Advertisements

செல்வி ஜெயலலிதாவைப் பற்றி சில தகவல்கள் உங்களுக்காக . . .

செல்வி ஜெயலலிதாவைப் பற்றி சில தகவல்கள் உங்களுக்காக . . .

செல்வி ஜெயலலிதாவைப் பற்றி சில தகவல்கள் உங்களுக்காக . . .

தற்போதைய தமிழக முதலமைச்ச‍ர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு திடீரென்று ஏற்பட்ட‍ உடல்நலக்குறைவால், கடந்த

மாதம் 22 ஆம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை உள்நோயாகியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே அவரைப் பற்றிய வதந்திகளும் அவ்வ‍ப்போது பரவி வருகின்றன• அவரைப் பற்றி உங்களுக்கு தெரியாத தகவல்கள்இதோ 

கோமளவள்ளி என்ற பெயரை அவரே மறந்திருப்பார்.பிறந்ததும் ஜெ. வுக்கு சூட்டிய பெயர் அது.ஆனால் சில காலத்தில் ஜெயலலிதா ஆகி ப்போனார்.ஜெயா, ஜெய், லில்லி என பல பெயர்களில் பள்ளித்தோழிகளா ல் அழைக்கப்பட்டவர். ஆனால், அவ ரது அம்மாவுக்கு  இவர் “அம்மு”. அதி முகவினருக்கு “அம்மா”.

சர்ச் பார்க் பள்ளி மாணவி என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால், மாம் பலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்து விட்டுத் தான் மெட்ரிக் வரை சர்ச் பார்க்கில் படித்தார்.”இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் சர்ச்பார்க்கில் படிக்க வேண் டும்”என்பதை தனது ஆசையாகச் சொல்லியிருந்தார்.

போயஸ் கார்டன்,சிறுதாவூர்,ஹைதராபாத் திராட்சைத்தோட்டம்,ஊட்டி கொடநாடு எஸ்டேட் ஆகிய நான்கும் ஜெ. மாறிமாறி தங்கும் இடங்கள். தற்போது ஹைதராபாத் செல்வதை நிறுத்தி விட்டார். இப்போதெல்லாம் திடீர் ஓய்வுக்கு சிறு தாவூர். மாதக்கண க்கில் தங்க வேண்டு மென்றால் கோத்த கிரியில் உள்ள கோடநாடு.

சினிமா காலத்தில் இருந்தே இவரை “வாயாடி”என்று அழைத்தவர் எம்.ஜி. ஆர். இதுபற்றி நிருபர் ஒருவர் ஜெ.விட ம் கேட்டதுக்கு, “அவர் கலகல,நான் லொட லொட”என்றாராம் சிரித்தபடி. உடல்நலனில் ஆரம்ப காலத்தில் அதிக அக்கறையுடன் இருந்தவர். தற்போது சில நிமிடங்கள் நடைப்பயிற் சி மட்டும் மேற்கொ ள்கிறார். இவர் நடித்த மொத்தப்படங்கள் 115. எம்.ஜி. ஆருடன் நடித்தவை 28. இருவரும் இணைந்து நடித்த முதல்படம் “ஆயி ரத்தில் ஒருவன்”.

“சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா”என்ற ” அரசிளங்குமாரி” படப்பாடல் தான் எனக்கு எப்போதும் பிடித்த நல்ல பாடல் என்பார். அப்பாடலை எழுதிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் மனைவியிட ம் 10 லட்சம் பணம் கொடுத்து அவரது எழுத்துக்களை நாட்டுடமை யாக்கினார். “அரசியலில் நான் என்றைக் குமே குதிக்க மாட்டேன் “என்று பேட்டி கொடுத்தவர் ஜெயலலிதா. “நாடு போகிற போக்கைப் பார்த்தால் ஜெய லலிதா கூட முதலமைச்சராகி விடுவார் போல “என்று இவர் நடிக்க வந்த காலத்தில் பேட்டியளித்தார் முரசொலி மாறன்.

ஜெயலலிதா முதலில் குடியிருந்தது தி நகர் சிவஞானம் தெருவில்.பிறகு அடையாறில் சில காலம் இருந்தார்.படங்கள் குவி ந்து நடிப்பில் கொடிகட்டிய காலத்தில்தான் போயஸ் வீடு கட்டப்பட்டது.அதன் ஒவ்வொரு செங்கல்லையும் பார்த்து கட்டியர் இவருடைய அம்மா சந்தியா.அதனால் “வீட்டுக்குள் என்ன மாற்றமும் செய்யலாம்.ஆனால் அம்மா வைத்த. வாசலை மட்டும் மாற்றக்கூடாது என க் கூறியிருக் கிறார்.

எப்போதும் அம்மா செல்லம்தான்.அவருக்கு இர ண்டு வயதாக இருக்கும்போது அப்பா இறந்துவிட அந்த நினைவுகள் இல் லை. போயஸ் வீட்டுக்குள் நுழையும் இடத்தில் இவரது தாயார் சந்தியா, எம்.ஜி.ஆர்.ஆகிய இருவரின் படங்கள் மட்டுமே இருக்கும். எம்.ஜி.ஆர் ரசி கர் மன்ற விழாவில் ஆறடி உயரமுள்ள வெள்ளி செங்கோலை எம்.ஜி .ஆருக்கு ஜெய லலிதா வழங்கினார். இவருக்கு மிகவும் பிடித்த படம் இதுதான்.

பெருமாளை விரும்பி வணங்குகிறார்.மன்னார்குடி இராஜகோபாலசாமி இதில் முதன்மை யானது.மயிலை கற்பகாம்பா ளையும்,கும்பகோணம் ஐயாவாசி பிரத்தியங்கிரா தேவியையும் சமீப காலமாக வண ங்கி வருகிறார். தினமும் காலையில் நிஷா காந்தி எனப்படும் இரு வாட்சி மலர்களை பறித்து பூஜைக்கூடையில் தயார்நிலையில் வைத்திருப்பார்கள் கார்டன் பணி யாளர்கள். அதை எடுத்தபடியே பூஜையறைக்குள் நுழை வார்.சமீபமாக துள சியும் பூஜையில் தவறாமல் இடம்பெறுகிறது.

யாகம் வளர்ப்பதிலும்,ஹோமத்தில் உட்காருவதிலும் ஜெயல லிதாவிற் கு ஈடுபாடு அதிகம். யாகத்தில் 6 மணிநேரம் வரை கூட உட்கார்ந்திருக் கிறார். அவசரமாக மந்திரம் சொன்னா லோ, தவறாக மந்திரம் சொன்னா லோ கண்டுபிடித்து நிறுத்தச் சொல்லும் அளவுக்கு வேத ஞானம் உண்டு.

சிறுதாவூர் பங்களா இருக்குமிடம் மொத்தம் 116 ஏக்கர். அங்கு புறா, கிளி, காடை, கௌதாரி போ ன்றவற்றை வளர்த்து வந்தார். இந்தி ரா,சந்திரா என்ற ஈமூக்களும் வளர்த்தார். இரண்டும் திடீ ரென இறந்துவிட ஈமு வளர்ப் பதைய விட்டுவிட் டார். பரதம்,ஓரிண்டல் டான்ஸ்  இரண்டையும் முறைப்படி கற்று அரங்கேற்றம் செய்தவர்.முதல்வராக இருந்தபோது ஒருமுறை ஊட்டி யில் மேடையைவிட்டு இறங்கி வந்து ஆடினார்.

ஜெ.வின் 100-வது படத்துக்கான பாராட்டு விழாவில் அப்போதைய முத ல்வர் கருணாநிதியால் “நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் ஜெயலலிதா”என்று பாராட்டப்பட்டவர். பழைய பாடல்கள் கேட்பதில் அதிக ஆர்வமுள்ளவ ர். ஜெயா டிவியில் வரும் பழைய பாடல்கள் அனை த்தும் இவருடைய விருப்பங்கள். ரயில் பயணம் பிடிக்காது. கார் மற்றும் ஹெலிகாப்டர் பயணங்கள் தான் அதிக விருப்பம்.

போயஸ் வீட்டில் எப்போதும் 7 நாய்க்குட்டிகள் இருக்கும்.அவரது பிறந்த நாளையொட்டி ஆண்டுதோறும் ஒரு குட்டி புதிதாக இணைந்து கொள்ளு ம். இந்த எண்ணிக்கை காலப்போ க்கில் அதிகமானதால் சில குட்டிகள் சிறுதாவூர், கோடநாடு என அனுப்பி வைக்கப்படு கின்றன.

இந்தியாவில் உள்ள அத்தனை பிரபலங்களையும் தனது “வாக் அண்ட் டாக் “பேட்டிக்கு வர வழைத்த NDTV-யால் ஜெயலலிதாவின் மனதை மட்டும் மாற்ற முடியவே இல்லை. கடைசி வரை உறுதியாக இருந்து மறுத்துவிட்டார். ஓஷோவின் புத்தகங்ளை மொத்தமாக வாங்கி படித்து வந்தார்.இப்போது ரமணர் பற்றியே அதிகம் படிக்கிறார். ரமணர் தொடர்பான முக்கிய புத்தகங்கள் அனைத்தும் சமீபகாலமாக அவர் மேஜையில் உள்ளன.

ஜெயலலிதாவின் முழுஇருப்பும் போயஸ் கார் டனின் முதல் மாடியில்தான் .அங்கு சசிகலா மற்றும் முக்கியப்பணியாளர்கள் தவிர யாருக்கு ம் அனுமதி இல்லை. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்தின் முதல் மாணவியாக வந் தவர் ஜெயலலிதா . திரைப்பட துறையை ஜெ. தெரிவு செய்திருந்தாலும் வழக்குரைஞ ராக வேண்டுமென்பதே அவரது லட்சியமாக இருந்தது.ஆனால் குடும்பச்சூழல் காரணமாக நடிப்புத் தொழிலை முன்னெடுக் கும் நிலை ஏற்பட்டது.

பாடசாலை மாணவியாக இருக்கும்போதே ஜெய லலிதா பல்வேறு நாடகங்களில் நடித்துள்ளார்.அதில் உன்று TEA HOUSE என்ற ஆங்கில நாடகம்.அதன் பின் னர் THE EPISTLE என்ற ஆங்கிலப்படத்திலும் நடித்து ள்ளார். திரையிலகில் அதிக வெள்ளிவிழா திரைப்ப டங்களை வழங்கிய சாதனை ஜெவுக்கு உண்டு.அவர் நடித்துள்ள 92 தமிழ்படங்களில் 85 படங்கள் வெள்ளி விழா கண்டவை.

சிவாஜியுடன் இவர் நடித்துள்ள தெய்வ மகன் திரைப்படம்தான் ஆஸ்காருக்கு பரிந்திரை செய்யப்பட்ட முதல் தமிழ் படம். ஜெயலலிதா அறிமுகமான 5 மொழித் திரை ப்படங்களும் பெரும் வெற்றிப்பெற்றவை. “நான் அனுசரித்து ப் போகிற வள்தா ன்.ஆனால் எனக்கென்று சில சிந்தனைகள் உண்டு. அதை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டேன் என்று தன் கேரக்ட ருக்கு விளக்கம் அளித்து ள்ளார்.

அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவோம்..!

இது ஒரு அரசியலுக்கு அப்பாற்ற பதிவு…

==> பதுபதி பரசுராம்

இதன் கீழே உள்ள‍ புகைப்படத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: