Advertisements

ஆணும் பெண்ணும் சமம் என்பதை ஏற்கமுடியாது. ஏன்?

ஆணும் பெண்ணும் சமம் என்பதை ஏற்க முடியாது. ஏன்?

ஆணும் பெண்ணும் சமம் என்பதை ஏற்கமுடியாது. ஏன்?

ஆணும் பெண்ணும் சமம் என்று யாராவது சொன்னால் தைரியமாக சமம் இல்லையென்று மறுத்துபேசுங்கள். அப்ப‍டி

பேசுவதற்குமுன் கீழே உள்ள‍ பதிவை பொறுமையாக படித்து விட்டு பேசுங்கள். நீங்கள் சொல்வதை ஆமாம் ஆணும் பெண்ணும் சமமல்ல‍ என அவர்களும் ஒத்துக் கொள்வார்கள்.

பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிக ளை செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது ! உதாரணமாக பெண்ணால், தொலைக்காட்சி பார்த் துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும், பிள்ளைகளுக்கு தேவையான பணிவி டையையும் செய்ய முடியும். (உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்.)

ஆண்களின்மூளை ஒருநேரத்தில் ஒருபணியைசெய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஆண்களால் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டே தொலைபேசி யில் பேசமுடியாது அவர்களின் கவனம் தொலைக்காட் சியில் இருக்கும் அல்லது தொலைபேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது!)

மொழி:

பெண்களால் இலகுவாக பல மொழிகளைக்கற்றுக்கொள்ள முடியும்! அதனால்தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள். 3 வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும்போது அதே வயது பெண் குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம்.

பகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS):

ஒருபிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகு ப்பாய்வு செய்து தீர்மானத்திற்குரியபடிகளை தீர்மானி ப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாலான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால் எந்த பிரச்சனைக்கும்ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆண் களின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

ஆனால் பெண்களின் மூளையால் இதை செய்ய முடி யாது. அதுமட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்துகொள்ள முடியாது.

வாகனம் ஓட்டுதல்:

வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும்போது, தூரத் தில்வரும் ஒருவாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை வாகனத்தின்போக்கில் ஏற்படஇருக்கும் மாற்ற ங்களை (Signals) முன்கூட்டியே விரைவாக கணித்து அதற்கு ஏற்றபோல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும்.

ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புக்களை மேற் கொள்ளும். இதற்கு காரணம், ஆண்களின் “ஒரு பணி யை செய்யக்கூடிய மூளைத்திறன்” ஆகும். உதாரண மாக வாகனம் செலுத்தும்போது இசையைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் ஆண்களின் கவனம் வாகனம் செலுத்துவதில்தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர் கொள்கி ன்றார்கள். (ஹெட்போனில் பாட்டு கேட்டுக்கொண்டு scooty ஓட் டும் பெண்கள் ஜாக்கிரதை).

பொய்ப்பேச்சு:

ஆண்கள், பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக பொய் என்பதை அறிந்து கொள்வார்கள்!

ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும்போ து ஆண்களால் அதை உணரமுடிவதில்லை. (என் மனை வி ஒன்றும் தெரியாத அப்பாவி என்று 99 சதவீதம் ஆண்கள் இன்றும்கூட தவறாக நம்பி கொண்டு இருப்பார்கள்) காரணம் பெண்கள் பேசும்போது 70% ஆன முக மொழியையு ம் 20% உடல்மொழிகளையும் 10%ஆன வாய்மொழி யையும் உணர்கின்றனர். ஆண்களின் மூளை அவ்வாறானதில்லை!

பிரச்சனைக்கான தீர்வுகள்:

பல பிரச்சனைகள் இருக்கும் ஒருஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து ஒவ் வொன்றிற்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்கா ணும். இதனால் பிரச்சணையுள்ள ஆண்கள் தனிமையில் தமது தீர்வு களை கண்டுகொள்வார்கள்.

ஆனால், இதேஅளவு பிரச்சனையுள்ள ஒருபெண்னின் மூளையானது பிர ச்சனைகளை தனித்தனியாக  பிரித்தறியாது, யாராவது ஒருவ ரிடம் தமது முழுப்பிரச்சனைகளையும் வாய் மூலமாக சொல் வதனூடாக திருப்தியடைந்துகொள்ளும். சொன்னதன் பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் தீராவி ட்டாலும் அவர்கள் நின்மதியாக படுத்து றங்குவார்கள்.

தேவைகள்:

மதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய செயலாக்கங்கள் என்ற ரீதியில் ஆண் களின் தேவைகள் அமைந்திருக்கும்.

ஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்றரீதியில் பெண்களி ன் தேவைக ள் அமைந்திருக்கும்.

மகிழ்ச்சியின்மை:

ஒருபெண்ணிற்கு தனது காதல்/உறவுகளிடையே பிரச் சனை அல்லது திருப்தியின்மை இருந்தால் அவர்களா ல், அவர்களின்வேலையில் கவனம் செலுத்தமுடியாது

ஆனால் ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சனை இருப்பின் அவர்கள் காதல்/உறவுகளில் கவனம் செலுத்த முடியாது.

உரையாடல்:

பெண்கள் உரையாடும்போது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால் ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள். எண்களை ஆண்க ள் அதிகம் நினைவில் வைத்து கொள்ளமுடியாது. ம‌னைவியின் பிள் ளைகளின் பிறந்தநாளை நினைவு வைத்து கொள்ள ஆண் சிரமம்படுவான். (காதலன் அல்லது கணவன் பிறந்த நாளை மறந்து விட்டால் பெண்கள் ஈசியாக எடுத்துகொள்ளவேண்டும். ஏன் மறந்தாய என் டார்சர் தர கூடாது) பெண்கள் தனது முன்னாள் காதலன் பின் னால் காதலன் அம்மா அப்பா அண்ணன் தம்பி தங்கை பிள்ளைகள் என்று எல்லார் பிறந்த தினமும் மனதில் வைத்துக் கொண்டு இருப்பாள். அது அவளுக்கு சுலபமானது.

நடவடிக்கை:

பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆண்க ள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்! ஆண்கள், பெண்களிடையேயான உறவுகளில் ஏற்படும் பிரச்ச னைக்கான உண்மையான அறிவியல் காரணத்தை தற்போது உணர்ந்திருப்பீர்கள்.

.

முகநூலில் யாரோ பகிர்ந்த பதிவு இது!

இதன் கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்யுங்கள்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: