Advertisements

சஷ்டி விரதத்தின்போது முருகனைப் பற்றிய வியத்தகு அரிய தகவல்கள்- அனைத்தும் நீங்களறியாதவை!

சஷ்டி விரதத்தின்போது முருகனைப் பற்றிய வியத்தகு அரிய தகவல்கள்- அனைத்தும் நீங்களறியாதவை!

சஷ்டி விரதத்தின்போது முருகனைப் பற்றிய வியத்தகு அரிய தகவல்கள்- அனைத்தும் நீங்களறியாதவை!

க‌டந்த மாதம் 31 ஆம் தேதியிலிருந்து எதிர்வரும் 5 ஆம் தேதி வரை கந்த சஷ்டி விரதம் பெருவாரியான

முருக பக்தர்களால் கடைபிடிக்க‍ப்பட்டு வருகிறது. அவர் களுக்காக முருகனை பற்றிய வியத்தகு தகவல்களை இங் கே கொடுத்திருக்கிறோம் படித்துபக்தியுற்று பயனுறுங்கள்.

1. முருகன் அழித்த 6 பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.

2.முருகப்பெருமான் போர்புரிந்து அசுரர்க ளை அழித்த இடம்மூன்றாகும். (i)சூர பத் மனை வதம் செய்தது-திருச்செந்தூர், (ii) தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங் குன்றம், (iii) இந்த இருவரின் சகோதரனா ன சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.

3.செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.

4. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள 6 கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற 6 ஆயுதங்களும், இடப்புறம் உள்ள 6 கரங் களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டா யுதம், வில் போன்றவையும் இருக்கும்.

5. கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதி காலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.

6. முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய் ஆகிய உகந்த நாட்கள் ஆகும்.

7.முருகன், கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங் கேயன் என பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவணபவன் என்று அழைக்க ப்பட்டான். கார்த்திகைபெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும் சக்தியினால் 6 உருவமும் ஓர் உரு வமாகஆக்கப்பட்டதால் கந்தன் என்றும்பெயர் கொண்டா ன்.

8. முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன் என அருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.

9.அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக்கலவையே முருகன்ஆவான்.

10. முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞான சக்தி எனப் பெயர் பெறும்.

11. முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர்.

12.பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக்கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.

13.தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடு மியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக்கோயில், மாமல்லபு ரம்.

14. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது.

15. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.

16. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

17. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயரு ண்டு. இக்கோழியே வைகறைபொழுதில் ஒங்கார மந்திரத் தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.

18. முருகப்பெருமானுக்கு உகந்தமலர்கள் முல்லை , சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.

19.முருகனை 1முறையே வலம் வருதல்வேண்டும்.

20. முருகனைப் போன்று கருப்பை வாசம் செய்யாத வேறு தெய்வம் வீர பத்திரர்.

21. முருகப்பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல்திருக்கோ வில் புதுக்கோட்டை-ல் உள்ள ஒற்றைக் கண்ணூர்த் திரு க்கோவில் ஆகும். முதலாம் ஆதித்த சோழன் இதனைக் கட்டினான். இக்கோவிலில் முருகனுக்கு யானை வாகனமாக உள்ளது. ஒரு திருக்கரத்தில் ஜப மாலையும், மறு கையில் சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே அருள் பாலிக்கிறார்.

22. முருக வழிபாடு என்பது ஷண்மதம் என்று சொல்லப்படுகி ன்றது.

23. முருகன் சிறிதுகாலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகை யில் திண்டுக்கல்லில் இருந்து 7 மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் 4 தலையுள்ள முருகன் ஆலயம் அமைந் துள்ளது.

24. கந்தனுக்குரிய விரதங்கள்: (i) வார விரதம் (ii) நட்சத்திர விரதம், (iii) திதி விரதம்.

25. முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும்.

=> அணுராதா சுரேந்திர பாபு

இதன் கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: