Advertisements

தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா?

தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா?

– விதைவிருட்சம் இதழில் எனது தலையங்கம்

தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா? – (விதைவிருட்சம் இதழில் எனது தலையங்கம்)

ஆதிகாலத்தில் மனிதர்கள், மலைக்குகைகளிலும் மரக்கிளைகளிலும் வசித்து வந்தனர். அப்போதைய

மனிதர்களிடம் ஆசையும் இல்லை பேராசையும் இல்லை, பசி எடுக்கும் போது மட்டும் உணவைத் தேடி அலைந்தான். கிடைத்த உணவை உண்டு மகிழ்ந்தான். அது காய் கனியாக இருந்தாலும்சரி, விலங்குகளின் பச்சை மாமிசமாக இருந்தாலும் சரி அவற்றை திருப்தியோடு உண்டுவாழ்ந்தான்.

ஆனால் காலப்போக்கில் மெல்ல மெல்ல நாகரீகம் வளரத் தொடங்கிய போது கூடவே அந்த மனிதர்களுக்கு ஆசை ஏற்பட்ட‍து. அந் த ஆசையினால் நிலப்பரப்பில் தனக்கென்று ஒரு கூடாரம் அமைத்தான். அதுவரை கனிகளையும் காய் கறிகளையும், மாமிசத்தையும் பச்சையாக உண்டு வாழ்ந்து வந்த அந்த மனிதர்கள், சமைத்து சாப்பிட ஆர ம்பித்தார்கள். தொடக்க த்தில் தனக்காகவும் தன்னை நம்பி இருப்போருக்காகவும் மட்டுமே மரங்களை வெட்டுதல், நிலத்தடியில் உள்ள‍ கனிமங்களை எடு த்த‍ல், மலைகளை உடைத்த‍ல், போன்றவைகள் மூலமாக இயற்கை சிறிது அழித்து வாழ்விடங்களை உருவாக்கினான்.

ஆரம்பத்தில் வீடுகட்ட‍ கருங்கல்லை பயன்படுத்தி னான். பின் மரங்களை வெட்டி பயன்படுத்தினான். இதன்பின் களிமண்ணையும், சிறுது காலத்திற்குப் பின் மணலையும் சுண்ணாம்பையும் கலந்து பயன் படுத்தினான், தற்காலத்தில் சிமெண்ட்டையும் மணலையும் செம்மண்ணை செம்மைப்படுத்தி செங்கற்களையும் பயன்படுத்தி வீடு கட்டினான். வீட்டினுள் அழகு சேர்க்கு ம் விதமாக மரங்களை வெட்டி, நாற்காலிகள் மேஜைகள் உட்பட சிலவற்றை உருவாக்கி பயன்படுத் திக்கொண்டான். மேலும் பூமிக் கடியில் கிடக்கும் கனிமங்களை தோண்டி எடுத்து விற்பனை செய்து தங்களது வாழ்வாதாரத்திற்கு தேவைப்படும் பணத்தை சம்பாதித்து குடும்பத்தை வழி நடத்தினான். என்ன‍தான் தனது வாழ்வாதாரத்தை இயற்கையை சிறிது அழித்தாலும், அதேநேரம் இயற்கையை காத்திடவும் செய்தான்.

காலப்போக்கில் அந்த ஆசை, அவனுக்கு மெல்ல மெல்ல பேராசையாக உருமாறியது. அதன்விளைவு ஒன்றிரண்டு மரங்களை வெட்டிய மனிதர்கள் இன்று காடுகளையே அழித்து அதிலுள்ள‍ மரங்களை வெட்டி விற்று அதன் மூலம் பெரும்லாபத்தை ஈட்டுகின்றனர். மழைக்கு உதவு ம் காடுகளை அழித்து விட்டோமே என்ற குற்றஉணர்ச்சி சிறிதும் இல்லை.

ஆற்று நீரையும், குளத்து நீரையும், நிலத்தடி நீரையும் உறிஞ்சி எடுத்து, அதை சுத்திகரிப்பு என்ற பெயரில் ஏதோ செய்து அதை பாட்டிலில் அடைத்து பெரும் பொருள் ஈட்டி, ஆடம்பரமாக வாழ்கிறான். ஆற்று நீரை மொத் தமாக உறிஞ்சி விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி இவனுக்கும் இல்லை.

ஆற்று நீரைத்தான் எடுக்கிறானென்றால், ஆற்று மணலையும் அல்ல‍வா அவன் கொள்ளையடிக்கிறான். அந்த மணலை அள்ளிச்சென்று கள்ள‍ச்சந்தையில் விற்பனை செய் து அதன் மூலமாகவும் பெரும்பணத்தை சம்பாதிக் கிறான். ஆற்று மணலை எடுக்கிறோமே மழைக் காலத்தில் வெள்ள‍பெருக்கு ஏற்பட்டு அக்க‍ம் பக்க‍ கிராமங்கள் மூழ்குமே என்ற கவலை அவனுக்கி ல்லை.

பூமிக்கடியில் கிடக்கும் நீரைத்தான் உறிஞ்சி எடுக் கிறான் என்றால், அங்குள்ள‍ கனிமங்களான தங்கம், வெள்ளி, நிலக்கரி, பெட்ரோலியம், உட்பட பல கனிம வளங்களை சுரண்டி எடுத்து, விற்று பெரும் பணத்தை எண்ணிக் கொண்டிருக்கிறான். கனிமங்கள் இப்ப‍டி எடுக்கிறோ மே என்ற குற்ற உணர்ச்சி இல்லை இவனுக்கும்

சரி இத்த‍னை பாவங்களை செய்த மனிதன், காற்றை யாவதுவிட்டு வைத் தானா என்றால் இல்லை. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையு, வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையும், குளிரூட்டு கருவிகள் வெளியேற்றும் அனல் காற்று, போன்றவற்றால் காற்றையும் அசுத்த‍ மாக்கி, வான்வெளியில் நமது பூமியை சூரிய ஒளியி ல் இருந்து காத்து நிற்கும் தளபதியாக இருந்து வரும் ஓசோன் படலத்திலும் ஓட்டை விழச்செய்து எதிர் கால சந்ததியினருக்கு பயன்படாமல் செயதுவருகிறான். இதிலும் அவனு க்கு மனசாட்சி உறுத்த‍வில்லை.

இந்த மனிதர்கள் செய்து கொண்டிருக்கும் அக்கிரமங்களையும் பாவங்க ளையும் பொறுமையோடு பார்த்துக் கொண்டிருந்த நிலம் பொறுமையின் மறுபெயராக திருவள்ளுவர் குறிப்பிட்ட‍ நிலம்

    அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

இதன் பொருள்

{“தன்னைவெட்டி குழிதோண்டுவோரையும், விழாமல் தாங்குகின்ற நிலம் போல், உன்னை யாராவது இகழ்ந்தாலும்  பொறுத்துப்போவதே தலையான பண்பாகும்.”}

இப்பேற்பட்ட‍ பெருமைமிகு நிலம், சற்று ஆவேசப்பட்டு தன்னைத் தானே தற்காத்துக் கொள்ள‍வும் மனிதர்களை எச்ச‍ரிக்கும் பொருட்டும், ஆங்காங்கே நிலநடுக்க‍மாகவும், சுனாமிகளாகவும், பற்பல இயற்கை சீற்றங்களாக வும் வெளிக்காட்டி ஏராளமான உயிர்களையும் பொருட்களையும் பலிவாங்கி வருகிறது.

இதனை கண்ட நமது திருவள்ளுவர், நிலத்தை வைத்து மனிதர்களுக்கு அறவழி போதித்தேனே! ஆனால் அந்த நிலமே ஆவேசப்படும் அளவிற்கு மனிதர்கள் தீங்கு செய்கிறார்களே என்று நாளொரு மேனி பொழுதொரு வண்ண‍முமாய் அவமானத் தால் தலைகுனிந்து அழுது கொண்டிருக்கிறார்.

ஓ மனிதர்களே! இனிமேலாவது விழித்தெழுங்கள், உங்களுக்கு இருக்கும் பேராசையின் விளைவால், உங்களது வருங்கால தலைமுறை, மூச்சு விட காற்றும் இல்லாமல் தாகத்திற்கு தண்ணீர் கூட இல்லாமல் செத்துமடிவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இன்று நீங்கள் நிலவளங்களை அழித்துசேர்த்து வைக்கும் பணம், உங்கள து வருங்காலதலைமுறையை காக்க‍ப்போவதில்லை.

இதே நீங்கள் இயற்கையை பாதுகாத்தால், நாளை, அந்த நிலமே உங்களது வருங்கால தலைமுறைகளை வாழ்த் தும், வாழ்த்துவதோடு நில்லாமல், மிகப்பெரிய ஆதாரத் தூணாகவும் விளங்கும் என்பதில் எள்ள‍ளவும் சந்தேகமி ல்லை. அதுமட்டுமா! பொறுமையின் மறு பெயராக நிலத்தை எடுத்துக்காட்டிய நம் திருவள்ளுவரையும் தலை நிமிரச் செய்யலாம்.

இயன்றதை செய்து
இயற்கையை காத்திடுவோம்.!

ந‌மது வருங்கால தலைமுறை 
நம்மை வாழ்த்தட்டும் பலமுறை!

(2016, மார்ச் மாத விதைவிருட்சம் அரையாண்டு இதழில் உங்கள் நண்பன் விதை2விருட்சம் சத்திய மூர்த்தி ஆகிய நான் எழுதிய தலையங்கம் இது)

– விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி – கைபேசி 9884193081

V2V Editorial 1

V2V Editorial 2

V2V Editorial 3

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: