Advertisements

வீடு கட்டும்போது கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள்- அவசிய அலசல்

ஒரு கட்டிடம்/வீடு கட்டும்போது கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள் – அவசிய அலசல்

ஒரு கட்டிடம்/வீடு கட்டும்போது கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள் – அவசிய அலசல்

தங்களுடைய கட்டிடம்/ வீடு இப்படித்தான் அமைக்க வேண்டும் என்ற கனவுடன் புதிதாக வீடு கட்டுபவர்கள் இருப்பார்கள். ஆனால்

கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் நபர் கனவை நிறைவேற்றக்கூடியவராக இருப்பாரா என கவலை ஒருபுறம் இருக்க செய்யும். உங்கள் கனவு இல்லம் நனவாக சில முக்கிய அம்சங்களை புதிய வீடு கட்ட உள்ளவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

புதிய வீடு கட்டுபவர்களுக்கு சில டிப்ஸ்:

மனையை சதுரம் செய்யும்போது மூலை மட்டம்கொண்டு 90டிகிரி இருக் கும் வகையில் அமைக்கவேண்டும். அஸ்திவாரம் அமைக்கும்போது மண் பிடிமானம் இல்லாதபோது கன்சாலிடேசன் செய்து திமிசு கட்டையில் நன்றாக அடித்தபிறகு கான்கிரீட் போடவேண்டும். சாலை மட்டத்தில்இருந்து கட்டிடத்தி ன் பேஸ்மென்ட் தேவையான அளவு உயரமாக வைக்க வேண்டும்.

கட்டுமானத்தின் போது கவனிக்க வேண்டியவை

கட்டுமானத்தின்போது வாட்டர்லெவல் டியூப் கொத்தனார் பயன்படுத்துகி றாரா என்பதை கவனிக்கவேண்டும். அஸ்திவாரம், பெல்ட், லிண்டல், கான்கிரீட் என அனைத்து நிலைகளிலும் லெவல் டியூப் அவசியம் பயன்படுத்த வேண்டும். செங்கற்க ளை நனைத்த பிறகே கட்ட அனுமதிக்க வேண்டும். செங்கல் சுவர் ஒவ்வொரு அடுக்காக கட்டும்போதும் முடிவில் குத்து கல்லாக வைத்து கட்டப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

சுவர் கட்டும்போது இணைப்பு வரும்போது கண்டிக்கல் உடைத்து போட்டு கட்ட வேண்டும். ஒரே நாளில் 5 அடிக்குமேல் கட்ட அனுமதிக்க கூடாது. இதற்கு மேல் அனுமதித்தால் தரம் குறைந்துவிடும். செங்கல் சுவருடன் காலம், பீம் போன்றவை இணைக்கும்போது கம்பிவலை வைத்து தேவை க்கு ஏற்ப 6,8mm கம்பி துளையிட்டு கட்டுதல் வேண்டும்.

கலவையின்போது மணல், ஜல்லி, சிமென்ட், தண்ணீர் ஆகியவை தேவையான அளவில் கலக்கப்படுகிறதா என் பதை கவனிக்கவேண்டும். குறிப்பாக மணலில் வரும் களி மண் கட்டிகள், சிறியகற்கள் ஆகியவற்றை அகற்றியபிறகு கலவை போடப்படுகிறதா என்பதை கண்காணிக்கவேண்டும். பூச்சுவே லை செய்வதாக இருந்தால் நன்றாக மணல் சலித்த பிறகுதான் பயன்படு த்த வேண்டும். கதவு, ஜன்னல்களை பொருத்துவதற்கு முன்பாக வாட்டர் லெவல் டியூப் உபயோகிக்கப்படுகின்றதா என்ப தை கட்டாயம் கவனிக்க வேண்டும்.

தரையில் வாட்டத்தை வைத்து கிரானைட், டைல்ஸ், மார்பில் ஆகியவை போட வேண்டும். கட்டிடத்திற்கு காலைமாலை கட்டாயம் தண்ணீ ர் விடப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். மாடிப்படிகள் அல் லது வீட்டின்முன் படிகள் அமைக்கும்போது அனைத்துபடிகளும் ஒரே சீரான முறையில் அமைக்கப்படுகின்றதா என்பதை கவனிக்க வேண்டும்.

எலக்ட்ரிக்கல் பாயின்ட் அமைக்கும்போது அனைத்து இடங்களில் சம அளவு உயரத்தில் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். போர்டிகோ அமைக்கும் போது தண்ணீர் தேங்கி நிற்காத வகையில் வாட்டம் வைக்க ப்படுகிறதா, லெவல் டியூப் கொண்டு சரிபார்க்கப்படுகி ன்றதா என்பதை கண்காணிக்க வேண்டும்

===> தினகரன்

இதன் கீழ் உள்ள புகைப்படத்தை கிளிக் செய்யவும்

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: