Advertisements

அலுவலகத்தில் மன அழுத்தம் ஏற்பட்டால் . . .

அலுவலகத்தில் மன அழுத்தம் ஏற்பட்டால் . . .

அலுவலகத்தில் மன அழுத்தம் ஏற்பட்டால் . . .

இந்த உலகில் வாழ்வில் வெற்றி பெற, நிறைந்திருக்கும் போட்டிகளையும் சவால்களையும்

எப்படியாவது சந்தித்து முன்னேற வேண்டும் என்று இய ங்குகின்ற இன்றைய இளைஞர்களுக்கு 24 மணி நேரம் போதவில்லை. படிப்பு முடிந்த கையோடு சம்பாதிக்க வேண்டும் என்று சகல வழிகளையும் தேர்ந்தெடுத்து களத்தில் இறங்கும் நமக்கு சம்பாதிக்கத் தொடங்கி விட்டால் மட்டும் நிம்மதி தங்கி விடுகிறதா என்ன?

அங்குதான் ஆரம்பிக்கிறது அடுத்தக் கட்டப்பிரச்சினைகள். அலுவலக வேலைணூ; சூழலில்  தங்களது வாழ்க்கையை சிக்க வைத்துக்கொண்டு அவதிப்படுபவர்கள்அதிகம். காரண ம் அதிக வேலைதரும் பதற்றம், விளைவு ஒவ்வொரு முறையும் தன் மேலதிகாரி கூப்பிடும்போது நகத்தைக் கடித்துக் கொண்டு மன அழுத்தத்துக்கு ஆளாக நேரிடுகி றது.

கஷ்டமான அலுவலக வேலைகளையும் எளிதாக சந்தோஷமாக மாற்றிக் கொள்ளும் வித்தை உள்ளன.

மன அழுத்தம் என்பது வாழ்வின் அன்றாடம் நடக்கக் கூடிய ஒரு விடயம். மன அழுத்தம் வந்தாலும் மூளை தன்னைத் தயார்படுத்திக் கொண்டு எதையும் எதிர் கொள்ளத் தயாராகிவிடும்.

குறிப்பிட்டநேரத்துக்குள் வேலையை செய்து முடிக்கமுடியாத நிலையில் தான் ஒருவருக்கு மனஅழுத்தம் அதிகரிக்கிறது. இதை தவிர்க்க நேரநிர்வாகம் மிகமுக்கியம். ஒரு குறிப்பிட்ட வேலையை செய்வதற்குமுன் அதை எப்போது எப்படி முடிக்கப்போகிறோம் என திட்டமிடுங்கள். எதை முத லில் செய்ய வேண்டும். எதற்கு முக்கியத்துவம் கொடு க்க வேண்டும் என்பதை முடிவுசெய்து பணியை தொடங்குங்கள். பதற்றம் நெருங்கவே நெருங்காது.

மன அழுத்தம் ஏற்பட்டால் முன்பு இதேபோன்ற சூழ் நிலையை எப்படி வெற்றிகரமாகக் கையாண்டோம் என்பதை எண்ணிப்பாருங்கள். பயம், பதற்றம் வில கி தைரியம்பிறக்கும். அலுவலகத்துக்குச் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலோ வங்கியில் கூட்டம் அதிகமாக இரு ந்தாலோ பலருக்கு மன அழுத்தம் வரும். இதைமுன் கூட்டியே எதிர்பார்த்து அதற்கேற்ப முன் கூட்டியே கிளம் புவதன் மூலம் மன அழுத்தத்தைத் தவிர்க்கலலாம்.

மனஅழுத்தம் இருந்தால் அந்தவிடயத்தைத்தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். அதையே யோசித்து  விளைவுகளை எண்ணி இன்னும் மனஅழுத்தத்தை அதிகரித்துக்கொள்ள க்கூடாது. தீர்வை க்கண்டுபிடிப்பதன்மூலம் நம் குறிக்கோள்களை சென்று அடைவதற்கான வழி கிடைத்துவிடும்.

நாளைக்கு ஒப்படைக்க வேண்டும் என்பது மாதிரியான நெருக்கடி நேரங் களில் இரவில் வேலை செய்வது தவிர்க்க முடியாதது. அதற்காக தினமும் அலுவலக வேலையில் மட்டும் பழியாய் கிடப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. அலுவலக வேலைகளை வீட்டுக்குக் கொண்டு வருவதும் தவறு. இதனால் குடும்ப உறவில் பாதிப்பு ஏற்படலாம்.

நாம் இல்லாத  நேரத்தில் ஏதேனும் முக்கியமான விடயம் நடந்து அதை நாம் தவற விட்டுவிடுவோமோ என்ற பயத்திலேயே பலர் அலுவலகத்திலேயே ஆணி அடித்தாற்போல் இரு ப்பார்கள். இதுவும் தவறு. நீங்கள் இல்லை என்றாலும் உங்களின் பணி வேறு ஒருவரால் செய்யப்படும் என்ப தை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

“உன்னால் விழுங்க முடியாததைக் கடிக்காதே’ என்று ஒரு முதுமொழி உண்டு.

அதன்படி யார் எந்த உதவிகோரினாலும் கூடுதல் பணியை க் கொடுத்தாலும் அது நம்கடமையாக இல்லாதபோதும் மரி யாதை நிமித்தமாக செய்து தருவதாக ஒப்புக்கொண்டு முடி க்க முடியாமல் விழிபிதுங்கி நிற்காதீர்கள். அந்தவேலையை உரிய நேரத்தில் செய்ய இயலாது என நிச்சயமாகத் தெரிந் தால் மன்னிக்கவும் இதை நான் ஏற்பதற்கு இல்லை என்று சொல் லுங்கள்.

பணியில் இருக்கும்போது கூடுமானவரை அடிக்கடி தேநீர், கோப்பி குடிப் பது, அரட்டை அடிப்பது என்று அலுவலக நேரத்தை வீணாக்காதீர்கள். இவையெல்லாம் உங்களை இன்னு ம் பதற்றப் பேர்வழியாக மாற்றுவதோடு உங்கள் உடல் நலத்துக்கும் வேட்டு வைத்துவிடும்.

ஐம்புலன்களையும் எப்போதும் விழிப்புணர்வுடன், கூர்மையாகவும் உற் சாகமாகவும்  வைத்திருந்தால் ஒருவித த்ரில் தம்மில் ஊடுருவுவதை உணர முடியும். அந்த த்ரில்லே ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உற்சாக மன நிலைக்கு நம்மை மாற்றும்.

சகமனிதர்களுடன் அன்புடன்பழகுங்கள். இத னால் மனதில் கோபம், பகை, பொறாமை, விரோதம் போன்ற அனைத்து தீய குணங்களும் அடித்துச் செல்லப்படும். வேலையிலும் ஆர்வம் அதிகரிக்கும்.

எந்த வேலையையும் ஒரு விளையாட்டாக பொழுது போக்காக செய்யுங் கள். நம் எண்ண ஓட்டத்தைப் பொருத்துக் கடினமான வேலை கள்கூட எளிதாகமாறும். வேலைசெய்யும் சோர்வே இருக்காது

சிலர் இயல்பிலேயே சின்னவிடயத்துக்கும் அதிகமாகப் பதற்ற ப்படக் கூடி யவர்களாக இருப்பார்கள். இவர்கள் தினமும் தியா னம் மற்றும் யோகா பயிற்சிகள் செய்வதன்மூலம் பதற்றம் கு றைந்து எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலை பெறமுடியும்.

எதிலும் மீண்டும்வருவோம் என்று எவ்வளவுக்கு எவ்வ ளவு நம்பிக்கை யுடன் இருக்கிறோமோ அந்தளவுக்கு மன அழுத்தம் குறையும்.

சக அலுவலரின் சாதனையை முறியடிக்க வேண்டுமெ னப் போட்டியிடுவ து நல்ல விடயம்தான். இதற்கு ஒரே வழி நாம் நம் தகு தியை வளர்த்துக்கொள்வதுதான். தகுதி உள்ளவர்களைப்பார்த்து பொறா மைப்படுவதும் அவர்களை மட்டம் தட்டும் விதத்தி லும் செயல்படுவது உடல் மற்றும் மன நலன்களைப் பாதிக்கும்.

எக்காரணத்துக்காகவும் வேலையைத் தள்ளிப் போ டாதீர்கள். அந்தவேலையை பிடிக்கிறதோ இல்லை யோ கண்டிப்பாக முடித்துக்கொடுங்கள். ஐயோ.. இந்தவேலை செய்யவே எனக்கு பிடிக்கலை… என்று நினைத்தாலே மனதில் சோர்வு வந்து புகுந்து கொள்ளும்.

மனஅழுத்தத்தை குறைக்கிறேன் என்று புகை, குடி என்று பாதை மாறாதீர்கள். இதனால் நிலை தடுமாறுதல், தரம் தாழ்ந்து போதல், எல்லை மீறுதல், வரம்பு மீறுதல், கீழ்த்தர மாக நடந்து கொள்ளுதல் போன்றவை நிகழக்கூடும். வேலைக்கும் உலை வைக்கும்.

மாற்றங்கள் என்பது என்றும் மாறாது. அதற்கு நம்மை உட்படு த்திக் கொள் வதுதான் புத்திசாலித்தனம். நான் இப்படித்தான் இருப்பேன்… என்ற வறட்டுப் பிடிவாதம் முன்னேற்றப் பாதை க்கு முட்டுக் கட்டை போட்டுவிடும்.

குறுகிய வழிகளை யோசிக்கக்கூடாது. ஒருவர் அலுவ லகத்தில் உயரதிகாரியிடம் பாராட்டுப் பெறுகிறார் என் றால் நம்மால் வாங்க முடியவில்லையே என்று வருத்த ப்படலாம். ஆனால் வேறு ஒருவர் வாங்கிவிட்டார் அத னால் நம்மால் இனி வாங்கவே முடியாது என்கிற ரீதியி ல் யோசி க்கக்கூடாது. எதையும் நேர் மறையாக எடுத்துக் கொள்ளுங்கள்

=> சக்திவேல்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: