Advertisements

20 வடிவ அம்மன்களும்- அந்த அம்ம‍ன்கள் தீர்க்கும் 20 வகையான துன்பங்களும் – பேரின்ப தகவல்

20 வடிவ அம்மன்களும்! அந்த அம்ம‍ன்கள் தீர்க்கும் 20 வகையான துன்பங்களும்! – பேரின்ப தகவல்

20 வடிவ அம்மன்களும்! அந்த அம்ம‍ன்கள் தீர்க்கும் 20 வகையான துன்பங்களும்! – பேரின்ப தகவல்

ஒவ்வொரு ஊருக்க்கும் ஒவ்வொரு சிறப்பிருக்கும். அதேபோல் அங்கிருக் கும் கோயில்களும் தனித்தனி

சிறப்பு வாய்ந்தவையாக இருக்கும். அந்த வகையில் எந்த ஊரில் உள்ள அம்மனை வணங்கினால் எந்தமாதிரியான பிரச்சனைகள் தீரும் என்பதை இங்கு காண்போம்.


1. விருதுநகர்

*விருதுநகரில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் சிவாம்சம் கொண்டவள். அதனால் கருவறையில் தேவிக்குமுன் சிங்கத்திற்குப் பதிலாக நந்தி வீற்றருள்கிறார். கண்நோய் உள்ளோர் தேவிக்கு அபிஷேகம்செய்த நீரால் கண்களைக் கழுவ நோய் நீங்குகிறது.


2. மதுரை 

*மதுரை சோழவந்தானில் உள்ள ஜெனகை மாரியம்மன். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிரசாதமான தீர்த்தத்தை அருந்த நோய் மறைகிறது.


3. மதுரை-எல்லீஸ் 

*மதுரை-எல்லீஸ் நகரில் அருளும் தேவி கருமாரியம்மனை அனைத்து மதத்தினரும் வழிபட்டு நலம் பெறுகிறார்கள்.


4. புதுக்கோட்டை 

*புதுக்கோட்டை-நார்த்தாமலையில் முத்து மாரியம்மன் திருவருள் புரிகி றாள். இங்கு அக்கினி காவடி எடுத்தால் தீராத நோய் தீர்கிறது. மழலை வரம் வேண்டுவோர் கரும்புத் தொட்டில் கட்டுகிறார்கள்.


5. நீலகிரி 

*நீலகிரி, குன்னூரில் தந்திமாரியம்மன் அருளாட்சி புரிகிறாள். தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் இந்த மாரியிடம் மனமுருக வேண்டிக்கொள்ள, உட னே பெருமழை பெய்கிறது.


6. ஊட்டி 

*ஊட்டியில் மகாமாரி, மகாகாளி இருவரும் ஒரே கருவறையில் அருள்கி ன்றனர். இங்குள்ள காட்டேரியம்மன் சந்நதியில் மந்திரித்துத் தரும் முடிக்கயிறு, தோஷங்கள், நோய்கள், பில்லி சூனியம் விலக்குகின்றன.


7. நாமக்கல்-ராசிபுரம் 

*நாமக்கல்-ராசிபுரத்தில் நித்ய சுமங்கலி மாரியம்மனை தரிசிக்கலாம். வருடம் முழுதும் அம்பிகையின் எதிரே சிவாம்சமான கம்பம் நடப்பட்டிரு ப்பதால் இப்பெயர். ஐப்பசி மாதம் புதுக் கம்பம் நடும்போது தயிர்சாதம் நிவேதிப்பர். அந்த தயிர்சாத பிரசாதத்தை உண்பவர்களுக்கு அடுத்த வருடமே மழலைப் பேறு கிட்டுகிறது.


8. கோவை 

*கோவையில் ஆட்சிபுரியும் தண்டு மாரியம்மன், குடும்ப வளம் பெருகவும் தீராத நோய்கள் தீர்ந்திடவும் அருள்கிறாள்.


9. சமயபுரம் 

*சமயபுரம் மாரியம்மன், மாசி மாதம் தன் பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதம் இருப்பவள். தாலிவரம் வேண்டும் பெண்கள் தங்கள் தாலியை நேர்த்திக்கடனாகச் செலுத்துகிறார்கள்.


10. திருச்சி 

*திருச்சி மணப்பாறையிலுள்ள மாரியம்மன் கோயிலில் திருமணத்தடை உள்ளவர்கள் மஞ்சள் கயிறு வாங்கி அம்மன் சந்நதியின் பின்னே உள்ள வேப்பமரத்தில் கட்டி நேர்ந்து கொள்ள, விரைவில் மணவாழ்வு கிட்டுகி றது.


11. திருப்பூர்

*கோடீஸ்வரி மாரி என்ற கோட்டைமாரி திருப்பூரில் அருள்கிறாள். கரு வறையில் அம்மனின் இரு புறங்களிலும் லட்சுமி, சரஸ்வதி இருவரும் அம்மனைப் போலவே சுயம்புவாக எழுந்தருளியிருக்கிறார்கள். இந்த அன்னையிடம் பூவாக்கு கேட்பது இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு.


12. தேனி-பெரிய குளம் 

*தேனி-பெரிய குளத்தில் உள்ள கௌமாரியம்மனுக்கு விவசாயம் செழிக்க தானியங்கள், காய்கறிகள், கனிகளைப் படைக்கின்றனர்.


13. கரூர்

*கரூர் மகா மாரியம்மன், வழக்கு, வியாபார சிக்கல் நீங்க, காணாமல் போன பொருட்கள் திரும்பக் கிடைக்க அருள்கிறாள்.


14. திண்டுக்கல் 

*திண்டுக்கல்-கோட்டை மாரியம்மனை பிரார்த்தித்து உப்பையும் மஞ்சளை யும் கொடிமரத்தில் சமர்ப்பிக்க, வேண்டுதல் நிறைவேறுகிறது.


15. தஞ்சை-புன்னைநல்லூர் 

*தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன், துளஜாமன்னர் மகளின்கண்நோய் தீர்த்தவள். புற்றுருவாய் இருந்த இந்த அம்மனுக்கு யந்திரப் பிரதிஷ்டை செய்தவர் நெரூர் சதாசிவப் பிரம்மேந்திரர்.


16. காரைக்குடி 

*காரைக்குடி, முத்துப்பட்டினம், மீனாட்சிபுரத்திலுள்ள முத்துமாரியம்மனு க்கு தக்காளிப் பழத்தை காணிக்கையாக்கி, தக்காளி பழச்சாறால் அபிஷேகம் நடத்தப்படுகிறது.


17. கோவை

*கோவை- உடுமலைப்பேட்டை மாரியம்மன் ஆலயத்தில், மார்கழி திரு வாதிரையன்று 108 தம்பதியருக்கு மாங்கல்ய பூஜை செய்யப்பட்டு சுமங் கலிகளுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்படுகிறது.


18. ஈரோடு

* ஈரோடு- பெரிய மாரியம்மன், வெப்பநோய்களை நீக்குகிறாள். அம்மை நோய் கண்டவர்களை அன்னை குணப்படுத்துகிறாள்.


19. கோபிசெட்டிபாளையம் 

* கோபிசெட்டிபாளையம் சாரதா மாரியம்மன் ஆலயத்தில் மண் சட்டியில் நெருப்பை ஏந்தி பூசாரி வருவதை தரிசித்தால் வாழ்வு வளம் பெறுவதாக நம்பிக்கை நிலவுகிறது.


20. ஈரோடு


  * ஈரோடு-கருங்கல்பாளையம், சின்ன மாரியம்மன் மழலை வரம் அருள் கிறாள். இத்தல விபூதி பிரசாதத்தை நெற்றியில் பூசியும் தண்ணீரில் கரைத்து அருந்தவும் நோய்கள் நீங்குகின்றன.


==> திருமதி காயத்ரி வெங்கட்ராம ஐயர், vidhai2virutcham@gmail.com எனும் எமது மின்னஞ்சலுக்கு அனுப்பிய பதிவு

இதன் கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: