதியே. இதைத் தான் “தீதும் நன்றும் பிறர் தர வாரா”  என நம் மதம் போதிக்கிறது.

நம்முடைய நல்ல கெட்ட காலங்களுக்கு நாம் மட்டுமே பொறுப்பு. அப்படி என்றால் ஆகாமி கர்மா நம்முடைய கையிலே யே இருக்கிறது. இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும், நீ எப்படி இருக்கப்போகிறாய் என் பது உன் கையிலேயே உள்ளது. நீ செய்யும் நற் செயல்களையும், வினை செயல்களையும் நீ மட் டுமே எதோ ஒரு பிறவியில் அனுபவிக்கப் போ கிறாய் என்பதை உணர்ந்தால், நீ என்ன செய்யப் போகிறாய்? எப்படி நட ந்துகொள்ளப் போகிறாய்? எது போன்ற வாழ்க்கைத் தட த்தை ஏற்படுத்திக் கொள்ளப் போகிறாய் என்பது உனக் குப் புலப்படும்.

இதை போதிப்பது தான் ” ஹிந்து மதம் “.

பாவபுண்ணியங்களுக்கு கூட்டல் கழித்தல் கிடையாது  இரண்டையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும். பணம் மட்டுமே எல்லா ப் பிரச்சனை களையும் தீர்த்து விடும் என்று ஒரு சித்தாந் தம் உள்ளது. ஆனால், பணமே இல்லாத ஒரு சாதாரண மனிதன்கூட தன்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில் சந்தோ ஷமாக இருக்கிறான். அதேபோல பெரும் பணக்காரர் களையும் ‘துக்க ங்கள்’ விடுவதில்லை.

சர்க்கரை ஆலை அதிபரானாலும் Diabetic ஆக இரு ந்தால் இனிப்புப் பண்டங்களை உண்ண முடியாது. பல கார்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் தன கால்களையே நடை பயிற்சிக்கு நம்ப வேண்டி யதாக உள்ளது.

‘வினை விதைத்த வழியில் விதி நடக்கும்’
‘விதி வகுத்த வழியில் நாம் நடக்க வேண்டும்’

நமக்கு விதிக்கப்பட்டது நம் கடமையைச் செய்வது மட்டுமே. பலனை ஆண்டவனிடம் விட்டுவிடுவோம். நடப்பதை ஏற்கும் பக்குவத்தை மட்டுமே நாம் வளர்த் துக்கொள்ளவேண்டும். அதை மாற்ற முயலும் போது, மேலும் மேலும் துன்பத்தையும் சோகத்தையுமே பலனாகப் பெறுகிறோம்.

தூய மனதுடன் உண்மையான அன்புடன் நடக்க வே ண்டும். எதிலும், எதற்கும் நிதானமும் பொறுமை யும் தேவை. நமக்கு நடக்கும் நடக்கப்போகும் நல்லதை யாராலும் கெடுக்கமுடியாது. அதேபோல் தீமையையும் கொடுக்க முடியாது.

Muthalagappan Ramaswamy Kandaramanickam

Karma, Runa Bandha, Runa, Sanjith Karma, Prapthak, Karma, Aagamya, Aakamya, Aahami Karma, Aagami,

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்ய‍வும்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: