Advertisements

4 விஷப்பாம்புகளை கொன்று, 8 உயிர்களை காப்பாற்றி, தன் உயிரை விட்ட ‘டாபர்மேன் நாய்!’

4 விஷப்பாம்புகளை கொன்று, 8 உயிர்களை  காப்பாற்றி, தன் உயிரை விட்ட ‘டாபர்மேன் நாய்!’

4 விஷப்பாம்புகளை கொன்று, 8 உயிர்களை  காப்பாற்றி, தன் உயிரை விட்ட ‘டாபர்மேன் நாய்!’

சேப்கபூர் என்ற கிராமம்.. ஒடிசா மாநிலம், கஜபதி மாவட்டத்தில் உள்ளது. இங்கு விஷப்பாம்புகள் அதிகம்.  அதனால் அவைகளை

வீட்டிற்குள் வராமல் தடுப்பதற்காக, அந்த கிராம மக்கள் வீட்டினில் நாய்க ளை வளர்ப்பது வழக்கமான ஒன்று.
 
அதுபோல் திபாகர்ரய்தா என்பவர் சமீபத்தில் ஒரு டாபர் மேன் இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்றை வாங்கி வளர்த்து வந்தார். இந்த நாய் எந்த விஷ ஜந்துக்களையும் வீட்டிற் குள்ளே நுழையவிடாமல், தனது எஜமானின் வீட்டை பாதுகாத்து வந்தது.
 
கடந்த திங்கள் கிழமை, அருகிலிருந்த காட்டுப்பகுதியிலி ருந்து வந்த 4 கொடிய விஷ பாம்புகள்  திபாகர் ரய்தாவின் வீட்டிற்குள் நுழையமுயன்றுள்ளன. இதனை கண்ட அந்நாய்  கடுமையாக சண்டையி ட்டு அந்த பாம்புகளை கடித்துக்கொன்றது. ஆனால், அந்த பாம்புகள் கொத்தியதில், உடலில் விஷம் ஏறி அந்த நாயும் உயிர் இழந்தது.
 
வீட்டின் அருகே தனது செல்ல நாய், பாம்பு களுடன் இறந்து கிடப்பதைக்கண்ட திபாகர் ரய்தா, நடந்ததை புரிந்துகொண்டு கண்ணீர் வடித்தார். அவரது குடும்பத்தில் மொத்தம் 8 பேர் இருந்துள்ளனர். ஒரு வேளை அந்த பாம்புகள் வீட்டிற்குள் புகுந்திருந்தால் அனைவரும் இறந்தி ருக்க வாய்ப் பிருக்கிறது.
 
ஆனால், அவரின் பாசமுள்ள நாய் அவர்களை அனைவரையும் காப்பற்றி விட்டு தனது உயிரிழையும் இழந்துள்ளது. இந்த சம்பவம் கேள்விப்பட்டு, கிராம மக்கள் 100 பேருக்கும் மேல் அங்கு கூடி, அந்த நாயின் நன்றியையும், விசுவாசத்தையும் பற்றி சிலாகித்து பேசினர். அதன்பின், அந்த நாயை மலர்கள் தூவி, மரியாதையுடம் அடக்கம் செய்தனர்.

இணைய செய்தி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: