Advertisements

அப்துல்கலாம் மிரட்டியதால், வேறுவழியின்றி சரணடைந்த நிறுவனம்! நம்பமுடியாத ஆச்சரியத்தகவல்

அப்துல்கலாம் மிரட்டியதால், வேறு வழியின்றி சரணடைந்த தனியார் நிறுவனம்! நம்பமுடியாத ஆச்சரியத் தகவல்

அப்துல்கலாம் மிரட்டியதால், வேறு வழியின்றி சரணடைந்த தனியார் நிறுவனம்! நம்பமுடியாத ஆச்சரியத் தகவல்

ந‌மது முன்னாள் குடியரசு தலைவரும் இளைஞர்களின் எழுச்சி நாயகனு மான மறைந்த

அப்துல்கலாம் அவர்கள் ஒரு தனியார் நிறுவனத்தா ரை மிரட்டியுள்ளார். அந்நிறுவனத்தாரும் வேறு வழி யின்றி அப்துல்கலாமிடம் சரணாகதி அடைந்த ஒரு தகவல்தான் இது. என்ன‍ ஆச்சரிய மாக இருக்கிறதா? மேற்கொண்டு படியுங்கள் இன்னும் ஆச்ச‍ரியங்கள் காத்துக் கொண்டிருக்கு.

மிரட்டலா? அதுவும் அப்துல்கலாமா? ஆமாங் க அதுவும் ஒரு பிரபல கிரைண்டர் கம்பெனி யை! நம்ப முடியாத இந்த செய்தியை ஒருவர் ஒரு நாளிதழில் வாசித்த்தோடு, அல்லாமல் தான் படித்த செய்தியை சமூக வலைத் த‍ளத்தி லும் பதிவேற்றியுள்ளார்.

ஈரோட்டில் அப்துல்கலாம் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சி. விழா மேடை யில் அப்துல்கலாமுக்கு நினைவுப் பரிசாக, ஒரு வெட்கிரைண்டரை அந்த கம்பெனிக் காரர்கள் வழங்கி மகிழ்ந்திருக்கிறார்கள். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்டநேரம் நீடிக்க வில்லை. அன்பளிப்பாக எதையும் ஏற்றுக் கொள்ளாத உறுதியான குணம் கலாமுக்கு உண்டு. ஆனால். சொந்த உபயோகத்துக்கு ஒருகிரைண்டரும் அவருக்கு தேவைப்பட்டநேரம் அது. பார்த்தார் அப்துல் கலாம். கிரைண்டரை வாங்கிக் கொள்ள முடிவு செய்து விட்டார்..

ஆனால் கலாம்போட்ட ஒருகண்டிஷன் “இந்த கிரைண்டரு க்கு உண்டான விலையை நீங்கள் வாங்கிக்கொண்டால் மட்டுமே இந்தகிரைண்டரை நான் வாங்கிக்கொள்ள முடி யும் .” பரிசாகக் கொடுக்க முடியவில்லையே என்று கம்பெ னிக்காரர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். சரி. பரவாயி ல்லை. ரூ.4,850/- என கிரைண்டரின் விலை யைசொன்னார்கள். அடுத்தநொடியே ரூ.4,850 /-க்கான செக்கும், கிரைண்டரும் கை மாறின.

ஆனால். அடுத்து நடந்தது. அப்துல்கலாம் எதிர் பாராதது. அந்த கிரைண்டர் கம்பெனி, அவர் கொடுத்த செக்கை வங்கியில் செலுத்தி பணம் எடுக்கவே இல்லை. “ அப்துல் கலாம்” என்ற அபூர்வ மனிதர் கையெழுத்து போட்ட அந்த செக் கை அரிய பொக்கிஷமாக நினைத்து பத்திர ப்படுத்திக் கொண்டு விட்டார்கள். இரண்டு மாதங்களாகியும் கலாமின் கணக்கில் இருந்து, பணத்தை எடுக்கவே இல்லை.

இது கலாம் கவனத்துக்கு வந்தது. அடுத்த நிமிடம் அப்துல்கலாம் அலுவலகத்திலிருந் து, அந்த கிரைண்டர்கம்பெனிக்கு போன் வந்தது. “உடனடியாக செக்கை வங்கியில் செலுத்தி , கிரைண்டருக்கான பணத்தை எடுத்துக் கொள்ளுங் கள். அல்லது…”
IMG-20160809-WA0021
“அல்லது..?”

“ நீங்கள் கொடுத்த அந்த கிரைண்டர் உடனடியாக உங்களுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்படும்.” அப்துல்கலாமின் இந்த அதிரடி அன்பு மிரட்டலை அக்கிரைண்டர் கம்பெனி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. உடனடியாக செக்கை வங்கியில் செலுத்தி பணத்தை எடுத்துக் கொண்டார்கள். அதற்குப் பின்னரே மனம் நிம்மதியானது அப்துல் கலாமுக்கு !

எப்பேர்ப்பட்ட ஒரு உன்னத மனிதர் அப்துல்கலாம்? இப்படி ஒரு மனிதரை , எதிர்வரும் காலங்களில் இனி பார்க்க முடியுமா..? சந்தேகம்தான்..!

 

 

 

Advertisements

One Response

  1. superb… this is The Great Abdul Kalam

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: