Advertisements

ஸ்மார்ட்போன் பேட்ட‍ரியில் சார்ஜ் அதிகநேரம் நீடித்திருக்க சில குறுக்கு வழிகள்

ஸ்மார்ட்போன் பேட்ட‍ரியில் சார்ஜ் அதிகநேரம் நீடித்திருக்க சில குறுக்கு வழிகள்

ஸ்மார்ட்போன் பேட்ட‍ரியில் சார்ஜ் அதிகநேரம் நீடித்திருக்க சில குறுக்கு வழிகள்

மக்க‍ளுக்கு தலைவலி கொடுக்கும் தலையாய பிரச்சனைகளில் இந்த ஸ்மார்ட் போனும் ஒன்று. இந்த‌

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரது முக்கியக் கவலைகளில் ஒன்று அதன் பேட்டரி. வீடியோ, கேம்ஸ் ஆகியவற்றை அதிகநேரம் பயன்படுத்தா விட்டாலும்கூட, சார்ஜ் விரைவில் இறங்கிவிடும் . ஆனால் இந்த 7 விஷயங்களைக் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் மொபைல் சார்ஜ் விரை வில் தீர்வதைத் தவிர்க்கலாம்.

1.குறுஞ்செய்தி, அழைப்புகள், அறிவிப்புகள் என அனைத்துக்கும் வைப்ரேட் ஆப்ஷனை தேர்வு செய்யாதீர். இது ஒலியை விடவும் அதிக சக்தியை இழுக்கும். தவிர்க்க முடியாத சூழல்களைத் தவிர்த்து, மற்ற நேரங்களில் வைப்ரேஷன் ஆப்ஷனை எடுத்துவிடுங்கள்.

2. வைஃபை, ப்ளூடூத் பயன்படுத்திவிட்டு, தேவையற்ற சமயங்களில் ஆஃப் செய்யவும்.

3. இணையம் மூலமாக பிரவுசரில் ஏதேனும் தேடிக்கொண் டிருக்கும் போதோ, கேம்ஸ் விளையாடும்போதோ அந்த அப்ளிகேஷனை முழுமையாக குளோஸ் செய்யாமல், மொ பைல் திரையை அணைக்கக்கூடாது. அப்படிச் செய்தால், திரைக்குப் பின்னால் அந்த அப்ளிகேஷன் இயங்கிக் கொண் டே இருக்கும்.

4.நெட்வொர்க் கவரேஜ் இல்லாதஇடங்களில் இருக்கும் போது, உங்கள் மொபைல் ஆண்டனாக்கள் அதிக மின் சக்தியை செலவுசெய்து, நெட்வொர்க்கைத் தேடும். எனவே டவர் கிடைக்காத இடங்களில் ஏர் பிளேன் (Air Plane) மோட்-ஐ ஆன் செய்து விடலாம். இதனால் எந்த இணையமும் இல்லாமல் போனில் இசை கேட்கலாம். கேம்ஸ், வீடியோ பார்க்கலாம்.

5.போனில் இருக்கும் ஒவ்வொரு ஆப்களையும் அடிக் கடி அப்டேட் செய்வது கொஞ்சம் சிக்கலான வேலை தான். ஆனால், இதன்மூலம் பேட்டரித் திறனை அதிகரி க்க முடியும். காரணம், ஒவ்வொரு ஆப் நிறுவனமும் தனது புதிய அப்டேட்டில், முன்பை விட குறைவான மெமரி எடுக்கும் படியும், சார்ஜ் செலவாகும்படியும் வடிவமைப்பார்கள்.

6. ஆட்டோ சிங்க் ஆப்ஷனை அணைத்து விடுவது மொபைல் டேட்டாவுக்கும், பேட்டரிக்கும் நல்லது. இல்லையெனில் மொபைல் டிஸ்ப்ளேவை ஆஃப்செய்து வைத்திருக்கும் போது ம், மொபைல் பயன்படுத்தாதபோதும்கூட, இவை பின்னணி யில் நமது டேட்டாவை தின்றுகொண்டே இருக்கு ம்.

7. உங்கள் மொபைல் பேட்டரி எவ்வளவு செலவாகி உள்ளது என எடுத்துப்பார்த்தால் அதில் அதிகபங்கு வகிப்பது மொபைல் திரைதான். இதன் வெளிச்ச அளவைக் குறைப்பதே சார்ஜ் குறைவதைத் தடுக்கும் முக்கிய வழி. ஆட்டோ ப்ரைட்னஸ் ஆப்ஷனைத் தேர்வு செய்வது நல்லது

=> காமினி கணேசன் அவர்கள், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிய பதிவு

இதன் கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: