Advertisements

“நேரில் சென்று உறுதி செய்யாமல் உதவிக்கரம் நீட்டாதீர்கள்.!”- எச்ச‍ரிக்கும் ‘தி இந்து நாளிதழ்’

“நேரில் சென்று உறுதி செய்யாமல் உதவிக்கரம் நீட்டாதீர்கள்.!”- எச்ச‍ரிக்கும் ‘தி இந்து நாளிதழ்’

“நேரில் சென்று உறுதி செய்யாமல் உதவிக்கரம் நீட்டாதீர்கள்.!”- எச்ச‍ரிக்கும் ‘தி இந்து நாளிதழ்’

 ஏலச்சீட்டு, பண இரட்டிப்பு, இரிடியம் சொம்பு, மண்ணுளிப் பாம்பு போன்ற மோசடி வகையறாக்கள் எல்லாம் பழைய

பாணி. தகவல்தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கேற்ப மோசடிபேர் வழிகளு ம் தங்களை தகவமைத்துக் கொண்டார்கள். இதோ கணினி யுகத்தில் நடக் கும் சில மோசடிகள் உங்கள் பார்வைக்கு. இவை நாளை உங்களை நோக் கியும் ஏவப் படலாம். உஷார் மக்களே.. உஷார்..
* பிரபல நிறுவனத்தின் குளிர் சாதனப்பெட்டி வாங்குகிறீர்கள். அடுத்த சில நாட்களில் அந்நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு பிரிவிலிருந்து வருவ துபோல குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல்வரும். அதில் நீங்கள் வாங்கி ய பொருளுக்கு ரூ.10 லட்சம் பரிசு விழுந்திருப்பதாக குறிப்பிட்டு உங்கள் வங்கிக் கணக்கு எண், வங்கி அட்டையின் சிவிவி. எண் உள்ளிட்ட விவர ங்களை கேட்பார்கள். அடுத்தடுத்த மின்னஞ்சல் தொடர்புகளில் அவர்கள் மீதான நம்பிக்கையைவலுப்படுத்தி வங்கிக்கணக்கின் பாஸ்வேர்டு வரை வாங்கிவிடுவார்கள். பிறகென்ன மொத்தமாக உங்கள் பணம் மாயம்.
* சமீபத்தில் தொடர்பு கொண்ட குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து வரும் மின்னஞ்சலில் ‘உங்களுக்கு ரூ.15,000 மதிப்புள்ள பரிசு விழுந்திருக்கிறது . நாளை எங்கள்பணியாளர் உங்கள் வீட்டில் அதனை டெலிவரிசெய்வார்’ என்று தகவல் வரும். அதேபோல மறுநாள் அழகாக பேக்கிங் செய்யப்ப ட்ட பெட்டியோடு வரும் டெலிவரி நபர், பேக்கிங் சார்ஜ் மற்றும் தபால் சே வை கட்டணம் என்று ரூ.500 வசூலிப்பார். இன்னும் சிலர் உங்கள் வங்கிக் கணக்கு எண், பாஸ்வேர்டு போன்றவற்றை கேட்பார்கள். கொடுத்தால் அ வர்கள் கொடுத்த காலிப் பெட்டியைப் போலவே மொத்தப் பணமும் காலி.
*கொங்கு மண்டல பகுதிகளில் பெரிய மாடி வீடாக குறிவைப்பார்கள். பிர பல அலைபேசி நிறுவனத்திலிருந்து பேசுவதுபோல அந்தவீட்டின் உரிமை யாளரிடம் வீட்டு மாடியில் அலைபேசி டவர் வைக்க விரும்புவதாகவும் மாத வாடகையாக பெரும்தொகை தருவதாகவும் பத்திரத்தில் எழுதி ஒப் பந்தம் போடுவார்கள். பத்திரப்பதிவு அலுவலகம் வரை உங்களை அழை த்துச் செல்வார்கள். கடைசிநேரத்தில் எங்கள் மேலதிகாரி பத்திரத்தில் கையெழுத்துப்போட ரூ.1லட்சம் லஞ்சம்கேட்கிறார். கொடுத்துத்தொலை யுங்கள். நாளையே உங்கள் வங்கிக்கணக்கில் ஐந்து லட்சம் வாடகை வர ப்போகிறதுதானே என்பர். கொடுத்தால் முடிந்தது, நொடியில் ‘எஸ்கேப்’.
*தென்மாவட்டங்களில் காற்றாலை அமைப்பதில் பங்குதாரராக சேருங்க ள்; லாபத்தில் பங்குகிடைக்கும் என்று அழைப்பு வரும். ரூ.1000தொடங்கி 10,000 வரை இவர்களின் இலக்கு. பணம் சேர்ந்ததும் காற்றுபோல கண் ணுக்கு தெரியமாட்டார்கள்.
*ஷாப்பிங் செய்வதற்காக பெரிய மால்களின் படியேறினால் மொபைல் எண்ணை வாங்கிக் கொண்டு கூப்பன்களை கையில் திணிப்பார்கள். அடுத்த நாளே குடும்பத்துடன் இலவச உல்லாச சுற்றுலாவுக்கோ அல்லது சொகுசு தங்கும் விடுதிக்கோ அழைப்பார்கள். குடும்பத்துடன் அங்கு சென் றவுடன் உணவுக்கு, தங்கும் அறைக்கு, பராமரிப்புக்கு என கணிசமான தொகையை கறந்து விடுவார்கள்.
* ரயில்களில் பேருந்துகளில் பகுதிநேரவேலை; வீட்டிலிருந்தபடி சம்பாதி க்கலாம் என்று அலைபேசி எண்களுடன் போஸ்டர் ஒட்டியிருப்பார்கள். இது பெரும்பாலும் டேட்டா என்ட்ரி பணிதான். பி.டி.எஃப். பைலை வேர்டு’ பைலாக மாற்றி செம்மைப்படுத்தித் தரவேண்டும். நீங்கள் வேலையை முடித்து கொடுத்தப் பின்பு வேலையில் திருப்தியில்லை என்றுச் சொல்லி ரிஜெக்ட் செய்துவிடுவார்கள் அல்லது தலைமறைவாகிவிடுவார்கள். இது உங்கள் உழைப்பில் குளிர் காயும் மோசடி.
*அடுத்ததாக உங்கள் உணர்வை குறி வைத்து ஏவப்படும் சென்டிமென்ட் மோசடிகளும் இருக்கின்றன. முகநூலில் அறிமுகமாகும் அழகான இளம் பெண் சில நாட்கள் பழக்கத்துக்குபின்பு தனக்கு பெற்றோர் இல்லை என் றும் தாய்மாமன் தன்னை வீட்டுச்சிறையில் வைத்திருக்கிறார் என்றும் அலறுவார். பெரும்பாலும் இவர்கள் டெல்லி, மும்பை, கொல்கத்தா போ ன்ற தொலைதூர நகரங்களில்தான் இருப்பார்கள். ஒருநாள் வாழ்ந்தாலு ம் உங்களோடுதான் வாழ்க்கை என்கிற ரீதியில் நீளும் உணர்ச்சி மிகுந்த வசனங்களில் எதிராளி விழுந்துவிட்டது தெரிந்தால் அவரது வசதியைப் பொறுத்து விமான டிக்கெட்டுக்கான பணம் முதல் சொத்தை மீட்பதற்காக ரூ.10 லட்சம் வரை பணத்தை கறந்துவிடுவார்கள்.
* மேற்கண்டதில் இன்னொரு வகை ஆதரவற்றோர் இல்லங்கள். உங்கள் சம்பளத்தில் மாதம் ரூ.1,000 கொடுத்தால் போதும் என்று ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களின் பரிதாபமான நிலையை விவரிக்கும் புகைப் படங்கள், இல்லத்தின் விவரங்கள் ஆகிய வற்றை அனுப்பி வைப்பார்கள். இது தொடர்பான மின்னஞ்சல்கள் பெரும்பாலும் அண்டைமாநிலங்களில் இருந்துதான் வரும். நேரில்சென்று உறுதிசெய்யாமல் உதவிக்கரம் நீட்டா தீர்கள்.

=> டி.எல்.சஞ்சீவிகுமார்

13501756_1747094628872296_383730368810149161_n

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: