Advertisements

இறைவன் நுழைந்த அதிசயக் குகையும்! அந்த மர்மக்குகையில் வாழும் தேவ கன்னிகைகள்!- ஓரரிய தகவல்

இறைவன் நுழைந்த அதிசயக் குகையும்! அந்த மர்மக்குகையில் வாழும் தேவ கன்னிகைகள்!- ஓரரிய தகவல்

இறைவன் நுழைந்த அதிசயக் குகையும்! அந்த மர்மக்குகையில் வாழும் தேவ கன்னிகைகள்!- ஓரரிய தகவல்

சித்தர்கள் வாழும் சுருளி மலை.

மேற்கு தொடர்ச்சி மலை …

வட இந்தியாவிலிருந்து தொடங்கி பல்லாயிரம் மைல் அளவில் பரந்து நமது தமிழ்நாட்டின் வழியாக

கேரளா வரை அமைந்துள்ளது. 18 சித்தர் பெருமக்களும் சங்கம் அமைத்து வாழ்ந்த மலை எனவும், தென்இந்தியாவின் “கைலாய மலை” எனப்போற்றப்படு ம் “சதுரகிரி மலை” இதில்தான் அமைந்துள்ளது. இதனுடன் இணைந்து கேரளா எல்லை வரை பரவி தெய்வீக ஆற்றலுடன் விளங்கும் ஒரு மலைதான் “சுருளி மலை” ஆகும். இம் மலை தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சுருளி மலை பற்றிய அதிசய செய்தி ஒன்று சுமார் 25-வருடங்க ளுக்குமுன்பு ஒரு வார இதழில் வெளிவந்தது. அதில் உள்ள விபரம் :-

“அந்தக் கால அதிசயம் – மர்மக்குகையில் தேவ கன்னிகைகளா?” என்ற தலைப்பில் வெளி யான கட்டுரை விபரம்.

மதுரையில் இருந்து தேனி வழியாக 70-கிலோ மீட்டர் தொலை வில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதில் அமைந்துள்ளது சுருளி மலை.

ஆண்டு முழுதும் தண்ணீர் வற்றாமல் எப்போதும் கொட்டிக் கொண்டிருக்கும் சுருளி அருவி மிகப் பிரசித்தி பெற்றது. இவ்வ ளவு நீர் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிர்.

ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் காட்டுக்குள் மனிதர்கள் செல்வதில்லை. கதம்ப வண்டுகள் ஐந்து கொட்டினாலே ஆள் காலி என்கின்றனர்.

அருவிக் கரையில் இருந்து மூன்று பர்லாங் தொலைவில் “கைலாச நாதர் குகை” உள்ளது. கம்பம் பள்ளத்தாக்கில் வசிக்கும் பெரும்பா ன்மை இனமான கன்னடம் பேசும் கவுடர்களில் “மார்கழியார்” என்ற பிரிவினர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்களுக்குள் பூசாரி ஒரு வரை தேர்ந்தெடுக்கவும், சுருளி மலையில் மறைந்துள்ள “கிருஷ்ண பகவானின்” புல்லாங் குழலைக் கண்டு பிடிக்கவும் இங்கு யாகம் வளர்த்து, அன்ன தானம் செய்தனர். அப்போது 10 வயது சிறுவனுக்கு சாமி [அருள்] வந்து கைலாசநாதர் குகைக்குள் நுழைந்தாக வேண்டும் என்றான்.

அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். குகைக்குள் நுழைவது அத்தனை சுலபமல்ல. கும்மிருட்டு விஷ ஜந்துக்கள் இருக்கலாம், மேலும் நிமிர்ந்த நிலையில் உள்ளே புகமுடியாது. படுத்தநிலையில் தவழ்ந்துதான் போக வேண்டும். எனவே சிறுவன் கையில் ஒரு அகல்விளக்கை கையில் பிடித்தபடி தவழ்ந்து சென்றான். சுமார் 1 மணிநேரம் கழித்து வெளியே வந்து அவன் சொன்ன செய்திகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி ன.

உள்ளே மிகப்பெரிய அரங்கம். ஒளி உமிழும் உருண்டைகள் ஆங்காங்கே கல் தூண்களின் நுனியில் பொருத்தப்பட்டிருந்தனவாம். திருநீற்றில் புரண்டு எழுந்தார் போல் வெண்மை யான உடலும், நீண்ட தாடியும் கொண்ட முனிவர்கள் கல் ஆசனங்களில் அமர்ந்து தேவ கன்னிகளின் நடனத்திற்காக காத்திருந்தா ர்களாம்.

மற்றொரு அதிசயச் செய்தி இருப்பதாகவும், அது “தேவ ரகசியம்” என்றும் அந்த சிறுவன் கூறினான்.

சுருளி மலையில் உள்ள அருவியிலிருந்து மேற்கே சுமார் ஐந்தாறு மைல்களுக்கு அப்பால் தான் கேரளா, தமிழ் மாநிலங்களுக்கு தீராத பிரச்சனையாக இருந்து வரும் “கண்ணகி கோயில்” [மங்கள தேவி கோட்டம்] உள்ளது.

மதுரையை எரித்த கையோடு தலைவிரி கோலமாக நடந்து வந்த கண்ணகி இந்த அருவியில் நீராடி புஷ்பக விமானம் ஏறிச் சென்றதாக கூறுகிறார்கள். மேலும் இங்கு தோண்டி எடுக்கப்பட்ட கண்ணகி சிலை மற்றும் கல்வெட்டு க்கள் மூலமாக இன்னும் பல ஆதாரபூர்வமாக வியத்தகு செய்திகளை ஆரா ய்ச்சியாளர்கள் விரைவில் தருவார்கள் என எதிர்பார்க்கலாம்.

சுருளிமலை – தேவலோக கிரி கைலாசப் புடவு – இமயகிரி சித்தர் வனம்
ஈசனின் இறை அருள் நிறைந்த கைலாயத்தில் [இமயமலை கைலாயம்] ” இமயகிரி சித்தர்” என்றொருவர் இருந்தார். அவர் சிவபெருமானைத் தினமு ம் நேரில் பூசிக்கப் பெற்றவர். அவர் மீது சிவபெருமானுக்கு மிகவும் பிரிய முண்டு. அப்படியிருக்கின்ற காலத்தில் துர்வாச மகரிஷி, கண்ணுவ மகரிஷி முதலான ரிஷி கள் சதுரகிரி மலை அடிவாரத்தில் தபோவனம் என்னும் மாவூற்றில் யாகங்கள் எக்கியங்கள் வளர்த்து இறைவனை நோக்கித் தவம் செய்தார்கள்.

அத்தவத்தைக்கண்டு சிவபெருமான் தவம்செய்த முனிவர், ரிஷிகளுக்கு தேவ லோக வாழ்வைக் கொடுத்து தாமும் “மகா லிங்க” சொரூபமாய் அங்கேயே அமர்ந்திருந்தார். அந்த சொரூபந்தான் இப்போது இருக்கின்ற சதுரகிரி மலை மூலவராகிய மகாலிங்கமாகும்.

பின்பு தேவலோக வாழ்வைப் பெற்ற ரிஷி, முனிவர்கள் மன மகிழ்வோடு “ககனகுளி கை”இட்டு ஆகாயவெளியில் பறந்துபோகும்போது சுருளிமலையை கடக்கும்போது அங்கு ஏராளமான ரிஷிகளும், முனிவர்க ளும், சித்தர்களும் அருந்தவம் செய்து கொண்டிருப்பதையும், அந்த வனத்தினழகும், தேவலோக கானல்களையும், வனப்பூஞ் சோலை களும், சப்த கன்னிமார்கள் சிவபெருமானுக்கு புஷ்பம்எடுத்து ப்போகின்றநேர்மைகளும், உதகநீர் அங்காங்கு மிகுதியா ய் இரு ப்பதும், அந்த உதக நீரில் இறங்கிய மனிதர்கள் கல்லாக மாறி இருப்பதும், போன்ற ஏராளமான அதிசயங்கள் நிறைந்த இம்ம லையில் தவம்செய்வது முக்கியம் எனத் தெரிந்து அங்கு இறங்கி சில காலம் தவம் செய்து பின்பு கைலாயம் செல்கின்றனர்.

கைலாயத்தில் உள்ளே துர்வாச மகரிஷி, கண்ணுவ மகரிஷி முதலான ரிஷிகள் செல்லும் போது எதிரே இமயகிரி சித்தர் வருகின்றார். ரிஷிகளை வணங்கி ‘சுவாமி தாங்கள் எங்கி ருந்து வருகின்றீர்கள்’ என்று கேட்க அதற்கு ரிஷிகள் கூறியது “நாங்கள் சதுர கிரி தபோவனம் என்னும் மாவூற்றில் அருந்தவம் செய்து இறைவன் சிவபெருமானால் கைலாய வாழ்வைப் பெற்று இங்கு வருகையில் சுருளிமலையின் பெருமைக ளை அறிந்து அங்கு சில காலம் தவம் செய்து இப்போது தான் இங்கு வருகின்றோம் ” என்றனர்.

இதனைக் கேட்ட இமயகிரி சித்தர் மனமகிழ்ந்து உடனே புறப்பட்டு சுருளிமலைக்கு வந்து அங்கு தவம்செய்யும் ரிஷி, முனிவர், சித்தர்களைப் பா ர்த்து தவம்செய்ய விரும்பி அங்கிருந்த சித்தர்களில் ஒருவரான “பூத நாராயண சித்தரை” அழைத்து மலையில் இருக்கின்ற பூஞ்சோலைகளை கண்டு மகிழ்ந்து குகை வாசம் செய்வத ற்கு புடவு செய்ய இடம் பார்த்து ஆற்றோரம் இருக்கின்ற குண்டு மலையில் தலைமட்டும் நுழையும் படியாகவும் உள்ளே விசாலமாகவும் புடவு செய்து [குகை] குகைக்கு முன் பூத நாராயண சித்தரை காவலிருக்க வைத்துச்  சொன்னதாவது,

இந்த குகைக்குள் வரவேண்டுமென்ற விருப்பம் உள்ளவர்கள் தவ சிரேஷ்டர்களாக இருந்தால் மட்டும் உள்ளே நுழைய இடம் கொடுக்கும். உள்ளே வரலாம், இவை அல்லாதவர்கள் குகைக்குள்ளே தலையை விட்டால் தலை நுழையாது என்று சொல்லி குகைக்குள் நுழைந்து தவம் செய்து கொண்டிருக்கும் காலத்தில்,

கைலாயத்தில் சிவபெருமானார் நம்மை தினந்தோறும் பூசிக்கின்ற இமயகிரி சித்தரை காணோம் என்று ஞான திருஷ்டியால் பார்க்க அவர் சுருளி மலையில் தவம்செய்வதை அறிகின்றார். சித்தருக்கு வரம் கொ டுக்க விரும்பி அம்மை உமையவளுடன் இறைவனும் சுருளி மலைக்கு எழுந்தருள்கின்றார்.

சுருளிமலையில் தவம் செய்கின்ற ரிஷிகள், முனிவர், சித்தர்கள் இறை வனை கண்டு தரிசனம் செய்கின்றனர். அப்போது சிவபெருமான் அவர்களைப் பார்த்து, “அருந்தவ ரிஷி, முனி,சித்தர்களே உங்கள் தவம் முடிந்தவுடன் கைலாய வாழ்வு கொடு ப்போம்” என்று சொல்லி விட்டு மாயா சொரூபமாய் இமயகிரி சித்தர் இருக்கின்ற குகைக்கு ள் நுழைந்தார்.

அந்த புடவுக்குள்ளே வந்த சிவபெருமானைக் கண்டு இமயகிரி சித்தர் மெய்பதறி அடி வணங்கி தெண்டனிட அவரை அழைத்துக் கொண்டு இறைவன் வெளிவருகின்றார்.

வெளியே வந்த இறைவன் சித்தரிடம் என்ன வரம் வேண்டும் என கேட்க அவர் சுவாமி அடியேன் இந்த சுருளிமலையில் புடவில் சில காலம் வசிக்க விரும்புகின்றேன். ஆகையால் தங்களை யான் கைலாயத்தில் தினமும் பூசித்த வழக்கப்படி இங்கேயும் பூசிக்கும் வரம் வேண்டும் என்று கேட்க அதற்கு சிவபெருமா னும்,அம்மையும் அப்படியே கொடுத்தோம் என வாக்கருளி, சுவாமி லிங்க சொரூபமாயும், தாய் அம்மை சொரூபமாயும் அமர்ந்தனர்.

அப்போது அங்கிருந்த ரிஷி,முனி,சித்தர்கள் அனைவரும் பார்த்து இறைவன் சிவபெருமா னே இந்தப் புடவுக்குள் [குகைக்குள்] நுழைந்தமையால் இந்தப் புடவுக்கு “கைலாச ப்புடவு” என்ற பெயருடன் விளங்கட்டும் என பெயரிட்டனர். அன்றுமுதல் இப்புடவு என்ற “கைலாச புடவு” கைலாசநாதர் குகை” என்றபெயருடன் இன்றுவரை விளங்குகின்ற து.

இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லாத சிறப்பு மிக்க இறைவன் நுழைந்த அதிசயக் குகை இது ஒன்றுதான்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

இதன் கீழே உள்ள‍ புகைப்படத்தை கிளிக் செய்யவும்

 

Advertisements

One Response

 1. Hai….
  On Oct 29, 2016 5:27 PM, “வி தை 2 வி ரு ட் ச ம்-(அ-ஃ)- V i d h a i 2 V i r
  u t c h a m (A-B)” wrote:

  > vidhai2virutcham posted: “இறைவன் நுழைந்த அதிசயக் குகையும்! அந்த
  > மர்மக்குகையில் வாழும் தேவ கன்னிகைகள்!- ஓரரிய தகவல் இறைவன் நுழைந்த அதிசயக்
  > குகையும்! அந்த மர்மக்குகையில் வாழும் தேவ கன்னிகைகள்!- ஓரரிய தகவல்
  > சித்தர்கள் வாழும் சுருளி மலை. மேற்கு தொடர்ச்சி மலை … வட இந்தியாவிலிருந்”
  >

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: