Advertisements

தினசரி சோயா பானம் குடித்து வந்தால்

தினசரி சோயா பானம் குடித்து வந்தால் . . .

தினசரி சோயா பானம் குடித்து வந்தால் . . .

பால் என்ற திரவ உணவை விரும்பாதவர்கள், அல்ல‍து பால் சாப்பிடக் கூடாதவர்கள் கூட இந்த

சோயா பானத்தை குடித்துவரலாம். இந்த‌ சோயா உணவு, கெட்ட கொலஸ்ட்ரால் என்னும் LDL (Low Density Lipo proteins) அளவைக் குறைத்து, நல்ல கொலஸ் ட்ரால் எனப்படும் HDL (High Density Lipo proteins) அளவைக் கூட்டுவதன் மூலம், மாரடைப்பைக் குறைக்கிறது.

சோயாவிலுள்ள PUFA எனப்படும் Poly Unsaturated Fatty Acids இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதால், குறைந்த ரத்த அழுத்த‍மோ அல்ல‍து உயர் ரத்த‍ அழுத்த‍மோ ஏற்படுவதற் கான வாய்ப்புக்கள் மிக மிக குறைவு  

சோயாவில் கரையும் நார்ச்சத்து உள் ளதால் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, உடலுக்கு தேவையான இன்சுலின் சுரக்கச் செய்கிறது. .

தினசரி சோயா உணவை உட்கொள்வதன்மூலம் பல் வேறு வகையான புற்றுநோய்களிலிருந்து தற்காத்து க் கொள்ளலாம்.

நாள்பட்ட பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்துவ தில் சோயா பெரும் பங்காற்றுகிறது.

சோயா உணவு மாதவிடாய் நின்ற பின் உடலில் ஏற் படும் சங்கடங்களைக் குறைத்து, எலும்புகளின் சீரழிவைத்தடுக்கிறது. சோயா உடல்முதிர்ச்சியைத் தாமதப்படுத்துகிறது.

இரும்புச்சத்தும் கால்சியமும் நிறைந்துள்ளதால் இவ்வுணவு கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கு ம் ஏற்றது.

சோயாவில் அடங்கியுள்ள பீட்டா கரோட்டின் எனப்படும் விட்டமின் ஏ சத்து சருமத்தை மென்மையாக்குவ துடன், கண் சம்பந்தமான முக்கியமான மாலைக் கண் நோயைத் தடுக்கிறது.

குழந்தைகளுக்குத் தினமும் சோயா உணவில் சே ர்க்கப்படும் போது மன ரீதியாகவும் உடல் ரீதியா கவும் சிறந்த முன்னேற்றத்தைக் காணலாம்.

குழந்தைகளுக்கு மாற்று உணவாக சோயா தொடர்ந்து தரப்பட்டு வந்தால் உடல்எடை, உயரம் மற்றும் நினைவா ற்றல் கூடுவதுடன் ரத்த நிறமிகளின் (ஹீமோகுளோபின் ) எண்ணிக்கையும் உயரும்.

சோயாஉணவு கால்ஷியம், மக்னீஷியம் மற்றும் பாஸ்பர ஸ் சத்துக்களைக் கொண்டிருப்பதால், பற்களை உறுதிப் படுத்துவதுடன் நரம்பு சம்பந்தமான நோய்க ளையும் தடுக்கிறது.

சோயா உணவு யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தி மூட்டுவலியைக் (ஆர்த்ரைட்டிஸ்) குறைத்து சிறுநீரகக் கோளாறிலிருந்து பாதுகாக்கிறது.

1 கிலோ சோயா வடகத்திலுள்ள புரதம் 3-5 லிட். பால் அல்லது 1 கிலோ மாமிசம் அல்லது 24 முட்டைகளின் புரத த்திற்கு சமமானது.

அனைத்துப்பருப்புகளிலும் உள்ள புரதச்ச த்தை விட மும்மடங்கு புரதச்சத்து சோயா வடகத்திலுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கும் இது மிக அவசியமான ஊட்டச்சத்து உணவு.

***** கண்டிப்பாக உங்கள் மருத்துவரை அணுகி, உங்கள் உடலுக்கு ஏற்ற‍தா என்பதை கேட்ட‍றிந்து பின் உட்கொள்ள‍வும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

கீழே உள்ள‍ புகைப்படத்தை கிளிக் செய்யுங்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: