Advertisements

ஆண்கள் என்றுமே இளமையாக இருக்க, செய்ய வேண்டிய செயல்கள்- வாழ்வியல் அலசல்

ஆண்கள் என்றுமே இளமையாக இருக்க, செய்ய வேண்டிய செயல்கள்- வாழ்வியல் அலசல்

ஆண்கள் என்றுமே இளமையாக இருக்க, செய்ய வேண்டிய செயல்கள்- வாழ்வியல் அலசல்

பொதுவாக முதுமைத்தோற்றத்தை வெளிப்படுத்துபவையான சரும சுருக் கங்கள், முதுமைக் கோடுகள் போன்றவை பெண்களுக்கு

நன்கு வெளிப்படையாகதெரியும். ஆனால், ஆண்களு க்கு தெரிய சில நாட்கள் ஆகும். அது மட்டுமல்லாமல் பெண்களைவிட ஆண்கள்தான் விரைவில் முதுமை த் தோற்றத்தைப் பெறுவார்கள்.

இப்போது இளமையைத் தக்க வைப்பதற்கு, ஆண்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் என்னவென்று பார்ப்போம்.

01. புகைத்தலை உடன் நிறுத்துங்கள்

இளமைத் தோற்றத்தை தக்கவைப்பதற்கு ஒரு சிறந்த வழியென்றால், அது புகைப்பிடித்தலை நிறுத்துவதுதான். ஏனெனில் புகைப்பிடித்தால் சருமத்தில் சுருக்கங்கள் விரைவில் வருவதோடு, சரும வறட்சியை உண்டாக்கும். மேலும் புகைப்பிடித்தலை நிறுத்துவதால், உடலில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் ஆண்மைத் தன்மை குறைபாடு ஏற்படுவதிலிருந்து விடுபடலாம்.

02. ஷேவிங் செய்யும் போது சில செயல்கள்

ஆண்கள் தொடர்ச்சியாக ஷேவிங்செய்வதால், சருமமானது மிகவும் கடி னமாவதோடு, வறட்சி மற்றும் ஒருவித சுருக்க மானது ஏற்படும். ஆகவே எப்போதும் ஷேவிங் செய்யும்போ து வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துவதோடு, ஷேவிங் செய்த பின்னர் ஷேவிங் லோஷ‌னைப் பயன்படுத்த வேண் டும்.

03. திராட்சை ஜூஸ்

ஆண்களின் இளமையானது நீடிக்கவேண்டுமெனில், தின மும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்த திராட்சை பழ த்தை ஜூஸ்போட்டு குடித்துவந்தால், சருமத்தில் நெகிழ் வுத்தன்னை நீள்வதோடு, இளமை தோற்றத்தை தக்க வைக்கலாம்.

04. ஆல்கஹால் தவிர்த்தல்

முதுமைத்தோற்றத்தை தடுப்பதற்கு ஒருசிறந்த வழியென் றால், ஆல்கஹால் அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெ னில் ஆல்கஹால் இரத்த நாளங்களை அளவுக்கு அதிகமாக விரிவடையச் செய்து, சரும சுருக்கத்தை ஏற்படுத்தும்.

05. உடற்பயிற்சி

முதுமைத்தோற்றமானது முகத்தில் மட்டும்வெளிப்படுவ தில்லை, தசைகளின்மூலம் வெளிப்படும். எனவே தினமு ம் உடற்பயிற்சியைசெய்து வந்தால், தசைகளானது இறு க்கமடைந்து, இளமையான தோற்றத்தைத் தரும்.

06. பால் கொண்டு முகம் கழுவுதல்

வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குவந்ததும், பாலை கொ ண்டு முகத்தை துடைத்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறுவதோடு, சருமத்தை பொலி வோடு வைத்துக் கொள்ளும். அதிலும் இம்முறையை தினமும் இரண்டுமுறை செய்வது நல்லது.

07. மசாச்

முதுமையை தடுக்கவேண்டுமெனில், உடலின் இரத்த ஓட் டத்தை அதிகரிக்க வேண்டும். இத்தகைய இரத்த ஓட்டத் தை மசாஜ் செய்வதன்மூலம் அதிகப்படுத்தலாம் . இதனால் உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்த ஓட்டமானது சீராகசென்று இளமையைத்தக்க வைக்கும்.

08. காய்கறிகள்

உணவில் காய்கறிகளின் அளவை அதிகரிக்க வேண் டும். அதிலும் பசலைக் கீரை அல்லது பீன்ஸ் போன்ற வற்றை உணவில் அதிகம் சேர்த்தால், சுருக்கங்கள் ஏற்படாமல் இருப்பதோடு, சருமமும் பொலிவோடு இளமையுடன் காணப் படும்.

09. சன் ஸ்கிறீன் க்ரீம்கள்

முதுமையை தக்க வைக்க வேண்டுமெனில், அதிகமாக வெ யிலில் சுற்றக்கூடாது. ஒருவேளை வெயிலில் செல்வதாக இருந்தால், சன் ஸ்கிரீனை தவறாமல் பயன்படுத்தி செல்ல வேண்டும். ஏனெனில் சூரியக் கதிர்கள் சருமத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, சுருக்கங்களை எளி தில் உண்டாக்கிவிடும்.

10. தண்ணீர்

தினமும் குறைந்தது 8 டம்ளர் அல்லது 2 லிட்டர் தண் ணீர் குடிக்கவேண்டும். இதனால் உடல்வறட்சி நீங்கி, உடலும் ஆரோக்கி யமாக இளமையுடன் காணப்படும்.

=> ஊ. உலகநாதன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: