Advertisements

சிறந்த‌ மேடைப் பேச்சாளர் ஆவதற்கு நீங்கள் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாத‍தும் – முழு அலசல்

சிறந்த‌ மேடைப் பேச்சாளர் ஆவதற்கு நீங்கள் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாத‍தும்!  – முழு அலசல்

சிறந்த‌ மேடைப் பேச்சாளர் ஆவதற்கு நீங்கள் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாத‍தும்!  – முழு அலசல்

மேடையில் பேச வேண்டும் என்றும்..நாம் பேசுவதை நான்கு பேர் கேட்டு பாராட்ட

வேண்டும் என்றும் ந‌மக்குள் ஒரு விருப்பம் இருக்கும்.

பேசுவது என்பதே ஒரு கலை. அதற்காக பேசுவதையெல் லாம் கலை என்று சொல்லிவிட முடியாது. அதுவும். மே டையில் பேசுவது என்பது!!! எளியநடையில் பலர் முன் நின்று மேடையில் உயர் கருத்துகளைச் சிறந்த முறையில் கேட்போர் உள்ளத்தில் அழகாக பதிய வைப்பதே ஆகும்.

மேடைப்பேச்சை ‘சொற்பொழிவு’ என்பர்.சொற்களைத் தேடிப் பிடித்து.. எளிய நடையில்..அமைதியாக பொழிவது தான் சொற்பொழிவு.

மழைபொழிகிறது என்கிறோம். மழை நீர்த்துளிகள். ஒன்றன் பின் ஒன்றாக சீராக நேராக..அமைதியாக பெய்வதுதான் ‘பொழிதல்’ எனப்படுவது. அழகாக ஒன்றன்பின் ஒன்றாக வரம்பு மீறாமல் இருப்பதுதான்.வரம்பு கடந்தால் மழை பொ ழிதலும்..மழை அடித்தல், மழை கொட்டல் என்றெல்லாம் ஆகிவிடும்.

அதுபோலவேதான் சொற்பொழிவும் வரம்பு கடந்தால். மக்களிடமிருந்து கிண்டல், கத்தல், திட்டுதல் என்ற நிலைக்கு நம்மை கொண் டு வந்து விட்டு விடும்..

ஒருவர் பேசும் சொற்கள் அனைத்தும் நல்ல சொற்களாக, பண்பட்டவைகளாக இருந்தாக வேண்டும் என்ற கவலை சொற்பொழிவாற்றுவோருக்கு இருக்க வேண்டும். சொற்கள் பற்றி வள்ளுவன் சொல்வன்மை என்ற அதிகாரத்தையே வைத்துள்ளார்.

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்
காத்தோம்பல் சொல்லிங்கட் சோர்வு

ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால் எந்த ஒரு சொல்லிலும் குறைபாடு நேராது கவனமா க இருக்க வேண்டும். என்கிறார்.

நாம் சொல்வதை பிறர் எளிதாகப் புரிந்துக் கொள்ள வேண்டும்.எவ்வளவு நேரம் பேசினோம் என்பதை விட நாம் என்ன பேசினோம் என்பது மக்களுக்குப் புரிகிறதா என்பதே முக்கியம்.

நாம்கற்றதை  பிறர் உணரும் வண்ணம்சொல்லத் தெரியாதவர்.. கொத்தாக மலர்ந்திருக்கும் மண மில்லாமலருக்கு ஒப்பாவர் (யாருக்கும் பயன் தரா மலர்) என்கிறார் வள்ளுவர்.

இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரிந்துரையா தார்

ஒருவனின் உண்மைத் தோற்றத்தைக் காட்டுவது அவன் வாய்ச் சொற்களே மற்ற அனைத்தும் போலித்தோற்றங்கள்  ஆகவே பிறரிடம் பேசும்போது அதிலும் குறிப்பாக மேடை யில் பேசும்போது மிக விழிப்புடன் இருக்க வேண்டும்.. இல்லையேல்..நமக்கு வீழ்ச்சியே ஏற்படும்.

எதைக் காப்பாற்றாவிடினும் நாக்கை காப்பாற்ற வேண்டும்..

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

ஒருவர் எதைக்காத்திட முடியாவிடினும் நாவையாவது அடக்கிக்காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவரது துன்பத்திற்கு க் காரணமாகி விடும்.

நல்ல கருத்துகள் சொற்பொழிவுக்கு அவசிய ம். நாம் பேசுவது மக்கள் உள்ளத்தில் பதிய வேண்டுமானால். அவை நல்ல கருத்துகள் கொண்டதாய் இருக்க வேண் டும். பண்பற்ற, பயனில்லா சொற்களை மறந்தும் பேசக் கூடாது.

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து

பயனற்றதும்.. பண்பற்றதுமான சொற்களை பலர்முன் சொ ல்வது மகிழ்ச்சியைக் குலைத்து.. நன்மையை மாய்க்கும்

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்

.

பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.

பேச்சுக்கு கருத்துகளை எப்படி அமைப்பது.அதற்கு ஒரு வழி..

முதலில்..இன்று நாம் எதைப்பற்றி பேசவேண்டும். என்னெ ன்ன பேச வேண்டும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். முதல் கேள்விக்கான விடை தலைப்பாகவும். அடுத்தக் கேள்விக்கான பதில் கருத்தாகவும் அமையும்.

அதை ஒருசிறு அட்டையில் குறித்துக்கொண்டு 1, 2 என இல க்கமிட்டு முறைப்படுத்தி மனனம் செய்துகொள்ள வேண்டும். பின் மேடை ஏறியதும் மனப்பாடம் செய் ததை வரிசைப்படுத்தி பேசவேண்டும். இது வெற்றி கரமான பேச்சாக அமையும். ஆரம்ப பேச்சா ளர்கள்.. இரண்டு அல்லது 3 கருத்துகளை மட்டுமே எடுத்துக் கொண்டு ஐந்தாறு நிமிடங்களுக்குள் பேசி நிறுத்திக் கொள்ள வேண்டும். காலப்போக்கில் இது நமக்கு நல்ல நம்பிக்கையைக் கொடுக்கும்.

குறிப்புகள் எடுக்கையில் பேச வேண்டிய கருத்துகள் ஒவ்வொன்றும் 3 அல்லது நான்கு சொற்களுக்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். அதுதான் மனதில் பதியும்.மனதில் பதிந்த தைப் பேசி முடித்ததும். நம் குறிப்பை எடுத்து.. எல்லாம் பேசி விட்டோமா என்று பார்க்கலாம். ஏதேனும் விட்டுப் போயிருந்தாலும் பரவாயில்லை.ஏனெனில் நம் பேச்சை கேட்டவர்களுக்கு அது தெரியப்போவதில்லை. தொடக்கப் பேச்சாளர்கள். எழுதியிருக்கும் குறிப்பை இடையிடையே பார்த்து பேச லாம்..ஆனால் இதுவே பழகிவிடக் கூடாது.

மேடைப் பேச்சில் எழுதிப் படிக்கிறார்களே பொறுப்பான வர்கள் என கேட்கலாம்.. பொறுப்பான பதவியில் உள்ள வர்கள். வேறு ஏதும் பேசிவிடக் கூடாதே என்பதற்காக கையாளும்முறை இது. ஆனால் பேச்சாளர்களுக்கு ஏற்ற தல்ல இது. பார்த்து படிப்பது படிப்பதாகவே இருக்குமே யன்றி..அது பேச்சாக இராது. அதில் உணர்ச்சியும் இராது.. இப் பழக்கம் உள்ளவர்கள் ஒரு சிறந்த பேச்சாளர்களாக ஆகவே முடியாது

வாட்ஸ் அப்-இல் வந்தது

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: