Advertisements

அடிக்கடி பாப்கார்ன் சாப்பிட்டால்…!-(தித்திக்கும் பாப்கார்ன் உங்களை திகைக்கவைக்கும் பாப்கார்ன்)

அடிக்கடி பாப்கார்ன் சாப்பிட்டால்…!- (தித்திக்கும் பாப்கார்ன் உங்களை திகைக்கவைக்கும் பாப்கார்ன்)

அடிக்கடி பாப்கார்ன் சாப்பிட்டால்…!- (தித்திக்கும் பாப்கார்ன் உங்களை திகைக்கவைக்கும் பாப்கார்ன்)

மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர் ஆகட்டும்…மெகா ஷாப்பிங் மால்கள் ஆகட்டு ம்… நிரம்பி வழிகிற

பெரிய்ய்ய்ய்ய்ய பாப்கார்ன் பாக்கெட்டுடன் வலம் வருவது குட்டீஸ், இளைஞர்கள், பெரி யவர்கள் என எல்லாருக்கும் இன்று ஒரு ஃபே ஷன். பாக்கெட் ரூ.100என்றாலும் வாங்கத் தயங்குவதில்லை. அதன் மணமும் சுவையு ம் ஒரு காரணம் என்றால், ‘சோளப்பொரிதா னே… உடம்புக்கு ரொம்ப நல்லது’ என்கிற நினைப்பு இன்னொரு காரணம். ‘நினைப்புதான் பொழப்பைக்கெடுக்குது’ என்பது போல இதன்பின்னே நிறைய பிரச்னைகள்!

சோளம் உடலுக்கு நல்லதுதான். நார்ச்சத்து நிறைந்த து தான். கலோரி குறைவான, ஆரோக்கியமான தீனி தான்…  சந்தேகமே இல்லை. ஒரு கப் பாப்கார்னில் இருப்பது வெறும் முப்பதே கலோரிகள்…

வைட்டமின் பி1, பி5, சி, பாஸ்பரஸ், மாங்கனீசு என போனஸாக ஏகப்ப ட்ட சத்துகள்! இதெல்லாம் இயற்கையானமுறையில் சோளத்தை பொரித் து சாப்பிடுகிற வரையில் மட்டுமே! கடைகளிலும் தியேட்டர்களிலும் மிஷின் வைத்து பொரித்து க்கொடுக்கிற பாப் கார்ன், வீட்டிலேயே உடனடியாக தயாரிக்கக் கூடிய இன்ஸ்டன்ட் பாப்கார்ன், மைக்ரோ வேவ் பாப் கார்ன்போன்ற எல்லாம் இதற்கு விதிவிலக்கு

100 கிராம் அளவுள்ள இன்ஸ்டன்ட் பாப்கார்ன் பாக்கெட்டை பொரித்தால் கிடைப்பது, 510 கலோரிகள்… 55 கிராம் கார்போஹைட்ரோட், 58 கிராம் கொழுப்பு அமில ங்கள், 10 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் புரதச்சத்து… அவ்வளவு தான்!

சோளத்தைப் பொறுத்தவரை கடலை வறுக்கிற மாதிரி அப் படியே பொரித்தால், மணமோ, சுவையோ இருப்பதில்லை.  அதனால்தான் எண்ணெய், வெண்ணெய், மசாலா சேர்த்துப் பொரித்து விற்பனை செய்கிற கடை அயிட்டங்களுக்கும், இன்ஸ்டன்ட் பாக்கெட்களுக்கும் அத்தனை மவுசு.

இவற்றில் கொழுப்பும்கலோரியும் அதிகம்என்கிறபோதே , பாப்கார்ன் ஆரோக்ய உணவு என்கிற கருத்து உடைபட்டுப் போகிறது. இன்ஸ்டன்ட் பாப்கார்ன் பாக்கெட்க ளை தவிர்க்கச் சொல்கிற அறிவுரைகள் ஒரு பக்கம் தொடர, மைக்ரோவேவ் பாப்கார்ன் பாக்கெட்கள் இன்னும் ஆபத்தானவை என பீதி யைக் கிளப்புகின்றன லேட்டஸ்ட் ஆராய்ச்சிக ள்.

இன்ஸ்டன்ட் பாப்கார்னிலேயே மைக்ரோவேவில் செய்யவென பிரத்யேக பாக்கெட்கள் கிடைக்கின்றன.  தட்டையாகக் காட்சியளிக்கிற அந்த பாக்கெட்டை அப்படியே மைக்ரோவேவில் வைத்தால், சில நொடிகளில் உள்ளே உள்ள சோளப்பொரிகள் பொரிந்து, பாக் கெட் பூரித்து உப்பிப்பெரிதாகும்.

பாப்கார்ன் பொரிகிறபோது அதிலிருந்து கிளம்புகிற வெண்ணெய் வாசம், யாரையும் மயங்க வைக்கும். அந்த மயக்கத்துக்குக் காரணமான ‘டை அசிட்டைல்’ ரசாயனம்தான் பாப்கார்ன் பாக்கெட்களி ல் ஒளிந்திருக்கிற எமன் என்பது பலருக்கும் தெரியா து!

‘‘மைக்ரோவேவ் பாப்கார்ன் பாக்கெட்டில் மட்டுமில் லாம, குளிர்பானங்கள் உள்ளிட்ட நிறைய உணவுப் பொருட்கள்ல ‘டைஅசிட்டைல்’ சேர்க்கப்படுது. இது மஞ்சள் நிறத்துல பவுடராகவோ, திரவ வடிவத்துலயோ இ ருக்கும். மார்ஜரின் மற்றும் எண் ணெய் உணவுத் தயாரிப்பாளர்கள், இதை உப யோகப்படுத்தி, சம்பந்தப்பட்ட உணவுக்கு செய ற்கையான வெண்ணெய் மணத் தையும் சுவையையும் கொண்டு வர்றாங்க.

அதை சேர்க்காத பட்சத்துல, அந்த உணவுகள் ருசிக்கிறதில்லை. மேல சொன்ன செயற்கை வெண்ணெய்ருசிக்கான பொருளைத்தயாரிக்கிற தொழிற்சாலைகள்லயும், மைக்ரோவேவ் பாப் கார்ன் தயாரிப்பு தொழிற்சாலைகள்லயும் வேலை பார்க்கிறவங்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படறது நிரூபணமாயிருக்கு.

மைக்ரோவேவ் பாப்கார்னை அடிக்கடி சாப்பிடறவ ங்களும்இதுக்கு விதிவிலக்கில்லை. டைஅசிட்டை லை தொடர்ந்து சுவாசிக்கிறதோட விளைவுதான் இது’’ என அதிர வைக் கிறார் ஆராய்ச்சியாளர் ராதாகிருஷ்ணன். டை அசி ட்டைல் கலக்கப்பட்டுள்ள தின்பண்டங்களை, குறிப் பாக சூடுபடுத்தி உண்ணக் கூடியவற்றைத் தவிர்ப்ப தே பொதுமக்களுக்கான ஆரோக்கிய அறிவுரை என்கிறார் இவர்.

‘சுவையும்மணமும்குறைவாஇருந்தாலும் வீட்ல சாதாரண முறையில் தயாரிக்கக்கூடிய பாப்கார்னே பாதுகாப்பானது. மெகாசைஸ் பாக்கெட்ல விற்பனையாகிற பாப்கார்ன் பாக்கெட்டுகளோ ட ‘கமகம’ வாசனை வேற ஒண்ணுமில்லை. பிரச்சனையை ‘வாவா’ன்னு கூப்பிடறடை அசி ட்டைலேதான்’’ என எச்சரிக்கிறார் அவர் .

படித்தவுடன் இனிமேல் வெளியே பாப்கார்ன் வாங்கி சாப்பிடவே கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டேன், நீங்க?

=> புதுவை ராஜேஸ்வரி

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: