Advertisements

கழுத்து வலி குறித்து மருத்துவர் தந்த அதிர்ச்சித் தகவல்- மக்க‍ளே உஷார்

கழுத்து வலி குறித்து மருத்துவர் தந்த அதிர்ச்சித் தகவல்! – மக்க‍ளே உஷார்!…

கழுத்து வலி குறித்து மருத்துவர் தந்த அதிர்ச்சித் தகவல்! – மக்க‍ளே உஷார்!…

நமது உடலின் பெரும்பாலான தசைகளுக்கு செல்லும் நரம்புகளை கட்டுப் படுத்துவது கழுத்துப்பகுதியாகும். இதயத்திலிருந்து

மூளைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்கள், மூளையிலிருந்து கிடைக்கும் கட்ட ளைகளை செயல்படுத்த உதவும் நரம்புகள், தசைகள், தசைநார்கள் ஆகியன செயல்படவும், நுரையீரலுக்கும் மூக்கிற்கும் இடையே சுவாசத் தை கடத்தும் மூச்சுப்பாதை ஆகியன இணைந்த கழுத்துப்பகுதியில் நமது அன்றாட பணியினால் பல்வேறு பாதிப்புகள் உண்டாகின்றன.

கழுத்துப்பகுதியில் ஸ்டெர்னோகிளிடோமாஸ்டாய்டு , ட்ரபிசியஸ் போன்ற முக்கியமான தசைகள் இருக்கி ன்றன. மயோகுளோபின் என்னும் புரதம் ஆக்சிஜனை தசைப்பகுதிகளில் பரிமாற்றம் செய்து, மயோசின், ஆக்டின் என்ற புரதங்களை தசைநார்களாக இணைத் து, நரம்புகளின் தூண்டுதலால் ஏ.டி.பி. என்னும் ஆற்ற லை உற்பத்திசெய்து, சுருங்கச்செய்கின்றன. இவை அசிடைல்கோலைன் என்னும் வேதிப்பொருளுடன் இணைந்து, கழுத்தை அசைக்க, திருப்ப, குனிய, நிமிர உதவுகின்றன. இதனால் கழுத்து தசைப்பகுதி கள் சுருங்கி, விரிந்து அசைவை எளிதாக்குகின்றன.

நீண்டநேரம் ஒரேஇடத்தில் அமர்ந்து குனிந்து பணிபுரிவதும் , வாகனப் பிரயாணம் செய்வதாலும், கடுஞ்சுமையை தலை யில் தூக்கிவைப்பதாலும், தசைப்பகுதிகளில் மயோகுளோ பின் செயல்பாடு குறைந்து ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட் டு, தசைகள் போதுமான அளவு சுருங்கி, விரியாமல் திணற ஆரம்பிக்கின் றன.

கழுத்துதசைகளின் இறுக்கம் மற்றும் பலஹீனத்தால் முதுகு மற்றும் மார்பு பகுதிகளிலுள்ள ட்ரபிசியஸ், லாட்டிஸ்மஸ்டார்சி, பெக்டோரோலிஸ்மேஜர், கொரக்கோபிராக்கியாலிஸ் போன்ற தசைகளும், தா டைப்பகுதியும் இறுக்கமடைந்து, தாடையின் கீழ்பகுதி, காதின்பின்புறம், தலை உச்சந்தலை, பிடறி, கழுத்தின்பின்புறம், தோள்பட்டையின் மேற்பகுதிகள், மேல் மார்பு, விலா எலும்பின் இடைப்பகுதிகள், முதுகின் மைய ப்பகுதி மற்றும் ஆங்காங்கே சிறுசிறு தசைப் பகுதி களில் இறுக்கமும், குத்தல்போன்ற வலியும் ஏற்பட் டு, அன்றாட பணிகளை கவனத்துடன் செய்ய இயலாமல் கவலைகளை ஏற்படுத்துகின்றன.

கழுத்துவலி உள்ளவர்களுக்கு கடுமையான மனஉளைச்சல் ஏற்படுகிறது. மார்பு மற்றும் இடதுகையில் வலியை உணரும்பொழுதெல் லாம் காது மற்றும் தலையில் வலி அதிகமாகி, தேவையற்ற எரிச்சல், கோபம் உண்டாகிறது. அத்துடன் மாறி, மாறி வலி ஏற்படுவதால் மனநோயாளிகள்போல் ஒருவித நிம்மதியிழந்து காணப்படுவர். கழுத்து வலியினால் ரோபோ போல் வித்தியாசமாக நடைபயில ஆரம்பிப்பார். தசைவலி தீவி ரமடைவதால் கழுத்திலிருந்து செல்லும் தண்டுவட நரம் புகளும் பாதிக்கப்பட்டு, தண்டுவட எலும் புகள் பிதுங்கி, நரம்புகள் அழுத்தப்பட்டு கை, கால்களில் மதமதப்பு ஆகி யன உண் டாகிறது.

கழுத்து வலி உள்ளவர்கள் கழுத்துக்கான சிறப்பு தசை பயி ற்சிகளை செய்வதுடன், தொழில் சார்ந்த மருத்துவ ஆலோ சனைகளை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும் . கடுமையான தசை வலியை நீக்கி, தசை மற்றும் நரம்புக ளுக்கு பலத்தை தரும் அற்புத மூலிகை மனோரஞ்சிதம். ஆர்ட்டபாட்ரிஸ் ஹெக்சாபெட்டலஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட அனோனேசியே குடும்பத்தைச் சார்ந்த தோட்டங்களில் வளரும் மனோரஞ்சித செடிகளின் வேர் மற்றும் பூக்களிலுள்ள கிளைக்கோசை டுகள் தசை இறுக்கத்தை குறைத்து, ரத்தக்குழாய்களை விரியச்செய்து, நரம்புகளை வலுப்படுத்தி, வலியை குறைக்கின்றன.

மனோரஞ்சித வேரை நிழலில் உலர்த்தி, பொடித்து, 1 முதல் 2கி. தினமும் இரண்டு வேளை தேனுடன் குழப்பி சாப்பிட தண்டுவடவலி நீங்கும். பூக்களை ஒரு கைப் பிடியளவு எடுத்து 500 மிலி நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி வலியுள்ள இடங்களை இளஞ்சூட்டி ல் கழுவிவர வலி நன்கு குறையும்.

-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: