Advertisements

சின்ன வீடு கட்டுவதற்கான‌ விதிமுறைகள்

சின்ன வீடு கட்டுவதற்கான‌ விதிமுறைகள்

சின்ன வீடு கட்டுவதற்கான‌ விதிமுறைகள்

எத்த‍னை நாட்கள் இப்ப‍டியே இருப்ப‍து, தெருவில் பார்ப்ப‍வர்கள் எல்லாம் என்ன‍சார்

வாடக வீட்டிலேயே இருப்பீங்க• சொந்தமா ஒரு வீடு கட்டுங்க சார் என்று போகிறபோக்கில் சொல்லிச் செல்வார்கள். இதனால் சிறுக சிறுக பணம் சேர்த்து அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு ஃபிளாட் வாங்கு வோம்

புற்றீசல்கள்போல அடுக்குமாடி வீடுகள் என்னதான் பெருகினாலும், தனி வீட்டுக்கு இருக்கும் மதிப்பே தனிதான். சின்னதாக ஒருஇடம் வாங்கி, அதில் விருப்பப்படி வீடுகட்டிக்கொண்டு குடிபுகுவது அலாதியானதுதான். அதெல்லாம் சரிதான். நாம் வாங்கும் மனையை முழுவதுமாக பயன்படுத்தி வீடு கட்டுவதற்குமுன்பு கவனிக்கவேண்டிய விஷ யங்கள் இருக்கின்றன. உள்ளாட்சி அமைப்புகளில் பின்பற்றப்படும் விதிமுறைகளைப் பின்பற்றிதான் வீடு கட்ட வேண்டும்.

விதிமுறைகள்

பொதுவாக எவ்வளவு மனை அளவு வைத்திருக்கிறோ மோ அந்த அளவில் வீடுகட்ட விதிமுறைகள் அனுமதிப்ப தில்லை. 1,200சதுரடி (1/2கிரவுண்டு) மனை வாங்கினாலு ம், அதன் முழுவதும் வீடு கட்ட முடியாது.

நான்கு பக்கங்களிலும் இடம் விட்டு நடுவில்தான் வீடு கட்ட வேண்டும். அதுதான் விதி. எவ்வளவு இடம் விடவேண்டும் என்பதெல்லாம் இடத்துக் குத் தகுந்தாற்போல மாறுபடும். அதாவது மாநகராட்சி பகுதிகள் என்றால் ஒருவிதம், நகராட்சி என்றால் ஒருவிதம் என அதற்கு வரைமுறைகள்ள்ளன. மனையில் வீட்டின் பின்பக்கம் எவ்வளவு இடம் விட வேண்டும் என்றும் விதிமுறை இருக்கிறது. அது மனையின் அளவைப் பொறுத்தது. உதாரணத்துக்கு மனையின்நீளம் 50அடி அல்லது அதற்கும் குறைவாவோ இருந்தால், பின்பக்கம் 5 அடி விடவேண்டும். 50-100 அடி என்றால் 10 அடியும், 100-150 அடி என்றால் 15 அடியும் விட வேண்டும்.

அதேமாதிரி வீட்டுக்கு இருபுறங்களிலும் 5 அடி விட வேண்டும். எதற்காக இப்படி இடம் விடசொல்கிறார் கள் என்று உங்களுக்குக்கேள்வி எழலாம். வண்டி நிறுத்துவதற்காகவும், காற்றோட்டமாக இருப்பதற்காகவும், மரம் செடி வளர்க்கவேண்டும் என்ப தற்காகவும் இப்படி இடம் விட சொ ல்கிறார்கள். மொத்தப் பரப்பளவில் 50% மட்டுமே கட்டிடம் கட்ட வேண்டும் என்று விதிமுறைகள் சொல்கின்றன. 2,400 (60×40)சதுரடி மனையில் 1,350(45×30) சதுரடி பரப்பளவில் வீடுகட்டலாம் என்கின்றன உள்ளாட்சி விதிமுறைகள். மேற் கூறிய இக்கணக்கு தரைத் தளத்தில் கட்டப்படும் கட்டிடத்துக்கு மட்டுமே பொருந்தும்.

மாடியில் வீடு கட்ட வேண்டும் என்றால், அதற்கு இன் னொரு விதிமுறை இருக்கிறது. அதை எஃப்.எஸ்.ஐ. (ஃப்ளோர் ஸ்பேஸ் இண்டெக்ஸ்) என்று சொல்வர்ள். இந்த விதிமுறையின்படிதான் மாடியில் கட்டிடத்தை எழுப்ப வேண்டும்.

பிளான் முக்கியம்

நம் சொந்தமனையில் வீடுகட்டுவதற்கு இத்தனை விதிமுறைகளா என்று மலைக்க வேண்டாம். இதோடு இப்பணி முடிந்துவிடுவதில்லை. எவ்வ ளவு மனை அளவில் வீடு கட்டுகிறோம் என்பதை முடிவு செய்தபிறகு, அதை பிளானாக மாற்றி சம் பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் அனுமதி பெற வேண்டும். அது தான் முக்கியம்.

அதற்குமுன்பாக வீடுகட்டும் பிளானுக்கு அங்கீகாரம் பெறவேண்டும். இந் த அங்கீகாரம்பெற அரசு அங்கீகாரம்பெற்ற பொறியா ளரிடம் அந்த பிளானை காட்டி கையொப்பம் பெற வே ண்டும். பின்னர் அதை 3 நகல்கள் எடுத்து விண்ண ப்பத்தோடு இணைத்து உள்ளாட்சி அமைப்பில் சமர்ப் பிக்க வேண்டும். பிளானில் மழைநீர் சேமிப்புக்கான வசதி இருக்கிறதா என்று அதிகாரிகள் பார்ப்பார்கள். மழைநீர் பிளானும் இருந்தால்தான் வீடு கட்ட அனுமதி கிடைக்கும் என்ப தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த அனுமதிகிடைக்க குறைந்தபட்சம் ஒருமாதமாவது ஆகும். அனுமதி வந்தபிறகே கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும். அதற்கு முன்பாகத் தொடங்கக்கூடாது. பிளானில் எப்படிஉள்ளதோ அதுபோலவே வீடுகட்டுவது நல்லது. பிளானுக்கு மாறா க வீடுகட்டினால் அதிகாரிகள் ஆய்வுசெய்யும்போது பிரச்சனைகள் ஏற்படலாம். அப்படி இல்லையென்றா ல், பல காலத்துக்குப்பிறகு வீட்டை விற்கும்போதோ அல்லது மாடி வீடு கட்டுவதற்கு வங்கியில் கடன் கேட்கும்போதோ பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே பிளானில் உள்ளதுபடி வீடுகட்டுங்கள்.

=> இந்து

வீடு கட்டவிருக்கும் உங்களுக்கு இப்போதே வாழ்த்துக்களை சொல்லி விட்டேன்

வாழ்த்துக்கள்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: