Advertisements

இன்றைய மண‌ப்பெண்களின் எதிர்பார்ப்பு குறித்து தினமணி வெளியிட்ட‍ ஆச்சரியத் தகவல்கள்

இன்றைய மண‌ப்பெண்களின் எதிர்பார்ப்பு குறித்து தினமணி வெளியிட்ட‍ ஆச்சரியத் தகவல்கள்

இன்றைய மண‌ப்பெண்களின் எதிர்பார்ப்பு குறித்து தினமணி வெளியிட்ட‍ ஆச்சரியத் தகவல்கள்

வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதெல்லாம் அந்தக் காலம், இப்போதெல்லாம்

அறிவியல், மருத்துவம் இரண்டின் மூலமும் பொருத்தம் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

இன்றைய‌ இந்தியப் பெண்களில் சுமார் 60% பேர் தங்களுக்கான‌ வாழ்க்கைத் துணைக்கான தேடலில் தங்களது சாதியைவிட பிற சாதி வரன்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கிறார்கள் என ’பானிஹால்’ எனும் வரன் தேடலுக்கான இணையதளம் ஒன்று சமீபத்தில் தனது சர்வே முடிவை அறிவித்திருக்கிறது.

இந்தப் பானிஹால் தனது வாடிக்கையாளர்களின் திருமணப் பொருத்தங்க ளை நியூரோ சயன்ஸ் அடிப்படையில் பார்த்துத் பொருத்தமான வரன்க ளைத் தேர்ந்தெடுக்க உதவுகிறதாம். இந்த இணையதளம் இதுவரை 6000 வாடிக்கை யாளர்களிடம் நடத்திய ஒரு ஆய்வில்;

மணப்பெண்களின் எதிர்பார்ப்பு என்பது;

இரண்டில் ஒரு பெண் கூட்டுக் குடும்ப வாழ்வை விரும்புகி றார். அவர்களுடைய தேடல் கூட்டுக் குடும்பத்தில் தொடர்ந்து வாழத் தயாராக இருக்கும் மணமகனாகவே இருக்கிறது.

தோற்றத்தைக்கண்டு மயங்குவதெல்லாம் மலையேறிப் போய்வி ட்டது. 6/10 பெண்கள் திருமண வரன்களுக்கான இணைய தள சுய விவரப் பக்கத்தில் புகைப்படம் கூடப் பகிராத மணமகன்களைத் தொடர்பு கொண்டு விசாரிப்பதில் ஆர்வமாக இருக்கிறா ர்களாம்.

முன்பெல்லாம் மணமகன் தரப்பிலிருந்து தான் திருமணப் பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது சம்பிரதாயமாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அப்படியல்ல இந்த இணையதளத்தையே எடுத்துக் கொள்ளுங்கள், இவர்களது பயனாளர்க ளில் 40% பெண்கள் என்பதோடு திருமணப் பேச்சு வார்த்தைகளின் போது ஆண் வீட்டாரை விட பெண் வீட்டார் தான் இத்தகைய பேச்சுவார்த்தை களை முன்னெ டுத்துச் செல்வதில் தெளிவாகவும், ஆர்வமாக வும் ஈடுபடுகிறார்கள்.

அதோடுகூட இன்றைய பெண்கள் மணமகனைத் தேர்ந்தெடுப்பதில், அவ ரது சொத்து மதிப்பைக் காட்டிலும் அவரது கல்விக்கும், உத்யோகத்திற்கும் முன்னுரிமை தருகிறார்கள். குறைந்த பட்சம் தங்களது வாழ்க்கைத் துணை பட்டதாரியாகவாவது இருக்க வேண்டும் எனும் விழிப்புணர்வும், எதிர்பார்ப்பும் 85% பெண்களுக்கு இருக்கிறது.

இதன் கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: