Advertisements

திடுக்கிடும் புகார், முதல்வர் ஜெயலலிதா மீது . . . , நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய பெண் M.P.

திடுக்கிடும் புகார், முதல்வர் ஜெயலலிதா மீது . . . , நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய பெண் M.P.

திடுக்கிடும் புகார், முதல்வர் ஜெயலலிதா மீது . . . , நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய பெண் M.P.

அதிமுக பொதுச்செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, தம்மை கன்னத்தில்

அறைந்ததாக ராஜ்யசபாவில் திடுக்கிடும் புகார் தெரிவித்த M.P. சசிகலா அடுத்த நிமிடமே அதிமுகவில் இருந்து அதிரடி யாக நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக 2014-ல் தேர்ந் தெடுக்கப்பட்ட சசிகலாபுஷ்பா தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் சிக்கியவர். குடிபோதையில் அதிமுக நிர்வாகி ஒருவருடன் ஆபாசமாக சசிகலாபுஷ்பாபேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அப்போது அவர் மீது ஜெயலலிதா எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. பின்னர் திமுகவின் ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவுடன் மிக நெருக் கமாக இருக்கும் புகைப்படங்கள் பல வெளியாகி இருந்தது. அப்போது ஜெயலலிதா அமைதியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவா எம்.பி.யை சசிகலா புஷ்பா சரமாரியாக சனிக் கிழமையன்று தாக்கிய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக ஜெயலலிதாவிடம் சசிகலா புஷ்பா நேற்று விளக்கம் அளித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று ராஜ்ய சபாவில், பெண் எம்.பி.யான தமக்கு பாதுகாப்பு இல்லை; தாம் ராஜினா மா செய்யும் நெரு க்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளேன் என்று கண்ணீர் மல்க பிரச்சனையை கிளப்பியிருந்தார் சசிகலா புஷ்பா.

மேலும் அதிமுக பொதுச்செயலரும் முதல்வருமான ஜெய லலிதா தம்மை அறைந்ததாகவும் தமது எம்பி பதவியை ராஜினாமா செய்யுமாறு நிர்பந்திப்பதாகவும் தாம் நாட்டுக் கு சேவையாற்ற விரும்புகிறேன் என்றும் சசிகலா புஷ்பா கூறினார்.

இப்படி சசிகலா புஷ்பா புகார் சொன்ன சில நொடிகளில் அவரை அதிமுகவில் இருந்து நீக்கி ஜெயலலிதா அதிரடி யாக உத்தரவிட்டார்.

செய்தி => தமிழ் ஒன் இந்தியா மற்றும் ஒளிப்படங்கள் கூகுள்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: