Advertisements

தனியார் பள்ளிகளும்! பதறும் பெற்றோர்களும்! – தி இந்து நாளிதழில் வெளிவந்த பதறவைக்கும் பதிவு!

தனியார் பள்ளிகளும்! பதறும் பெற்றோர்களும்! – தி இந்து நாளிதழில் வெளிவந்த பதறவைக்கும்  பதிவு!

தனியார் பள்ளிகளும்! பதறும் பெற்றோர்களும்! – தி இந்து நாளிதழில் வெளிவந்த பதறவைக்கும்  பதிவு!

தனியார் பள்ளிகளில் மதிப்பெண்கள் பெறும் இயந்திரங்கள் தயாரிக்கப் படுகின்றன. நடுத்தர வயதைச் சேர்ந்த அவர்

பதற்றத்தோடு காத்திருந்தார். அவருடைய உடையையும் தோரணையை யும் பார்த்தாலே ஏதோ ஒரு பெரு நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் உள்ள அதிகாரி என்பதைச் சொன்னது. பக்கத்தில் அவர் மனைவி. இருவ ரும் பொறுமை இல்லாமல் அரை மணிநேரம் காத்திருந்த பிறகு அவர்கள் அந்த அறைக்குள் அழைக்கப்பட்டார்கள். வெளியே வர 15 நிமிடங்கள் ஆயின.

இது தனியார்பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியரைப் பெற்றோர்கள் சந்தி க்கும் காட்சி. இந்தச் சந்திப்பு எப்போது நடக்க வேண்டும் என்று முடிவு செய்வது பள்ளி நிர்வாகம். தேர்வுக்குப் பிந்தைய சந்திப்பு என்றால் முன் கூட்டியே தகவல் கொடுப்பார்கள். புகார் அல்லது அதுபோன்ற பிரச்சினை என்றால் திடீர் அழைப்புவரும். இப்போது வரஇயலாது என்னும் பதிலைப் பள்ளி நிர்வாகங்கள் பெரும்பாலும் ஏற்பதில்லை. குழந்தையின் கல்வி அல்லது மனநிலை தொடர்பான பிரச்சினை என்பதால் பெற்றோர் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு விழுந்தடித்துக்கொண்டு ஓடுவார்கள். பள்ளியின் முதல்வர் விடுக்கும் அழைப்பு கிட்டத்தட்ட நீதிமன்ற அழைப்பு போலத்தான்.

பள்ளி முதல்வரைப் பெற்றோர் எதிர்த்துப் பேச முடியாது. தங்கள் தரப்பை எடுத்துச் சொல்வதாக இருந்தாலும் மிகவும் கவனமாகத்தான் பேச வேண் டும். நிர்வாகத்துக்கு எதிராக இவர்கள் எழுப்பும் ஒவ்வொரு குரலும் ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் குழந்தை மீது திரும்புவதற்கான சாத்தியம் அதிகம். குழந்தையை நடத்தும் விதத்திலிருந்து, மதிப்பெண், விளையா ட்டு, கலை முதலான துறைகளில் கிடைக்கும் வாய்ப்புகள் எனப் பல வித ங்களிலும் பாதிப்பு இருக்கலாம். எனவே பெற்றோர் எவ்வளவு பெரிய ஆட்களாக இருந்தாலும்கூட கூடியவரை பள்ளி நிர்வாகத்தை எதிர்த்துப் பேச மாட்டார்கள்.

தனியார் பள்ளிகளைப் பற்றிபேசும்போது அவற்றின் ‘கட்டணக்கொள்ளை ‘ பற்றிப் பேசப்படும் அளவுக்கு அவை தரும் கல்வியின் தரம் பற்றிப் பேசப் படுவதில்லை. பல தனியார் பள்ளிகளில் ஆண்டொறுக்குச் சராசரியாக ஒரு மாணவருக்கு 20,000 முதல் 70,000 வரை கட்டணம் வசூலிக்கும் நிலையில் அதுபற்றி பேசாமல் இருக்க முடியாது. ஆனால், கல்வித்தரம்?

தனியார் பள்ளிகளின் பெருவாரியான மாணவர்கள் வாங்கும் மதிப்பெண் கள், பொதறிவு, ஆங்கில மொழி அறிவு, போட்டித் தேர்வுகளிலும் நுழை வுத் தேர்வுகளிலும் செயலாற்றும் விதம், தன்னம்பிக்கையின் அளவு ஆகி யவை அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களைவிடவும் அதிகமாக இருப்பதை ப் பொதுவாகக் காண முடிகிறது. ஆனால், இவற்றை வைத்துக்கொண்டு மட்டும் இந்தப் பள்ளிகள் தரமான கல்வியை வழங்குவதாகச் சொல்லி விட முடியுமா?

தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் ஆங்கில வழிப்பாடம் இருப்பதாலும் ஆங்கிலத்துக்குக் கொடுக்கும் முக்கியத் துவத்தாலும் ஆங்கில அறிவு ஓர ளவு நன்றாகக் கிடைத்துவிடுகிறது. ஆனால், மற்ற பாடங்களைப் பொறு த்தவரை மாணவர்களின் குடும்ப, சமூகப் பின்புலங்களில் இருக்கும் வலு வான ஆதாரங்கள்தாம் அவர்களை நன்றாகப் படிக்க வைக்கின்றன. வீட் டிலும் தாங்கள் சார்ந்த நடுத்தர வர்க்கச் சூழலிலும் இருக்கும் நெருக் கடிகள், பள்ளியில் கொடுக்கப்படும் நெருக்கடி, அடுக்கடுக்காக வைக்கப் படும் தேர்வுகள், தேர்வுகளுக்கான பயிற்சிகள் ஆகியவற்றால் இந்த மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் வாங்குகிறார்கள்.

சொல்லித்தருவதன் மூலம் அதிக மதிப்பெண்கள் என்பது ஒரு சில பள்ளி களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். பெரும்பாலான பள்ளிகள் நிர்ப் பந்தத்தை ஏற்படுத்தியே மாணவர்களை படிக்கவைக்கின்றன. கற்பித்தல் (Teaching) என்பதைவிடப் பயிற்றுவித்தல் (coaching) என்பதுதான் இந்தப் பள்ளிகளில் அதிகம். அதாவது, மதிப்பெண் பெறும் இயந்திரங்கள் இங்கே தயாரிக்கப்படுகின்றன. இந்த மதிப்பெண்ணையே அளவீடாக பெற்றோரு ம் எண்ணுவதாலேயே தாங்கள் எல்லா விதத்திலும் சரி எனும் முடிவுக்கு வந்துவிடுகின்றன தனியார் பள்ளி நிர்வாகங்கள்.

கணிதம், அறிவியல் முதலானவற்றில் கோட்பாடுகளைப் புரியவைக்கும் கற்பித்தல் முறை கடைப்பிடிக்கப் படுவதில்லை. தனியார் பள்ளிகளில் படிக்கும் பல மாணவர்களிடம் அவர்கள் கல்வி பற்றி உரையாடியிருக்கி றேன். அந்த உரையாடல்களில் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் படிப்பதெல்லாம் சொற்களைத்தான். கோட்பாடுகளையோ அடி ப்படைகளையோ புரிந்துகொண்டு படிப்பதில்லை. கேட்டால், அதையெ ல்லாம் யாரும்சொல்லித்தருவதில்லை என்றே சொல்லியிருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில்கூட, சரளமாகப் படிக்கவும் பேசவும் பயிற்றுவிக்கும் அளவு க்கு இலக்கணம் சொல்லித் தரப் படுவதில்லை. ஆங்கிலத்திலேயே புழங் குவதால் மாணவர்கள் அம்மொழியை இயல்பாகக் கற்றுக்கொள்கிறார் கள் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழில் தடுமாறுவதையும் இதோடு சேர்த்துப் பார்க்க வேண்டும்.

மாணவர்களில் பலர் பொது அறிவு, அறிவியல், தொழில்நுட்பம் முதலா னவற்றைப் புரிந்துகொள்ளும் திறன் அதிகம் பெற்றிருப்பதன் காரணம் பெரும்பாலும் அவர்களுடைய இயல்பான ஆர்வமும், குடும்பச் சூழலும், சொந்த முயற்சியும்தான். பள்ளி முதல்வரும் ஆசிரியர்களும் தங்கள் பள்ளியைப் பற்றியும் தங்க ளது அலாதியான அணுகுமுறைகள் பற்றியும் பேசும் பகட்டுப் பேச்சுகளே பெற்றோர்–ஆசிரியர் கூட்டங்களை ஆக்கிரமி த்திருக்கும். இதையெல்லாம் கேட்கும் பெற்றோர்கள், கல்வி, குழந்தைக ளை நடத்தும் விதம் என்று தங்களுக்குத் தெரிந்த எதையாவது பகிர்ந்து கொண்டாலோ, அதை வைத்துக் கேள்வி எழுப்பினாலோ, எல்லாமே தங்களுக்குத் தெரியும் என்ற ரீதியில் பதில்வரும். அதோடு, இக்கேள்வி யின் தாக்கம் குழந்தையின் மீது எதிரொலிக்கும்.

நண்பர் ஒருவர், தன் பையன் படிக்கும் பள்ளியில், மாணவர்கள் தூக்கும் பையின் எடை பற்றி பேசியிருக்கிறார். செய்தித்தாளில் வந்திருந்த தகவ லை ஆதாரமாகக் காட்டி, இவ்வளவு எடையை ஒரு குழந்தை தூக்கக் கூடாது என்றிருக்கிறார். முகம் சிவந்துபோன முதல்வர், நாங்கள் அப்படி த் தூக்கச் சொல்வதில்லையே என்று சொல்லி அந்த விவாதத்தை முடித் துக்கொண்டுவிட்டார். ஆனால், மறுநாள் வகுப்பில் அக்குழந்தையிடம் இது பற்றி ஆசிரியைகள் குத்தலாகப் பேசியிருக்கிறார்கள். கடும் மன உளைச்சலுக்கு ஆளான அக்குழந்தை, “நீங்க ஏன் எங்க டீச்சர் கிட்ட என் பையைப் பத்தி கேட்டீங்க?” என்று நண்பரிடம் கேட்டு அழுதிருக்கிறது. கேள்வி எழுப்பினால், அது மீண்டும் தன் குழந்தையின் தலையில்தான் வந்து விடியும் என்பதையே நம்முடைய பள்ளிகள் நமக்கு சொல்கின்றன.

மாணவர் சரியாகப் படிக்கவில்லை என்றால் பெற்றோர் அழைக்கப்பட்டு க்கிட்டத்தட்ட எச்சரிக்கப்படுகிறார்கள். பதறிப் போகும் பெற்றோர் மேலும் பணம் செலவுசெய்து தனிப் பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். போதாக்குறை க்குத் தாங்களும் சொல்லிக்கொடுக்கிறார்கள். மிகவும் புகழ்பெற்ற தனி யார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் கணிதம் முதலான பாடங்க ளுக்குத் தனிப் பயிற்சி வகுப்புக்குச் செல்கிறார்கள் என்றால் இந்தப் பள்ளிகளின் கல்வித் தரத்தைப் பற்றி என்ன சொல்ல?

பொதுவாக, எங்கே நாம் அதிகமாக விலை கொடுக்கிறோமோ அங்கே கேள்வி கேட்கும் உரிமை நமக்கு அதிகமாகக் கிடைக்கிறது. பெரிய உண வகங்களிலும் கடைகளிலும் வாடிக்கையாளருக்கு ஒப்பீட்டளவில் அதிக மரியாதை கொடுக்கப்படுவதைப் பார்த்திருப்போம். ஆனால், கல்வி விஷ யத்தில் இதற்கு நேர்மாறாக நடக்கிறது. அதிகமாகப் பணத்தைக் கொட்டி க்கொடுக்கும் பெற்றோர்கள் நிர்வாகத்தைக் கேள்வி கேட்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

இது அதிகாரப் போக்கு மட்டும் அல்ல; நுண்ணுணர்வற்ற தடித்தனமும் கூட. அதிகார போதை ஏறிய இந்தப் பூனைக்கு யார் மணி கட்டுவது?

– அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

இதன் கீழே உள்ள‍ புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: