Advertisements

தற்கொலைக்கான காரணங்கள்,! சட்ட பிரிவுகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள்! – முழு அலசல்

தற்கொலைக்கான காரணங்கள்,! சட்ட பிரிவுகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள்! – முழு அலசல்

தற்கொலைக்கான காரணங்கள்,! சட்ட பிரிவுகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள்! – முழு அலசல்

இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விஷம் அருந்துதல் அல்லது

உடலுக்கு தீ வைத்தல் அல்லது தூக்கில் தொங்குதல் (அல்) உயரமான இடத்திலிருந்து குதித்தல் உள்ளிட்டபல்வேறு வழிகளில் தங்களது உயிரை மாய்த்துக் கொள்வதாகவும், 1980லி ருந்த தற்கொலை விகிதத்தைவிட 2006இல் பதிவான தற்கொலை விகிதம் 67% அதிகமாகும் என்றும், அதிகப் படியான தற்கொலைகள் ஆண்கள் மத்தியிலும், இளை ஞர்கள் மத்தியிலும் நிகழ்வதாகவும், அதேபோல 2006 ஆம் ஆண்டில் இந்தியாவில் தற்கொலை செய்துகொ ண்டவர்களில் 41% சுயதொழில் செய்பவர்கள், 21.2% இல்லத்தரசிகள், 11.5% பணியில்இருப்பவர்கள், 7.5% வேலையற்றோர், 5% மாணாக்கர்கள், 0.9% பணியிலிருந்து ஒய்வுபெற்றோர், 12.8%இதர பிரிவி னர்கள் என்றும், மேலும் 2006இல் இந்தியாவில் பதிவா ன தற்கொலைகளில் 2.5% தமிழ்நாட்டில் நிகழ்ந்தவைக ள் ஆகும் என்றும் “தேசிய குற்ற பதிவுகள் கழகம்” (National Crime Record Bureau) தனது அறிக்கையில் கூறுகிறது.
 
தற்கொலைக்கான காரணங்கள்:

மனஅழுத்தம், மனசிதைவு, உளவியல் நோய்கள், சமூக கலாச்சார அழுத்தங்கள், காதல்தோல்வி, வறுமை,கடன், அளவுகடந்த பேரச்சம், ஈடுசெய்யமுடியாத இழப்பு, தாங் கிக்கொள்ள முடியாத வலி, பெருந்துயரம், கடுமையான சித்திரவதைகள், மது மற்றும் போதைக்கு அடிமையாதல், பிடித்தமானவ ர்களுக்கு அன்பை வெளிப்படுத்தவும் மற்றும் அவர்களுக்கு குற்ற மனப் பான்மையை உண்டாக்கவும், தேர்வில் தோல்வி, நம்பிக்கையற்ற நிச்சயமற்றதன்மையை உணர்தல், வாழத்தகுதியற்றவர் என்ற நிலையை உருவாக்குத ல், பொது பிரச்சனைகளில் உணர்ச்சி வசப்பட்டு தன் னுடலுக்குத் தீவைத்தல், தான் சார்ந்த அரசியல் கட் சியின் தலைமைக்காக, நாட்டின் விடுதலைப்போரா ட்டத்திற்காக வகுப்பறை வன்முறை, ஒதுக்கி வைத்தல் மற்றும் குற்ற உணர்ச்சி என்பதுபோன்ற பல்வேறு காரணங்களில் ஏதாவது ஒன்றிற்காக பொதுவாக தற்கொலைகள் நிகழ்கின்றன.

தற்கொலையை கண்டிக்கும் மதங்கள்

கிறித்தவம், இந்து, இசுலாம், சீக்கியம், யூதம் மற்றும் புத்த மதம் உள்ளிட்ட அனைத்து மதங்களுமே தற்கொ லைகளை கண்டிக்கின்றன.

இந்திய தண்டனைச் சட்டம்,1860:

பிரிவு:305.

குழந்தையின் (அல்) பைத்தியம் பிடித்தவரின் தற்கொலைக்கு உடந்தை யாயிருத்தல்:

“18 வயதுக்குட்பட்ட அல்லது பைத்தியம் பிடித்த அல்லது வெறிபிடித்த அல்லது, அறிவிலி  அல்லது குடிபோதையிலிருக்கும் எவரேனும் தற்கொலை செய்துகொண்டால், அத்தகைய தற்கொலை செய் து கொள்ளப்படுவதற்கு உடந்தையாயிருக்கிற எவரொருவரும், மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டணையோ அ ல்லது பத்து ஆண்டுகள்வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவிற்குச் சிறைதண்டனையோ விதித்துத் தண்டிக்கப் படுதல் வேண்டும் மற்றும் அவரை அபராததிற்கு உள்ளாக்கவும் செய்ய லாம்”.   

பிரிவு:306.தற்கொலைக்கு உடந்தையாயிருத்தல்:

“ஒருவர் தற்கொலை செய்துகொண்டால், அத்தகைய தற் கொலை செய்து கொள்ளப்படுவதற்க்கு உடந்தையாயிருக் கிற எவரொரு வரும்  10 ஆண்டுகள் வரை நீடிக்ககூடிய 1 கால அளவிற்குச் சிறைதண்டனை விதித்துத் தண்டிக்கப் படுதல் வேண்டும் மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்க வும் செய்யலாம்”.

பிரிவு:309. தற்கொலை செய்துகொள்ள முயற்சி:

“தற்கொலை செய்துகொள்ள முயல்கிற மற்றும் அத் தகைய குற்றம் செய்ய ஏதாவது ஒரு செயலைச் செய்கிற எவரொரு வரும், ஓர் ஆண்டு வரை நீடிக்க கூடிய ஒரு கால அளவிற்க்கு மெய்காவல் தண்டனை யோ அல்லது அபராதமோ விதித்து  தண்டிக்கப் படுதல் வேண்டும்”.

இந்திய அரசியல் சாசனம்,1950:

சரத்து:21. “சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள விசாரணை முறைப்படியன்றி, வேறெந்த விதமாகவும், ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும், உயிரையும் பறிக்கக் கூடாது”.

இந்திய சட்ட ஆணையத்தின் 42ஆவது அறிக்கை:

1971ம் ஆண்டு சமர்பிக்கப்பட்ட இந்திய சட்ட ஆணை யத்தின் 42ஆவது அறிக்கையானது, “தன்னளவில் மனரீதியாக பாதிக்கப்பட்ட ஒருவர்தான் தற்கொலை க்கு முயற்சிக்கிறார். அவருக்கு அளிக்கப்பட வேண்டி யது ஆற்றுப்படுத்துதலே தவிர தண்டனை அல்ல. அப்படியாக தண்டனை அளிப்பதென்பது ஒருவருக்கு இருமுறை தண்ட னை அளிப்பது போன்றதாகும். எனவே, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு.309 நீக்கப்பட வேண் டும்” என்று பரிந்துரை செய்துள்ளது.

தற்கொலை தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்புகள்:

1986ஆம்ஆண்டு, தற்கொலை செய்துகொள்வதும் அடிப்படை உரிமையே’ என்ற வாதத்தை அடிப்படையாகக் கொண்டு, முதன்முறையாக ஒரு விசித்திரமான வழக்கு நீதிமன்றத்தில் விவாதத்திற்குக் கொண்டு வரப் பட்டது.

மும்பைநகர காவல்படையைச்சேர்ந்த காவலரும், மன நலம் பாதிக்கப்பட்டவருமான  ‘மாருதி ஸ்ரீ பதி துபால் என்பவர் தன் வாழ்வாதாரத் தேவைக்காக ஒருகடை வைத்துக்கொள்ளக்கோரியிருந்த அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட மன அழுத்த தின் விளைவாக,  மாநகராட்சிஅலுவலக அறைக்குள் தனக்குத்தானே நெருப்புவைத்து தீக்குளிக்க முயன்றார். இதனா ல் அவர்மீது, தற்கொலை செய்துகொள்ள முயற் சித்தல் என்ற குற்றத்தின்படி வழக்கு பதிவு செய் யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தார்.

அவரது தர்ப்புவாதத்தை ஏற்றுக்கொண்ட மும் பை உயர் நீதிமன்றம், ‘தற்கொலை செய்து கொள்வதற்கான விருப்பமா னது இயற்கையான தல்ல, ஆனால்  அதேவேளையில்  அது சாதாரணமா னதோ, பொதுவானதோ அல்ல. மேலும் நோய், வாழ்வில் தாங்கிக் கொள்ள முடியாத நிலைகள், கொடுமைகள், அவமானமான சூழல்கள் மற்றும் புத்திசுவாதீனமில்லா நிலைபோன்ற பல்வேறு நிலைகளில் ஒருவர் தற்கொலை செய்துகொள் ள எண்ணம் கொள்கிறார். எனவே இந்திய அரசியல் சாசனத்தின் சரத்து 21ல் வகுத்துரைக்கப்பட்டுள்ள, உயிர் வாழ்வதற்கான உரிமை என்ற பதத்திற்குள், தனது உயிரை தானே மாய்த் துக் கொள்வதற்கான உரிமையும் உள்ளடங்கும் என்றும், தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தல் என்பது தண்ட னைக்குரிய தனிக்குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ள,  இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு. 309 ஆனது  இந்திய அரசியல் சாசனத்திற்குப் புறம்பானது என்றும் அறிவித்தது.

ஆனால் 1987ஆம் ஆண்டு, இதற்கு முற்றிலும் புறம்பாக ஆந்திரபிரதேச உயர்நீதிமன்றமானது, சென்னா ஜெகதீஸ்வர்’ என்பவர்தொடர்ந்த வழக்கில், இந்திய அரசிய ல் சாசனத்தில் சொல்லப்பட்டுள்ள உயிர் வாழ்வதற்கான உரிமை என்ற பதத்திற்குள், தற்கொலைசெய்துகொள்வது உள்ளடங்காது என்றும், தற்கொலை செய்துகொள்ளவதற்கு தண்டனை வரையறுக்கப்பட்டுள்ள,  இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 309ஆனது  இந்திய அரசியல் சாசனத் திற்குப் புறம்பானது அல்ல என்றும் தீர்ப்பிட்டது.
    
தற்கொலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்:

மேற்கண்ட தீர்ப்பினை 1994ஆம் ஆண்டில் பி. ரத்தினம் என்பவர் தொடுத்த வழக்கில் உச்ச  நீதிமன்றமும் உறுதி செய்தது.

தற்கொலை செய்துகொள்வது உரிமை என்று ம், உரிமை இல்லை என்றும் வழங்கப்பட்ட தீர்ப்புகளினால் ஏற்பட்ட குழப்பங்களைத் தொடர்ந்து இறுதியாக, 1996ஆம் ஆண்டு, ‘கியான்கவுர்’ என்பார் தொடர்ந் த வழக்கில், பஞ்சாப், மகாராஷ்டிரா, ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் மத்தி ய பிரதேசம் மாநிலதிற்கெதிராக தொடரப்பட்டிருந்த 6 வழக் குகளை ஒன்றாக இணைத்து, “தற்கொலை செய்வது ஒருவ ரின் அடிப்படை உரிமை அல்ல என்றும், இந்திய அரசியல் சாசனத்தின் சரத்து 21ல் வகுத்துரைக்கப்பட்டுள்ள உயிர் வாழ்வதற்கான உரிமை என்ற பதத்திற்குள், தனது உயிரை தானே மாய்த்துக் கொள்வதற்கான உரிமை உள்ள டங்காது என்றும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தல் என்பது தண்டனைக்குரிய தனிக்குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ள ,  இந்திய தண்டனைச்சட்டத்தின்பிரிவு 309 ஆனது  இந்திய அரசியல் சாசனத்திற்குப் புறம்பானது அல்ல” என்றும் இந்திய உச்ச நீதி மன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய ஆயம் விரி வாக விவாதித்து தீர்ப்பிட்டது. இதே தீர்ப்பினை கடந்த 2011 மார்ச் மாதத்தில், கருணைக் கொலை தொடர்பான, பரவலாகப் பேசப்பட்ட ‘அருணா ராமசந்திரா ஷன்பக்’ என்ற வழக்கி லும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

தற்கொலையைத் தவிர்க்க சில வழிகள்:

வறுமை மற்றும் பெரும்கடன் சுமைகளின் காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை நாட்டில் பெருகி கொண் டே வருகிறது. இதில் மத்திய மாநில அரசுகள், உடனடியாக தலையீடு செய்து, தொடரும் இந்த அவலநிலைகளைப் போக்கிடும் வகையிலான நடவடிக்கைக ளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்.

தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம்கொண்டோர் தனிமையை தவிர் த்தல் வேண்டும். பிடித்தமானவர்கள், நண்பர்க ள் போன்றவர்களுடன் அதிகமாக பகிர்ந்து கொள்ளுதல், பிரச்சனைகளின் போது தனக்குப் பிடித் தமான பொம்மைகள் அல்லது கண்ணாடி முன்பாக நின்றுகொண்டு பேசிக்கொள்வது போன்ற வழிகளில் கவனத்தை தனக்குத்தானே மாற்றிக் கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

தற்கொலை செய்து கொள்ளும் மன நிலையில் உள்ளவர்களிடம், எந்த காரணத்தை கொண்டும் அவர்களை மற்றவர்க ளுடன் ஒப்பிடுதலை தவிர்த்தல் மற்றும் அவர்க ளுக்கு அறிவுறைகள் வழங்குதல், அவர்களுடன் விவாதங்களில் ஈடுபடுதல் போன்றவைகள் தவி ர்க்கப்படல் வேண்டும், அவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும். உயிரை மாய்த்துக் கொள்வது மட்டுமே, எந்த ஒரு பிரச்சனைக்கும் நிரந்தரமான தீர்வல்ல என்ற திடமான கருத்தை கல்வி, பாட திட்டங்கள், விளம்பரங்கள், குறும்படங்கள், பயிற்சிகள் என்பது போன்ற பல்வேறு வழிகளில் சிறு வயதிலிருந்தே தொடர்ந்து உறுதிபடுத்துதல். போராட்டமே வாழ்க்கை என்பதைப் புரிய வைத்தல், ஆற்றுப்படுத்துதல் மையங்களுக்கு அழைத்துச் செல்லு தல் வேண்டும்.

ஒவ்வொரு மனித உயிரும் விலை மதிப்பற்றது. நாட்டின் ஒட்டுமொத்த சொத்தையும் விற்றாலும் அதன் மூலமாக ஒரே ஒரு மனித உயிரைக்கூட உருவாக்கம் செய்யவோ, விலைக்கு வாங்கவோ முடியாது என்பது பட்டவர்த்தமான உண்மை. எனவே, மத்திய மாநில அரசுகள், சமூக அமைப்புகள், பொது மக்கள் என அனைத்து பிரிவினருக்கும் ஒவ்வொரு உயிரையும் பாதுகாக் க வேண்டிய பொறுப்பு உள்ளது. நூறு கோடிக்கும் அதிக மான மக்கள்தொகை கொண்ட நாட்டில் பகிர்வுக்கும், ஆற்றுப்படுத்துவதற்கும்சரியான துணையில்லை என்ற காரணத்தால் நிகழும் தற்கொலைகளை என்ன சொல்லி நியாயபடுத்தப்போகிறோம். ஒருவருக்கு வேறு எதைக் கொடுப்பதைவிடவும், ஏதோ ஒரு வகையில் அவரது வாழ்வின் மீதான பிடிப்பையும், நம்பிக்கையையும் கொடுப்பதே மிகச்சிறந்த ஈகை யாகும். இது போன்றவைகளின்  வாயிலாக நிகழ விருக்கும் தற்கொலைகளைத் தவிர்ப்போம்.  

-இ.இ.இராபர்ட் சந்திரகுமார்

கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்யுங்கள்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: