Advertisements

காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவருக்கு கிடைக்கும் மாய சக்திகளும், ந‌ற்பலன்களும்! – ஓரலசல்

காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவருக்கு கிடைக்கும்  மாய சக்திகளும், ந‌ற்பலன்களும்! – ஓரலசல்

காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவருக்கு கிடைக்கும்  மாய சக்திகளும், ந‌ற்பலன்களும்! – ஓரலசல்

காயத்ரி மந்திரத்தை அன்றாடம் சொல்வதால் என்ன நன்மை கிடைக்கிறது என்று தெரியுமா..?

இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளில் மிக முக்கிய பங்கை வகிப்பது மந்திரங்கள் ஓதுவது. கோவில்களில்

கடவுளுக்கு பூஜை செய்யும் போது, பூசாரிகள் பரபரப்புடன் மந்திரங்கள் ஓதுவதை நாம் பார்த்திருப்போம். ஏன் இந்த மந்திரங்கள் ஓதப்படுகிறது என்பது என்றைக்காவது உங்களுக்கு தோன்றியதுண்டா? அல்லது ஒவ் வொரு கடவுளுக்கும் வெவ்வேறு மந்திரம் என ஏன் வைத்திருக்கிறோம் என்பதையும். அவைகளுக்குள் என்ன வேறுபாடுகள் என்பதையும் எப்போ தாவது யோசித்திருக்கிறீர்க ளா? நம்மில் பலரும் அதை பற்றியெல்லாம் அதிகமாக யோசித்திருக்க வே மாட்டோம். ஆனால் இப்படி பரபரப்புடன் மந்திரங்கள் ஓதுவதால் நீங்கள் நினைப்பதை விடவும் அதிகளவில் தாக்கங்கள் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

பொதுவாக சமஸ்கிருதத்தில் தான் மந்திரங்கள் ஓதப்படும். மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் விசேஷ ஒலியுள்ளது. சமஸ்கிருத மந்தி ரங்களை ஓதும் போது, ஒலி என்பது மிகவும் முக்கியமாகும். அதனை சரியாக உச்சரிக்கும் போது உங்களுக்குள் அது மாற்றங்களை நிகழ்த்தும். இதனால் உங்களுக்கு சக்தியும் வலுவும் கிட்டும். மனித மனத்தின் மீது பல்வேறு ஒலியும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும். இலைகளுக்கு மத்தியில் வீசும் காற்றின் மென்மையான சத்தம் உங்கள் நரம்புகளை ஆற் றும். ஓடையில் ஓடும் நீரின் சத்தம் இதயத்தை வசியப்படுத்தும். இடிகளி ன் சத்தம் பயத்தை உண்டாக்கும்.

மந்திரங்கள் ஓதுவதால் நம் இயல்பான உணர்ச்சியின் அளவுகள் மேலும் அதிகளவில் உயர்ந்திடும். அதுஒரு ஊக்கியாக செயல்பட்டு, வாழ்க்கை யில் நம் இலக்குகளை அடைய உதவிடும். நோய்களை குணப்படுத்தும், தீய சக்திகளை விரட்டும், செல்வத்தை பெறுக்கும், தெய்வீக சக்திகளை பெற உதவும், பேரின்ப நிலைக்கு நம்மை தள்ளும் சக்திகளை மந்திர ங்கள் கொண்டுள்ளது.

அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த மந்திரங்களில் ஒன்று தான் காயத்ரி மந்திரம். காயத்ரி மந்திரத்தில் சில தெய்வீக குணப்படுத்தும் சக்திகள் உள்ளது. இந் த மந்திரம் நம்முடைய மூன்று கட்ட உணர்ச்சிகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் – விழித்திருத்தல், தூங்குதல், கனவு காணுதல். சரி, காயத்ரி மந்திரத்தின் அருமையான குணப்படுத்தும் சக்திகள் தான் என்னென்ன? இதோ தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மந்திரம்

ஓம் பூர் புவஹ ஸ்வஹ
தத்ஸவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோநஹ ப்ரசோதயாத்

அர்த்தத்தின் சுருக்கம்:

வழிபடத்தக்க சூரியனின் ஆன்மிக உணர்ச்சிகளின்மூலம் படரும் தெய்வீ கமான ஒளியின் மீது நாம் தியானம் செய்வோம்; அது நம் உள்ளுணர்வை தட்டி எழுப்பும்.

மந்திரத்தின் அர்த்தம்

இம்மந்திரம் இருப்பதற்கான காரணத்தை “காயத்ரி” என்ற வார்த்தையே விளக்கி விடுகிறது. கயண்டம் ட்ரியேட் இட்டி என்ற சமஸ்கிருத சொற் றொடரில் இருந்து வந்ததுதான் “காயத்ரி”. இந்த மந்திரத்தை ஓதுபவர்க ளை, மரணம் வரை அழைத்து செல்லும் மோசமான சூழ்நிலைகளில் இருந்து பாதுகாக்கும். இந்த மந்திரத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தை க்குமான அர்த்தம்:

ஓம்: பிரம்மா அல்லது முதன்மை கடவுள்
பூர்: அதிமுக்கிய ஆன்மீக ஆற்றலின் உள்ளடக்கம் (பிரான்)
புவஹ: துன்பங்களை அழிப்பவர்
ஸ்வஹ: சந்தோஷத்தின் உள்ளடக்கம்
தத்: அது
ஸவிதுர்: சூரியன் போன்ற பிரகாசம் மற்றும் பளபளப்பு
வரேண்யம்: சிறந்த, பெரு மகிழ்ச்சி நிலை
பர்கோ: பாவங்களை அழிப்பவர்
தேவஸ்ய: இறைதன்மை
தீமஹி: உள்ளீர்த்துக் கொள்ளலாம்
 தியோ: அறிவாற்றல்
யோ:யார்
நஹ: நாம்
ப்ரசோதயாத்: ஊக்குவிக்கலாம்

மந்திரத்தின் மூலம்

தோராயமாக 2500-3000 ஆண்டுகளுக்கு முன், முதன் முறையாக வேதங் களில் தான் காயத்ரி மந்திரம் இயற்றப்பட்டது. இதுவே முதன்மையான மந்திரமாக கருதப்படுகிறது. இதனை மிகவும் ரகசியமாக பல வருடங்க ளாக காத்து வந்தனர் யோகிகளும் ரிஷிகளும். அதற்கு காரணம் இந்த மந்திரத்தில் உள்ள கற்பனைசெய்து பார்க்கமுடியாத அளவிலான சக்திக ளே.

காயத்ரி மந்திரம் ஓதுவதால் ஏற்படும் பயன்கள்

இந்த குறிப்பிட்ட மந்திரத்தின் அதிர்வுகளால் உங்கள் வாழ்க்கையில் பல பயன்கள் இருக்கும்.

1. தடைகளை நீக்கும்
2. ஆபத்தில் இருந்து பாதுகாக்கும்
3. அறியாமையை போக்கும்
4. எண்ணங்களை தூய்மைப்படுத்தும்
5. உங்கள் தொடர்பு திறன்களை மேம்படுத்தும்
6. மனித மனம் சார்ந்த பார்வையை திறக்கும்.

காயத்ரி மந்திரத்தின் குணப்படுத்தும் சக்திகள்

காயத்ரி சக்தி என்பது ஒரு ஆற்றல் தளமாகும். இங்கே மூன்று ஆற்றல்கள் உச்சத்தை அடைகிறது – தேஜஸ் அல்லது சுடரொளி, யாஷஸ் அல்லது வெற்றி, வர்சாஸ் அல்லது அறிவாற்றல். காயத்ரி மந்திரத்தில் ஓதும் போது இந்த ஆற்றல்கள் உங்களுக்குள் உட் புகும். இதனால் அருளக்கூடிய சக்தியை உங்களுக்கு அளிக்கும்.  அப்படிப்பட்டவர்களிடம் இருந்து ஆசி பெறுபவர்களுக்கும் கூட இந்த ஆற்றல்கள் பரவும். உங்கள் அறிவாற்ற லை கூர்மையாக்கி, காலப்போக்கில் களங்கமடையும் நினைவாற்றலை தீட்டவும் காயத்ரி மந்திரம் உதவும்.

காயத்ரி மந்திரத்தின் குணப்படுத்தும் சக்திகள்

காலையில் சூரியன் விடியும் நேரமோ அல்லது மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் நேரமோ தான் காயத்ரி மந்திரத்தை ஓதுவதற்கான சிறந்த நேரமாகும். இந்நேரத்தில் தான் மொத்தமாக இருட்டாகவும் இருக்காது, அதே சமயம் மொத்தமாக வெளிச்சமாகவும் இருக்காது. இந்த தருணத்தி ல், மாற்றப்பட்ட உணர்ச்சி நிலைக்கு மனது நுழையும். மாற்றங்கள் அல் லது இயக்கத்தில் மாட்டிக்கொள்ளாமல், உங்கள்மீது கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. இந்நேரங்களில் நம் மனம் சுலபமாக குழம்பி விடு ம். செயலற்ற தன்மை, சோம்பல் மற்றும் எதிர்மறை போன்ற நிலைக்கு நாம் தள்ளப்படலாம். அப்படி இல்லையென்றால் நேர்மறை சுடரொளியி ல் தியான நிலையை அடைவோம். இந்நேரத்தில் காயத்ரி மந்திரத்தை ஓதினால், நம் மனதிற்கு புத்துணர்ச்சி அளித்து, அதனை உயர்ந்த மற்றும் ஆற்றல் மிக்க நிலையில் பராமரித்திடும். இதனால் உங்களுக்கு அளவுக் கு அதிகமான நேர்மறை ஆற்றல்கள் கிடைக்கும். மந்திரத்தை ஓதும் போது இது உங்களுக்கு ஆற்றல்களையும் புத்துணர்ச்சியையும் சீரான முறையில் அளிக்கும்.

===> தணுஜா, tamilboldsky


இதன் கீழே உள்ள‍ புகைப்படத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: